விக்கிப்பீடியா பேச்சு:கொள்கைகளும் வழிகாட்டல்களும்

கொள்கைக் குறிப்புகள்: குறிக்கோள்/நோக்கம்

தொகு
எளிய தமிழில் கட்டற்ற கலைக்களஞ்சியத்தை ஆக்குவதே எமது முதன்மைக் குறிக்கோள்.

தமிழ் விக்கிபீடியா இக்குறிக்கோளுக்கான வழிமுறையும் செயல்வடிவும் ஆகும்.

'செயல்வடிவும்' என்ற சொல்லை விட 'செயலாக்கமும்' நன்றாக இருக்குமா?

கருத்துக்களும் மாற்று வெளிப்படுத்தல்களும் வரவேற்கப்படுகின்றன. --Natkeeran 01:34, 5 ஆகஸ்ட் 2006 (UTC)

எளிய தமிழில் கட்டற்ற கலைக்களஞ்சியத்தை ஆக்குவதே தமிழ் விக்கிபீடியாவின் முதன்மைக் குறிக்கோள் என்று இருக்க வேண்டுமா?

இங்கு எமது என்பது தனிநபரையோ, நிறுவனத்தையோ குறிப்பதாக உள்ளது. விக்கமீடியா நிறுவனத்தை குறித்தால் அதனை இங்கு குறிப்பிடப்படவேண்டும். இது எனது புரிதல் -- மாஹிர் 04:19, 9 மே 2010 (UTC)Reply

தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள், குறிக்கோள்கள், வழிகாட்டல்கள் மற்றும் வழிமுறைகள்

தொகு

தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள், குறிக்கோள்கள், வழிகாட்டல்கள் மற்றும் வழிமுறைகள் நோக்கி இன்னும் உறிதியான தெளிவான நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்படவில்லை. இதுவரை ஆங்கில விக்கிபீடியாவையே இவ்விடயங்களில் பெரும்பாலும் பின்பற்றிவந்துள்ளோம். இவை நோக்கி ஒரு Wikipedia:இணக்க முடிவு எட்டுவது தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு ஒரு முறையான வெளிப்படுத்தலை முன்வைப்பது தமிழ் விக்கிபீடியாவின் விரிவான செயல்பாடுகளுக்கு ஆரோக்கியமாக அமையும். அப்படிப்பட்ட கலந்துரையாடலக்கு உதவக்கூடிய முன்னர் பகிரப்பட்ட கருத்துக்கள் கீழே ஒருங்கே இடப்படுகின்றன. --Natkeeran 17:50, 28 ஜூலை 2006 (UTC)

கொள்கைப் பக்கங்கள்

தொகு

நான் ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து சில கொள்கைப் பக்கங்களை இங்கு பதிவேற்றியுள்ளேன். அவற்றை நாம் மொழிபெயர்க்கவும் தெளிவாக்கவும் வேண்டும். அதே நேரம்,

  • விக்கிபீடியா:நடுநிலைக் கோட்பாடு போன்ற சிலவற்றைத் தவிர எந்த ஒரு கொள்கையும் இறுதியானதல்ல; நம் பொதுஅறிவைப் பயன்படுத்தி சூழலுக்கேற்ப அக்கொள்கைகளைப் பயன்படுத்த வேண்டும்.
  • ஆங்கில விக்கிபீடியவில் உள்ள பல கொள்கைகள் தமிழ் மொழிக்கும் இங்குள்ள பண்பாடுகளுக்கும் பொருந்தாது. அவ்வாறு இருப்பின் அவற்றை நாம் வசதிக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
  • மேலும் பல கருத்துக்கள் இருக்கலாம். மற்ற பயனர்களின் கருத்துக்களை எதிர் நோக்குகிறேன்.

-- Sundar \பேச்சு 10:02, 12 செப்டெம்பர் 2005 (UTC)Reply


விக்கிபீடியா கொள்கைகள் - உறுதியான சில உண்டு

தொகு

விக்கிபீடியா இறுதியான கொள்கைகள் அற்றது என்பது முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து அல்ல. ஆங்கில விக்கிபீடியா பிரிற்ரானிக்கா, என்காற்ரா, IEEE தகவல் தரவு தளங்கள் போன்ற கட்டண தரவு தளங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு, மாறுபாட்டை அலசி, கொள்கைகள் எதை நோக்கி அமைகின்றன என்பதை எடுத்துரைக்கலாம்.

எனது அவதானிப்பில் பின்வருவன தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள் என கொள்ளலாம்.

1. நடு நிலமை (NPOV)
2. அனைவருக்கும் அழைப்பு, அதாவது யாரும் தகுந்த மேன்படுத்தலை செய்யலாம் (inclusiveness)
3. கட்டற்ற படைப்புக்கள் (Free Creations)
4. திறந்த செயல்பாடுகள், உரையாடல்கள், நல் நம்பிக்கை (Open or Transparant Processes)
5. கூட்டு மதிநுட்ப உருவாக்கம், செயல்பாடுகள் (Co-creation, Co-intelligence)
6. தனித்துவம்: தமிழ் விக்கிபீடியாவின் தனித்துவம் (Originality)
7. பன்முக தன்மை அல்லது பண்பு (Universal Spirit)

--Natkeeran 18:35, 13 செப்டெம்பர் 2005 (UTC)Reply

வரவேற்கத்தக்க கருத்துக்கள். இவற்றின் முன்வடிவுகளை விரைவில் உருவாக்க வேண்டும். -- Sundar \பேச்சு 07:22, 14 செப்டெம்பர் 2005 (UTC)Reply

நற்கீரனுடைய அவதானிப்புகள் ஏற்றுக்கொள்ளத் தக்கவை. அவற்றை நாங்கள் செயல் படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டுமென்பதிலும் ஐயம் இல்லை. சுந்தர் முன்னர் குறிப்பிட்டபடி ஆங்கில விக்கிபீடியாவின் எல்லாக் கொள்கைகளும் தமிழ் விக்கிபீடியாவுக்கு அச்சொட்டாகப் பொருந்தா என்பதும் சரிதான். அத்தகையவற்றையும் இனங்கண்டு எங்களுடைய நிலைமைகளுக்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்ளவும் வேண்டும். Mayooranathan 18:08, 14 செப்டெம்பர் 2005 (UTC)Reply

வரையறைகள்

தொகு
wikt:ta:கொள்கை: Policy
wikt:ta:குறிக்கோள்: Goal/Purpose
wikt:ta:வழிகாட்டல்: Guideline - gives reasons for the recommendations it provides
wikt:ta:வழிமுறை: How-to, Process, உதவி - techical aspect of doing something
wikt:ta:கையேடு: = Guide வழிகாட்டல் + வழிமுறை
  • விதிமுறை - Rules
  • செயல்முறை - Procedure
  • சீர்தரம் - Standard
  • பயிற்சி - Tranining
  • தொடர்பாடல் - Communication
  • மதிப்பீடு - Evaluation
  • அளவிடுதல் - Measuring, Stats
  • மேம்படுத்தல் - Improvement
  • தொடர் மேம்படுத்தல் - Continueous Improvement
  • கட்டுப்படுத்தல் - Control
  • ஒழுங்கமைப்பு, அமைப்பு - Organization
  • கட்டமைப்பு - Structure

சுட்டிகள் தொகுப்பு

தொகு

கொள்கைகள் தமிழாக்கம் செய்வது பற்றி

தொகு

இரண்டு விதமான கொள்கைகளை நாம் கவனத்தில் கொள்தல் வேண்டும். அவை:

  1. விக்கிபீடியாவின் முக்கிய கொள்கைகள்
  2. தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

விக்கிபீடியாவின் முக்கிய கொள்கைகளை முழுமையாகவும், சரியாகவும் எடுத்துரைக்கப்படவேண்டு. இங்கு இடப்பட்டிருக்கும் ஆங்கில மூலம் காலவதியாகிவிட்டது. ஒரு முழு புரிதலுடன் இச்செயல்பாடு அமைய வேண்டும்.

தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள் பெரும்பாலும் ஆங்கில விக்கிப்பீடியாவிற்க்கு இணங்கவே இருக்கும் என்று அனுமானிக்கின்றேன். ஆனால், சில தனித்துவமான கொள்கைகளும், குறிப்பாக தமிழ் விக்கிபீடியா நடை போன்ற விடயங்களில் இருக்கும். எனவே அவற்றையும் நாம் விபரிக்க வேண்டும்.

கொள்கைகள் எப்படி உருவாக்கப்படுகின்றன?

தொகு

கொள்கைகள், குறிக்கோள்கள், வழிகாட்டல்கள், வழிமுறைகள் எப்படி உருவாக்கப்படுகின்றன, அமுல்படுத்தப்படுகின்றன போன்ற தகவல்களும் தெளிவாக விபரிக்கப்படவேண்டும்.

--Natkeeran 00:14, 5 ஆகஸ்ட் 2006 (UTC)

தமிழ் விக்கிபீடியா ஆங்கில விக்கிபீடியா ஒற்றுமை-வேற்றுமைகள்

தொகு

உங்களுக்கு புலப்படும் த.வி வுக்கும் ஆ.வி வுக்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமைகளை கீழே உள்ள பட்டியலில் சேருங்கள். --Natkeeran 00:14, 5 ஆகஸ்ட் 2006 (UTC)

ஒற்றுமைகள்

தொகு

வேற்றுமைகள்

தொகு
  • ஆங்கிலத்தில் ஆக்கங்களை பெற பல மூலங்கள், தளங்கள் ஆங்கிலத்தில் உண்டு, ஆனால் தமிழ் விக்கிபீடியாவே (மதுரைத் திட்டம், நூலக திட்டம் தவிர்த்து) தமிழ் ஆக்கங்களுக்கு (content) முதன்மைத் தளமாக இருக்கின்றது.

தமிழ் விக்கிபீடியாவின் தனித்துவம்

தொகு

முக்கிய பல தமிழ் விக்கிபீடியா கொள்கைகள் ஆங்கில விக்கிபீடியாவிற்கு உடன்பட்டே நிற்கின்றன. அதே சமயம் எமது குறிக்கோளான "கட்டற்ற தமிழ் கலைக்களஞ்சியம்" என்பதை நிறைவேற்றுவத்தில் புதிய ஆங்கில விக்கிபீடியா கொள்கைகள் தடையாக் எழுமானல், இந்த திட்டத்தை விக்கிபீடியா தாய்திட்டத்தில் இருந்த்து தன்யே வளர்த்து செல்ல வேண்டியும் வரலாம். அப்படியான ஒரு நிகழ்வுக்கு சாத்தியக்கூறுகள் மிகக்குறைவு, எனினும் நாம் முற்றிலும் புறக்கணிக்க முடியாது.

ஆங்கில விக்கிபீடியாவில் இருந்து சில குறிப்புகள்

தொகு

பொதுவாக நாம் இணக்க முடிவை எடுக்கவே முயல்கின்றோம், ஆனால் விக்கிபீடியா அனைத்து விடயங்களிலும் ஒரு தேர்தல் முறையை கையாள்வது கிடையாது. (பார்க்க: Wikipedia is not an experiment in democracy). விக்கிபீடியாவின் நிர்வாகத்தில் இறுக்கமான ஒரு கோட்பாடை எதிர்பார்க முடியாது.

நடைமுறைகள் அல்லது rules விபரமாக எழுதப்பட்டு, விபரிக்கப்பட்டு பின்பற்ற வேண்டும் என்று சிலர் விரும்புகின்றார்கள். சிலர் எல்லா பிரச்சினைகளுக்கும் எழுதப்பட்ட நடைமுறைகளால் சாமாளிக்க முடியாது என்று நம்புகின்றார்கள்.

In either case, a user who acts against the spirit of our written policies may be reprimanded, even if no rule has technically been violated. Those who edit in good faith, show civility, seek consensus, and work towards the goal of creating a great encyclopedia should find a welcoming environment. Wikipedia greatly appreciates additions that help all people.

இப்போதைக்கு இதுதான்

தொகு

கொள்கைகளும் வழிகாட்டல்களும் ஒரு முக்கிய ஆவணம். இது பல திசைகளில் மேம்படுத்தப்படவேண்டும், விரிபுபடுத்தப்படவேண்டும், தெளிபுபடுத்தப்படவேண்டும். --Natkeeran 19:29, 18 அக்டோபர் 2006 (UTC)Reply


மீள்பரிசீலனை

தொகு

முக்கிய கொள்கைகள் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படுதல் நன்று. --Natkeeran 17:50, 19 அக்டோபர் 2006 (UTC)Reply

இணக்கப்பட்ட சில புரிந்துணர்வுகள்

தொகு


புரிந்துணர்வுகள் எப்பொழுதும் மீள்பரிசீலனைக்கு உகந்தவையே. --Natkeeran 17:11, 11 நவம்பர் 2006 (UTC)Reply

உதவக் கூடிய வெளி இணைப்புகள்

தொகு

பயனர்கள் மேலே உள்ள கொள்கை/வழிகாட்டல் தொடர்பாக உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் நன்று. --Natkeeran 01:48, 28 ஏப்ரல் 2007 (UTC)

Return to the project page "கொள்கைகளும் வழிகாட்டல்களும்".