விக்கிப்பீடியா:ஊடக உதவி

(விக்கிப்பீடியா:பல்லூடக உதவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சில விக்கிபீடியா கட்டுரைகள் கேட்பொலி அல்லது காணொளி கோப்புக்களை தம்மகத்தே கொண்டிருக்கலாம். இவ்வாறு கோப்புக்களை இணைப்பது கட்டுரையை மேலும் விள்க்கம் மிக்கதாகவும் செழுமையுடையதகாவவும் ஆக்குகிறது.

இப்பக்கம், இவ்வாறு இணைக்கப்படும் கோப்புக்களை உங்கள் கணினியில் இயக்கிப்பார்ப்பதற்கான உதவிகளை வழங்குகிறது.

விக்கிபீடியாவில் இணைக்கப்பட்டுள்ள இவ்வாறான கோப்புக்களை அநேகமாக எல்லா கணினிகளிலும் இயக்கமுடியும். ஆனால் அவற்றை இயக்குவதற்கான சரியான மென்பொருட்கள் உங்கள் கணினிகளில் நிறுவப்பட்டிருக்கவேண்டும். கோப்புக்களை சொடுக்கியவுடன் உங்களால் கேட்பொலி மற்றும் காணொளி கோப்புக்களை இயக்க்கி கேட்கவோ பார்க்கவோ முடியவில்லையாயின், இவ்வசதியை பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் இலவசமாக கிடைக்கக்கூடிய கட்டற்ற மென்பொருட்களை இணையத்திலிருந்து தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொண்டால் போதுமானது.

கேட்பொலிக்கோப்புக்கள் பொதுவாக Ogg Vorbis வடிவத்திலும் காணொளிக்கோப்புக்கள் பெரும்பாலும் Ogg Theora வடிவத்திலும் இருக்கும். இவை மற்றைய எண்முறை காணொளி, கேட்பொலி கோப்பு வடிவங்களான mp3, MPEG போன்றவைதான் ஆனால் விக்கிபீடியா பயன்படுத்துபவை திறந்த, கட்டற்ற, பொதுமக்களுக்கு சொந்தமான வடிவங்களாகும்.

இசைக்கோப்புக்கள் பெரும்பாலும் MIDI வடிவத்தில் இருக்கும். இவ்வடிவம் எல்லா கணினிகளிலும் MIDI பயன்படுத்தத்தக்க ஒலி இயக்கிகளில் இசைக்கப்படமுடியும்.

காணொளி, கேட்பொலி மென்பொருட்களை நிறுவுதல்

தொகு

Ogg Vorbis, Ogg Theora ஆகிய இரு வடிவங்களையும் இயக்கக்கூடிய மென்பொருட்களையே விக்கிபீடியா வலுவாக பரிந்துரைக்கிறது. காணொளி மற்றும் கேட்பொலிக்கோப்புக்கள் இரு வேறு வடிவங்களாயினும் அவை ogg என்ற பின்னொட்டுடன் ஒரே container வடிவத்தில் வருவதால் குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்க்க இது உதவும்.


குனூ/லினக்ஸ் (யுனிக்ஸ் குடும்ப இயங்குதளங்கள், பீ எஸ் டீ, சொலாரிஸ் போன்றவற்றுக்கும் பொருந்தலாம்)

தொகு

தற்போது புதிதாக வெளிவரும் எல்லா குனூ/லினக்ஸ் வழங்கல்களும் Ogg வகை கோப்புக்களை இயக்கக்கூடிய மென்பொருட்களுடன் பொதிசெய்யப்பட்டே வெளிவருகின்றன. சில வேளைகளில் நீங்கள் நிறுவலின்போது இதற்கான மென்பொருட்களை தெரிவுசெய்யாது விட்டிருக்கலாம். அவ்வாறெனில், பின்வரும் மென்பொருட்களில் ஒன்றினை உங்கள் பொதி முகாமைத்துவ மென்பொருளை பயன்படுத்தி நிறுவிக்கொள்ளவும். வேண்டுமானால், இம்மென்பொருட்களின் வலைத்தளத்திலிருந்து மூலநிரல்களையோ, இருமக்கோப்புக்களையோ தரவிறக்கியும் நிறுவிக்கொள்ளலாம்.


உலாவியில் இருந்தவாறே கோப்புகளை கேட்பதற்கு Mplayer-mozilla plugin பயனுள்ளது.

மென்பொருட்களை நிறுவிய பின்னும் கோப்புக்களை இயக்க முடியவில்லையாயின், பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

  • libtheora வானது காணொளிக்கோப்புக்களை இயக்க இன்றியமையாதது
  • GStreamer இனை அடிப்படையாகக்கொண்ட மென்பொருட்களான Totem போன்றவற்றில் இவ்வகைக்கோப்புக்களை இயக்க Theora GStreamer plugin தேவைப்படும்.

வின்டோஸ் பயனர்கள்

தொகு

வின்டோஸ் பயனர்கள் ogg வடிவ கோப்புக்களை கேட்பதில் பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். பின்வரும் திறந்த மூல மென்பொருட்களுள் ஒன்றை நிறுவிக்கொள்வதன்மூலம் இவ்வசதியை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இலவசமாக தரவிறக்கக் கிடைக்கும் Winamp மென்பொருள் ogg கோப்புக்களை இசைக்க வல்லது.

ஏனைய மென்பொருட்கள்

தொகு

ogg கோப்பினை இயக்கவல்ல ஏனைய மென்பொருட்களை இயங்குதளம் வாரியாக தெரிந்துகொள்ள பின்வரும் வலைத்தளம் உதவும்.

http://vorbis.com/software/

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிப்பீடியா:ஊடக_உதவி&oldid=3839007" இலிருந்து மீள்விக்கப்பட்டது