விக்கிப்பீடியா:துறைசார் பயிற்சிகள்
(விக்கிப்பீடியா:WS இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முகப்பு | தமிழ்க் கணிமை | விக்கியூடகங்கள் | எழுத்துக்கலை | நிரலாக்கம் | வரைகலை | ஒளிப்படக்கலை | நிகழ்படக்கலை | ஆவணவியல் | பங்களிப்பாளர் கட்டமைப்பு |
நோக்கம்
தொகு- பயனர்களிடம் விக்கிக்குச் சிறப்பாகப் பங்களிக்கத் தேவையான ஆற்றலை விருத்தி செய்தல். (Capacity Development)
- பயிற்சிகள் ஊடாக விக்கிப் பரவலாக்கலை முன்னெடுத்தல். (Outreach)
- விக்கிச் சமூகத்தை வளர்த்தல். (Wiki Community Development)
எவ்வாறு பயற்சிகள் வழங்கப்படும்
தொகு- பயிற்சிகள் இணையம் ஊடாக அல்லது நேரடியாக எது பொருத்தமானதோ, இயலுமானதோ அல்லது விரும்பப்படுகிறதோ அவ்வாறு வழங்கப்படும்.
- குறிப்பிட்ட துறையில் அல்லது தலைப்பில் ஒரு குறைந்த எண்ணிக்கை (எ.கா ஐந்து) பயனர்கள் தமது ஈடுபாட்டைப் பதிவுசெயத பின்னர் பயிற்சிகள் ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெறும்.
- குறிப்பிட்டதலைப்பில் ஈடுபாடு உள்ள பயனர் அதே தலைப்பில் ஈடுபாடு கொண்ட பயனர்களைத் திரட்ட முடியும் (எ.கா ஆலமரத்தடியில் அறிவித்தல் இடுவதன் மூலம்)
யார் பயிற்சி வழங்குவார்கள்
தொகு- குறிப்பிட்ட துறையில் அனுபவம் உள்ள, பணி புரியும் சக பயனர்கள்
- அணுகப்பட்டு முன்வரும் துறை வல்லுனர்கள்
வளங்கள்
தொகு- பயிற்சியாளர்கள் தொடர்புகள்
- பயிற்சிக்கு தேவைப்படும் ppts, துண்டறிக்கைகள், கையேடுகள் இங்கு தொகுக்கப்படும்
- பயிற்சியாளர்கள், இட வசதி, கருவி வசதி, உசாத்துணை வசதிகள் ஆகியவை இயன்றவரை தமிழ் விக்கியூடகங்களால் செய்துதரப்படும்.