விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சென்னை/முதற்பக்கத்தில் காட்டப்பட்ட சிறப்புப் படங்கள்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடர்வண்டி (ரயில்) நிலையங்களில் ஒன்றாகும். இது சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் இந்தியாவின் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பரவலாக அறியப்பட்ட கட்டிடங்களுள் ஒன்றாக திகழ்கின்றது.


1996ஆம் ஆண்டு புதிய ஃபோர்ட் இந்தியா பி.லிமிடெட்டின் உற்பத்தி துவங்கினாலும் இதன் ஆரம்பம் 1907ஆம் ஆண்டு போர்ட் மாடல் ஏ உடன் தொடங்கியது. தற்போதைய தொழிற்சாலை சென்னையை அடுத்த மறைமலை நகரில் உள்ளது. 1926ஆம் ஆண்டு தொடங்கிய முயற்சி 1954ஆம் ஆண்டு மூடப்பட்டது. மீண்டும் மகிந்தரா நிறுவனத்துடன் 50-50 இணைந்த முயற்சியாக மகிந்தரா போர்ட் இந்தியா லிமிடெட் (MFIL) என அக்டோபர் 1995 அன்று தொடங்கியது. போர்ட் தானுந்து நிறுவனம் தனது பங்கை 72% ஆக மார்ச் 1998இல் உயர்த்தி ஃபோர்ட் இந்தியா பி. லிட் என மறுபெயரிட்டது.

அண்ணா நகரில் இருக்கும் அண்ணா டவர் பூங்காவின் ஒரு பக்கத் தோற்றம்.