விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் வானியல்/முதற்பக்கத்தில் காட்டப்பட்ட சிறப்புப் படங்கள்

2006 ஆண்டுக்கான சிறப்புப் படங்கள்:


நவம்பர் 17, 2006 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

அப்பல்லோ 11 பயணத்திட்டத்தின் மூலம் முதன் முதலில் நிலவில் இறங்கிய விண்வெளி வீரர்களில் ஒருவரான பஸ் ஆல்ட்ரின், நிலவில் அமெரிக்கக் கொடியை நட்டு வணக்கம் செலுத்துவதை இப்படம் காட்டுகிறது. அப்பல்லோ 11 பயணத்திட்டமே நிலவில் முதன்முதலில் ஆளிறங்கிய நிகழ்வாகும். இது அப்பல்லோ திட்டத்தில் ஐந்தாவது ஆளேற்றிய பயணத் திட்டமாகும்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு


2007 ஆண்டுக்கான சிறப்புப் படங்கள்: எதுவுமில்லை

2008 ஆண்டுக்கான சிறப்புப் படங்கள்:


டிசம்பர் 8, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மீர் அல்லது மிர் (Mir, ரஷ்ய மொழி: Мир), சோவியத் ஒன்றியத்தின் (தற்போது ரஷ்யாவின்) பூமியைச் சுற்றி வர ஏவப்பட்ட ஒரு விண்நிலையம் ஆகும். விண்வெளியில் முதன் முதலில் நிறுவப்பட்ட நீண்ட-கால தொழிற்பாடுடைய விண்நிலையம் இதுவாகும். 1986 ஆம் ஆண்டு பெப்ரவரி 19 இல் இந்நிலையம் விண்ணுக்கு ஏவப்பட்டது. விண்வெளி வீரர்கள் பூமியிலிருந்து மீள் விண்கப்பலில் பயணம் செய்து, விண்வெளியில் நிரந்தரமாய்க் குடியேற சோவியத்தின் இத்திட்டம் வழிகோலியது. ரஷ்ய விண்கப்பலான சோயுஸ் மூலமாக முதலில் விண்வெளி ஆய்வாளர்கள் பயணம் செய்து, மீர் நிலையத்தோடு இணைக்கப்பட்டு இடம் மாறிக்கொண்டனர். அதன் பின்னர் நாசாவின் அட்லாண்டிஸ் மீருடன் இணைந்தது (படம்). மீர் விண்வெளி நிலையம் மார்ச் 23, 2001 வரை இயங்கியது. இது பின்னர் புவியின் சுற்று வட்டத்தில் இருந்து கட்டாயமாக விலக்கப்பட்டு தென் பசிபிக் பெருங்கடலில் விழுந்து மூழ்க விடப்பட்டது. படத்தில் மீர் நிலையத்துடன் அட்லாண்டின் விண்ணோடம் காணப்படுகிறது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஅக்டோபர் 26, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பூமி சூரியக்கோள்களின் நீள்வட்டப்பாதையில் மூன்றாவதாக உள்ளது. சூரியக் குடும்பத்தில் உயிர்கள் வாழும் ஒரே கோள் பூமி. அறிவியல் சான்றுகள் பூமி தோன்றி 4.54 பில்லியன் ஆண்டுகள் ஆவதாகவும், உயிர்கள் தோன்றி பில்லியன் ஆண்டுகள் ஆவதாகக் கூறுகின்றன. படத்தில் அப்பல்லோ திட்டம் விண்கலம் நிலாவில் இருந்தபோது எடுக்கப்பட்ட பூமிப் படம்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகஸ்ட் 3, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

அப்பல்லோ திட்டம் என்பது 1961-1972 வரை, ஐக்கிய அமெரிக்க நாட்டினால் நடைமுறைப்படுத்தப்பட்ட, ஒரு தொடரான மனித விண்வெளிப்பறப்புத் திட்டமாகும். இது, தசாப்தம் 1960களுக்குள் ஒரு மனிதனைச் சந்திரனில் இறக்கிப் பாதுகாப்பாகப் பூமிக்குத் திருப்பிக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது. 1969ல் அப்பல்லோ 11 திட்டத்தின் மூலம், இந்த நோக்கம் அடையப்பட்டது. சந்திரனில், ஆரம்ப ஆள்மூல அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, இத் திட்டம், 1970களின் முற்பகுதிவரை நீட்டிக்கப்பட்டது.

படம்: அப்பல்லோ திட்டம் மூலம் சந்திரனில் அடியெடுத்து வைத்த முதல் மனிதர்: நீல் ஆம்ஸ்ட்றோங்


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு


2009 ஆண்டுக்கான சிறப்புப் படங்கள்:


சூன் 14, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மீயொளிர் விண்மீன் வெடிப்பு (supernova) என்பது அளவில் பெரிய விண்மீன்கள் தம் எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் மாபெரும் அளவில் ஒளியாற்றலை வீசி பேரொளியுடன் வெடிப்பதை குறிக்கும். மீயொளிர் விண்மீன் வெடிப்புகள் ஒரு முழு நாள்மீன்பேரடை முழுவதையும் விஞ்சும் அளவுக்கு ஒளி வீசக்கூடியது. குறைந்த கால அளவிலே உணரக்கூடிய (சில வாரங்கள் அல்லது மாதங்கள்) இத்தகைய ஒளிர்வு ஆற்றல், சூரியன் தன் வாழ்நாள் முழுவதும் வெளியிடக்கூடிய மிகப்பெரும் ஆற்றலைவிட அதிகமானது. இத்தகைய வெடிப்பின் மூலம் சிதறும் விண்மீன் எச்சங்கள் ஒளியின் வேகத்தில் பத்தில் ஒரு மடங்கு வேகம் வரையிலும் கூட சிதறுகின்றன. மேலும் வெடிப்பின் அதிர்வலைகள் விண்மீன் மண்டலத்தின் முழுவதும் பரவ வல்லவை. படத்தில் எசு.என் 1054 என அறியப்படும் 1054 ம் ஆண்டில் வெடித்த மீயொளிர் விண்மீன் வெடிப்பு. இப் படம் நாசாவால் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியின் படங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஜனவரி 4, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பேரடை என்றும் நாள்மீன்பேரடை (Galaxy) என்றும் குறிக்கப்பெறுவது பெரும் நாள்மீன் கூட்டம் ஆகும். ஒரு சராசரி பேரடையில் 10 மில்லியன் முதல் ஒரு டிரில்லியன் (107 முதல் 1012) வரையான எண்ணிக்கையில் விண்மீன்கள் இருக்கும். இன்று கணக்கிடக்கூடிய பேரடைகள் நூறு பில்லியனுக்கும் (1011) மேல் இருக்கும். ஒவ்வொரு நாள்மீன் பேரடையும் சில ஆயிரம் முதல் பன்னூறாயிரம் ஒளியாண்டுகள் அளவு விட்டம் கொண்டிருக்கும். பேரடைகளுக்கு இடையேயான வெளியில் மிககுறைவான அளவில்தான் அணுப்பொருள்கள் இருக்கும். ஒரு கன மீட்டரில் ஓர் அணு என்னும் விதமாக மிக அருகியே விண்துகள்கள் இருக்கும். படத்தில் அன்டென்னே பேரடை காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஜனவரி 18, 2009 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

அனைத்துலக விண்வெளி நிலையம் என்பது விண்ணிலே உலகைச் சுற்றிவரும் ஒரு விண்நிலையம். பலநாடுகள் ஒன்றாக இணைந்து உருவாக்கிய, நெடுங்காலம் நிலைத்து விண்ணிலே இயங்கவல்ல ஒரு விண்வெளி நிலையம். இது புவியில் இருந்து 360 கி.மீ. உயரத்தில் வளிமண்டலத்தைத் தாண்டி உள்ள புற வெளியில் 92 நிமிடங்களுக்கு ஒருமுறை உலகைச் சுற்றி வருகின்றது. இது 1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு


2010 ஆண்டுக்கான சிறப்புப் படங்கள்: எதுவும் இல்லை

2011 ஆண்டுக்கான சிறப்புப் படங்கள்:


டிசம்பர் 21, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

அப்பல்லோ 11 பயணத்திட்டம் நிலவில் இறங்கிய முதல் ஆளேற்றிய இறக்கமாகும். இது அப்பல்லோ திட்டத்தில் 5 ஆவது ஆளேற்றிய பயணத் திட்டமாகும். ஜூலை 16, 1969 அன்று அமெரிக்காவின் கேப் கனவரல் தளத்திலிருந்து ஏவப்பட்ட இது மூன்று விண்வெளி வீரர்களைத் தாங்கிச் சென்றது. அவர்களில் இருவர் - நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் ஆல்ட்ரின் நிலவில் இறங்கினர். படத்தில் ஆல்ட்ரின் நிலவில் நடப்பது காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஅக்டோபர் 30, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஹபிள் என்றழைக்கப்படும் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி டிஸ்கவரி விண்வெளி ஓடத்தினால் 1990ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட ஒரு விண்வெளித் தொலைநோக்கி ஆகும். அமெரிக்க வானியலாளரான எட்வின் ஹபிள் என்பவரின் பெயரைத் தழுவியே இதற்குப் பெயரிடப்பட்டது. இது மிகப் பெரிய தொலைநோக்கிகளுள் ஒன்றும் மிகச் சிறந்ததும் ஆகும். ஹபிள் காலவெளியில் நம்மைக் கடந்த காலத்திற்கு இட்டுச் செல்லும் காலப் பொறியாகவும் செயல்படுகிறது. படத்தில் ஹபிள் தொலைநோக்கியை மிக அண்மையில் எடுத்த படம் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஜூலை 20, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சனி சூரியக் குடும்பத்தில் ஆறாவதாக அமைந்துள்ள கோள். இது வியாழனுக்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரியது. அடர்வு குறைவான கோள்களுள் ஒன்று. இதற்கு 61 துணைக்கோள்கள் உள்ளன. இக்கோள் அதன் வளையங்களுக்காகவே சிறப்பாக அறியப்படும். இவ்வளையங்களை கலீலியோ கலிலி கண்டுபிடித்தார். புற ஊதாக் கதிர் மூலம் எடுக்கபட்ட படம் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஜூன் 26, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கெப்லர்-11 என்பது சூரியனைப் போன்ற ஒரு விண்மீன். இந்த விண்மீனைக் குறைந்தது ஆறு புறக்கோள்கள் குறைந்த சுற்றுப்பாதையுடன் சுற்றிவருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக 2011, பெப்ரவரி 2 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. இது பூமியில் இருந்து ஏறத்தாழ 2,000 ஒளியாண்டுகள் தூரத்தில், சிக்னசு என்ற விண்மீன் குழுவின் திசையில் அமைந்துள்ளது. நாசாவின் கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படத்தில் கெப்லரும் அதன் புறக்கோள்களும் காட்டப்பட்டுள்ளன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு


2012 ஆண்டுக்கான சிறப்புப் படங்கள்:


சூலை 12, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
டிஸ்கவரி விண்ணோடம்

டிஸ்கவரி விண்ணோடம் என்பது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஓய்வு பெற்ற மூன்று விண்ணோடங்களில் ஒன்றாகும். 1984இல் டிஸ்கவரி விண்ணோடம் முதன் முதலில் செலுத்தப்பட்டது. இது விண்ணில் பல ஆய்வுகளையும் அனைத்துலக விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. ஹபிள் தொலைநோக்குக் கருவி முதன் முதலில் டிஸ்கவரி மூலமே விண்ணுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

படம்: நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசூலை 1, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஹேலியின் வால்மீன் என்பது 75 முதல் 76 ஆண்டுகளுக்கொரு முறை புவிக்கு அருகில் வரும் ஒரு வால்நட்சத்திரம் ஆகும். இது குறுகிய நேரத்துக்கு தெளிவாக சாதாரண கண்களுக்குத் தெரியக்கூடியதாகும். இது சூரியக் குடும்பத்துக்குள் கடைசித் தடவையாக பிப்ரவரி 9, 1986இல் வந்துபோனது. அடுத்ததாக இது 2061இன் நடுப்பகுதியில் தோன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படம்: ஃபிலிப் சால்ஸ்கெபெர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமே 13, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
அந்திரொமெடா பேரடை

அந்திரொமேடா பேரடை‎ ஒரு நாள்மீன்பேரடை. புவி இருக்கும் பால் வழி பேரடைக்கு அருகே இருக்கும் பேரடை இதுவாகும். சுருள் வகைப் பேரடையான இது, புவியில் இருந்து 2,500,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச் 25, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
சூரியன்

சூரியன் சூரிய மண்டலத்தின் மையத்தில் உள்ள, சூரிய மண்டலத்தின் ஆதாரமான விண்மீன் ஆகும். பூமி உள்பட பல கோள்களும், கோடிக்கணக்கான விண்கற்களும், வால்வெள்ளிகளும், அண்டத்தூசி ஆகியனவும் பல்வேறு கோளப் பாதைகளில் சூரியனைச் சுற்றி வருகின்றன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 22, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

நாசாவின் விண்ணோடம் என்பது ஐக்கிய அமெரிக்க அரசினால் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பப் பயன்படுத்தப்படும் விண்கலம். இது அதிகாரபூர்வமாக ”விண்வெளி போக்குவரத்து முறை” என அழைக்கப்படுகிறது. கொலம்பியா, சேலஞ்சர், டிஸ்கவரி, அட்லாண்டிஸ் மற்றும் எண்டெவர் என கட்டப்பட்ட ஐந்து விண்ணோடங்களில் சேலஞ்சர் மற்றும் கொலம்பியா விண்வெளி பயணத்தின் போது விபத்துக்குள்ளாகி அழிந்து விட்டன. பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து அட்லாண்டிஸ் விலகிச் செல்கையில் எடுக்கப்பட்ட படம் இடப்புறம் உள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு


2013 ஆண்டுக்கான சிறப்புப் படங்கள்:


மே 15, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும் போது, பூமியிலிருந்து காண்கையில் சூரியனும் நிலவும் வான் இணையலில் இருந்தால் சூரிய கிரகணம் ஏற்படும். இது ஓர் அமாவாசை நாளன்று தான் ஏற்படும். இதனால் சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும். படத்தில் ஒரு சூரிய கிரகணத்தின் படிப்படியான நிலைகள் காட்டப்பட்டுள்ளன.

படம்: காலன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமே 29, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம் என்பது செவ்வாய்க் கோளில் தரையிறங்கி அதன் மேற்பரப்பை ஆராய நாசா அனுப்பிய ஒரு விண்வெளித் தரையுளவித் திட்டம் ஆகும். படத்தில் அத்திட்டத்தில் இடம்பெற்ற கியூரியாசிட்டி (பெரியது), ஸ்பிரிட் (நடுத்தரம்), சோஜர்னர் (சிறியது) ஆகிய தரையுளவிகளோடு இரு அறிவியலாளர்கள் நின்றுள்ளனர்.

படம்: நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசூலை 14, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சோயூஸ் திட்டம் 1960களின் ஆரம்பப் பகுதிகளில் சோவியத் ஒன்றியத்தினால் மனிதரை விண்வெளிக்குக் கொண்டு செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு விண்வெளித் திட்டமாகும். சோயூஸ் விண்கலம் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். தற்போது இத்திட்டத்தை உருசிய விண்வெளி நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. படத்தில் சோயூஸ் TMA-16 விண்கலம் பன்னாட்டு விண்வெளி மையத்தை அணுகிக்கொண்டிருப்பது காட்டப்பட்டுள்ளது.

படம்: Expedition 20 குழு, நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசூலை 31, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

படத்தில் சனிக்கோளின் வளையங்கள் சாதாரண கட்புலனாகும் ஒளியிலும் ரேடியோ அலைகளிலும் தெரியும் விதம் காட்டப்பட்டுள்ளது. படத்தில் மேற்புறப்பகுதி கட்புலனாகும் ஒளியிலும் கீழே ரேடியோ அலையினாலும் எடுக்கப்பட்டதாகும்.

படம்: நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசெப்டம்பர் 15, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

அப்பல்லோ 17 திட்டமானது அமெரிக்க அப்பல்லோ திட்டத்தின் மனிதர் பயணித்த பதினோராவது மற்றும் கடைசித் திட்டமாகும். திசம்பர் 7, 1972 அன்று இது ஏவப்பட்டது. மூவர் அடங்கிய பயணக்குழுவின் ஆணையாளர் யூகன் செர்னான் நிலவுத் தரையூர்தியில் (lunar roving vehicle) பயணிக்கும் காட்சி படத்தில் காட்டப்பட்டுள்ளது.

படம்: நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஅக்டோபர் 20, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

துடிப்பண்டம் என்பது விண்வெளியில் அமைந்திருக்கும் மின்காந்த ஆற்றலை உமிழும் மிகப்பெரும் மூலமாகும். தொலைநோக்கியில் இது ஒரு புள்ளி ஒளிமூலம் போன்று தென்படும். இவை அதிக சிவப்புப் பெயர்ச்சியைப் பிரதிபலிக்கின்றன. ஓர் ஓவியரின் கற்பனையில் துடிப்பண்டத்தின் தோற்றம் காட்டப்பட்டுள்ளது.

ஓவியம்: நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுநவம்பர் 13, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மீயொளிர் விண்மீன் வெடிப்பு (supernova} என்பது அளவில் பெரிய விண்மீன்கள் தம் எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் மாபெரும் அளவில் ஒளியாற்றலை வீசி பேரொளியுடன் வெடிப்பதைக் குறிக்கும். படத்தில் புவியில் இருந்து 6500 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள 6 ஒளியாண்டுகள் அகலம் கொண்ட நண்டு நெபுலா காட்டப்பட்டுள்ளது.

படம்: ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி, நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுதிசம்பர் 11, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

புளூட்டோ என்பது நமது சூரியக் குடும்பத்தின் இரண்டாவது பெரிய குறுங்கோளும் சூரியனை நேரடியாக சுற்றிவரும் பத்தாவது பெரிய விண்பொருளும் ஆகும். கண்டுபிடிக்கப்பட்ட 1930இலிருந்து சூரியக் குடும்பத்தில் 9ஆவது கோளாக இருந்துவந்த இது 2006ஆம் ஆண்டு அத்தகுதியிலிருந்து நீக்கப்பட்டது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகத்துல்லியமாக பல்வேறு கோணங்களிலிருந்து எடுக்கப்பட்ட பல படங்களின் கூட்டு அசைபடம் காட்டப்பட்டுள்ளது.

மூலம்: ஹபிள் தொலைநோக்கி; அசைபடம்: எய்னெயாஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு