விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 3, 2020

வைரசு அல்லது தீநுண்மி என்பது தான் ஒட்டியுள்ள உயிரியின் செல்களுக்குள் பல்கிப் பெருகும் ஒரு தொற்றும் தன்மையுள்ள நோய்க்காரணியாகும். தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் இந்த வைரசு தான் ஒட்டியுள்ள உயிரின் செல்களின் தன்மையை மாற்றி தன்னைப் போன்ற ஆயிரக்கணக்கான படிகளை உருவாக்கச் செய்கிறது. வைரசுகளுக்கும் மற்ற பெரும்பாலான உயிர்களுக்கும் உள்ள பெரும் வேறுபாடு என்னவெனில் வைரசுகளில் பிரிந்து பெருகும் செல்கள் இல்லை. மாறாக இவை தான் ஒட்டியுள்ள உயிரின் செல்களுக்குள் சென்று இணைகின்றன. மேலும்...


இராகினி மாநிலம் என்பது மியன்மரின் (பர்மா) ஒரு மாநிலமாகும். மியான்மரின் மேற்கு கடற்கரையில் அமைந்திருக்கும் இதன் வடக்கில் சின் மாநிலம், கிழக்கே மாகுவே மண்டலம், பாகோ பிராந்தியம் மற்றும் அயெயர்வாடி பகுதி, மேற்கில் வங்காள விரிகுடா மற்றும் வடகிழக்கு வங்காளத்தின் சிட்டகாங் கோட்டம் ஆகியவற்றை எல்லைகளாக கொண்டுள்ளது. இது தோராயமாக வடக்கில் 17°30' மற்றும் 21°30' க்கு இடையிலும், கிழக்கில் 92°10' மற்றும் 94°50' இடைப்பட்ட நீளத்தில் அமைந்துள்ளது. மத்திய பர்மாவில் இருந்து இராகினி மாநிலத்தை தனிமைப்படுத்துவதாக அரக்கான் மலைகள் உள்ளன. மேலும்...