விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்களின் மலரும் நினைவுகள்

விக்கிப்பீடியர்கள் கட்டுரையைத் தொடங்கும் போதோ அல்லது முன்பு தொடங்கப்பட்ட கட்டுரையில் பங்களிப்புகள் செய்யும் போதோ கட்டுரையுடன் தொடர்புடைய அவர்களுடைய கடந்த கால செயல்பாடுகள் சில நினைவுக்கு வருவதுண்டு. சில கட்டுரைகளின் உரையாடல் பக்கங்களில் அந்த நினைவுத் தகவல்களை பதிவேற்றம் செய்வதுண்டு. அப்படி பதிவேற்றம் பெற்ற தகவல்களில் சில சுவையானதாக இருப்பதுண்டு. அந்த சுவையான மலரும் நினைவுகள் பக்கங்களுக்கு இணைப்புகளைத் தரும் பக்கம் இது.

  • சிறு வயதில் காக்கா குஞ்சு விளையாட்டில் தேனீக்களிடம் கொட்டு வாங்கி அவதிப்பட்ட அனுபவத்தினை இப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • கோடை விடுமுறையில் காலையில் ஆற்றுக்குப் போய் மாலையில் வீடு திரும்பி அம்மாவிடம் அடி வாங்கிய நிகழ்வினை இப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • நடிகர் வையாபுரி தன்னுடன் படித்ததாக நண்பர்கள் கூறினாலும் தனக்கு ஞாபகமில்லை என இப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • பெண்களுக்கு மட்டுமான ஔவையார் வழிபாட்டிற்காகத் தயாரிக்கப்படும் உப்பில்லாக் கொழுக்கட்டை ஆண்களுக்கு மறுக்கப்பட்டு வந்த சூழ்நிலையில் அதைச் சகோதரியிடம் மிரட்டி வாங்கிச் சாப்பிட்டு விட்டுப் பின் அம்மாவிடம் திட்டு வாங்கிய நிகழ்வினை இப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • சிறு வயதில் குருவி வேட்டைக்குப் போனதுடன், ஓணானைப் பிடித்து அதைச் சித்திரவதைப்படுத்திய நிகழ்வுகளை இப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • கம்பஞ்சோறும் கம்பங்கஞ்சியும் சிறிதளவே உண்டாலும் நெடுநேரம் பசியைக் கட்டும் பண்பு கொண்டது என்கிற தன் அனுபவத்தை இப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • பெண்களுக்கு மட்டுமான ஔவையார் வழிபாட்டிற்காகத் தயாரிக்கப்படும் கொழுக்கட்டையினை சகோதரிகள் பெருமிதத்துடன் மறைத்து உண்பதையும், மகனைச் சமாதானப்படுத்த அம்மா காலையில் 'விநாயகர் கொழுக்கட்டை' ( பூரணக் கொழுக்கட்டை) செய்து தந்த நிகழ்வினையும் இப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • தனது பெயர் நீளமாக இருப்பதால் தனக்கு எப்போதும் தொல்லைதான் என்றும், பல இடங்களில் தன்னுடைய பெயரைப் பயன்படுத்தும் போது பெயரிலுள்ள “சிவ” எனும் எழுத்துக்களை விட்டுவிடுகிறார்கள் என்றும் இப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • தனது அப்பாவுடன் இல. செ. கந்தசாமி அவர்களுடைய கூட்டங்களுக்குச் சென்று வந்த நினைவுகளையும், அவரைப் பற்றிய நினைவுகளுடன் கட்டுரை தொடங்கியது குறித்தும் இப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • பத்து வயது வரை நகரத்தில் இருந்து விட்டுத் தீபாவளிக்குக் கிராமத்துக்குச் சென்ற போது, அப்பத்தாவிடம் (பாட்டியிடம்) தீபாவளிக்குச் சிறப்பு இனிப்பு என்ன என்று கேட்ட போது அவர் இட்லியை இனிப்பு என்று சொன்னதை நினைவு கூர்ந்து இப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • சிறு வயதில் கொடிக்கால் புளி மரத்தில் ஏறிப் பொன் வண்டு எனப்படும் ஒரு வண்டைப் பிடித்து வந்து அதைக் காலித் தீப்பெட்டிக்குள் போட்டு வளர்த்த நினைவுகளை இப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • தனது தாயார் சிறுவயதில் தனக்குத் தாவரப் பெயர்களைச் சொல்லித் தந்த நினைவுகளை இப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • சிறு வயதில் புழுவிலிருந்து பட்டாம்பூச்சிகள் வளர்த்த தனது அனுபவத்தை இப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • தனக்கு சீம்பால் சாப்பிடுவதில் அதிக ஆசை என்றும், தாத்தா/பாட்டியைப் பார்க்க எட்டயபுரம் செல்லும் போதெல்லாம் மாட்டுத் தொழுவத்துக்குச் சென்று, அதில் ஏதாவதொரு பசு சினையாக இருந்தால் தனக்கு சீம்பால் கிடைக்கும் என்கிற ஆவலும் ஏற்படும் என்று இப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • தன்னுடைய பாட்டி குண்டாச்சட்டி எனும் ஏனம் (பாத்திரம்) குறித்துக் கூறியதை இப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • சிறு வயதிலிருந்து குழந்தை எழுத்தாளர் வாண்டு மாமாவின் விசிறியாக இருந்ததையும், அவருடைய நூல்களை இன்னும் பாதுகாத்து வருவதையும் இப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • பள்ளியில் தமிழ் பயிலாததால் எனக்கு இலக்கணங்கள்,முறையான எழுத்துமுறை இதெல்லாம் தெரியாது. ஒற்றெழுத்து என்றால் என்ன என்பது இப்பொழுது தான் தெரிகிறது என்று தனது நிலையை இப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • செங்காட்டுப்பட்டி எனும் ஊரில் இளமைக் காலத்தில் எருதுகளை ஏரில் பூட்டி உழுத நிகழ்வை இப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • தான் தமிழிலக்கணத்தை இன்றும் மறவாமலிருப்பதற்குப் பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ்ப் பாடமெடுத்த ஆசிரியர்தான் காரணம் என்று இப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • தமிழக நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஒரு கோமாளிக் கதை மாந்தனான “திருவாத்தான்” எனும் பெயரைப் பயன்படுத்தித் தனது தந்தை திட்டியதை நினைவுப்படுத்தி இப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • தன்னுடைய சிறு வயதில், யாழ்ப்பாணத்தில் தமிழ் அரிச்சுவடி எழுதப் பழகியது மணல் தொட்டியில்தான் என்று இப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • சிறு வயதில் பாடசாலையில் ஆங்கிலப் பாடத்தில் ரயர் என்பதை tire என்று எழுதியதைப் பிழை என்று கூறி தன்னுடைய புள்ளிகளைக் குறைத்ததாக இப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • மூலவருத்தம் நோய் கற்றாழையைக் குறிப்பிட்ட முறையில் உண்பதனால் மூன்றே மாதத்தில் குணப்படுத்தப்படும் என்பதைத் தனது சின்ன வயதிலேயே தனது பூட்டப்பா மூலம் அறிந்து கொண்டதாக இப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.