விக்கிப்பீடியா பேச்சு:சொல் தேர்வு/தொகுப்பு 3

நல்ல தமிழ்ச் சொற்களை நாம் ஏன் பயன்படுத்த வேண்டும்?

தொகு

தெளிவான புரிதலுக்கு

தொகு
  • "மொத்தத்தில் சொன்னால், மொழியும், அதன் சொற்களும், இலக்கணமும், நடையும் நம்முடைய நடைமுறையையும், பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டவை. என்னுடைய நடைமுறையும், பண்பாடும், பழக்க வழக்கங்களும் உங்களோடு ஓரளவாவது பொருந்தினால் தானே நான் சொல்லுவது உங்களுக்கும், நீங்கள் சொல்லுவது எனக்கும் புரியும்."

http://www.tamil.sify.com/kaanal/fullstory.php?id=13206016&t=Katturaigal


  • "தமிழ்ச் சொற்கள் நம் வாயில் தடையின்று வரவேண்டி இருக்க. மிகக் குறைந்த அளவே தமிழ்ச் சொற்களை அறிந்திருந்தால், அன்றாட வாழ்வில் நுணுகிய கருத்துக்களை தமிழில் எப்படிச் சொல்வது? குண்டுசட்டிக்குள்ளா குதிரை ஓட்ட முடியும்? இதன் விளைவாகத்தான் படித்தவர்கள் ஆங்கிலம் கலந்து பழகுவதும் பண்ணித் தமிழ் பேசுவதும் என இந்தக் காலத்தில் வெளிப்படுகிறது."

http://www.tamil.sify.com/kaanal/fullstory.php?id=13206016&t=Katturaigal

சொற்கள் கூட்டுயிர்ப்பு

தொகு
  • நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தினால் அதனால் விளையும் நன்மைகள் மிகப்பல. ஒரு சொல் பிரிதொரு சொல்லுக்கு வலு சேர்க்கின்றது. இதனை ஒருவகையான மொழியின் உட் கூட்டுயிர்ப்பு எனலாம். கூடியமட்டிலும் நல்ல தமிழ்ச் சொற்களை ஆளுவது பயன் பெருக்குவது. தமிழ்ச் சொற்களை விலக்கி பிறமொழிச் சொற்களை ஆண்டால் தமிழ் மொழியின் உள் இணைப்புகள் அறுகின்றன, வளமும் செழிப்பும் குன்றுகின்றது. எடுத்துக்காட்டாக நமஸ்காரம் என்னும் சொல்லை ஆளுவதை விட வணக்கம் என்று சொல்வது நல்லது (தமிழில்). பொதுவாக ஒரு மொழியில் இருந்து வேறு ஒரு மொழிக்குச் செல்லும் சொற்கள் வினைச்சொல்லாக மாறாது, ஆனால் தமிழின் வளமையால் எச்சொல்லையும் எப்படியும் ஆக்க முடியும். எனவே எனவே நமஸ்காரம் என்பது நமஸ்கரி, நமஸ்கரித்தான் என்று கூட சொல்ல இயலுகின்றது. என்றாலும் வணக்கம் என்னும் சொல், வணங்கு, வணங்கினான், வணக்கம், வணங்காமுடி, வணங்காத்தலை, வணங்கி ஒரு வேலையைச் செய்யமாட்டான், வணக்கம் இல்லாதவன், வணக்கு, வணக்குதல் ( = வளைத்தல்), யானைவணக்கி (யானைப் பாகன், தோட்டி, யானையை வழிக்குக் கொண்டுவருபவன்) என பலவகையாக வளர்ச்சியுறும். தமிழ்ச் சொல்லாய் இருப்பின் பிறசொற்களோடு இயல்பாய் சேர்ந்து பொருள் பெருக்கும் கிளைக்கும். மொழியின் இயல்பான செழிப்பான வளர்ச்சி கருதியே நல்ல தமிழ்ச் சொற்களைப் பரிந்துரைக்கிறேன். --செல்வா 01:58, 16 பெப்ரவரி 2007 (UTC)


ஒருங்கிணைந்த வளர்ச்சி: தமிழ் விக்கிபீடியா - தமிழ் - நல்ல தமிழ்ச் சொற்கள்

தொகு
  • நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவது மிகமிக இன்றியமையாதது. தமிழ்ச் சொற்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் தேவையானது. விக்கிபீடியா போன்ற ஊடகங்கள் தமிழில் அறிவைப் பரவலாக்குவதை முக்கிய நோக்காகக் கொண்டிருந்தாலும் முறையான தமிழ் வளர்ச்சியும் இத்துடன் பின்னிப் பிணைந்தது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். விக்கிபீடியாவும் முன் குறிப்பிட்ட சஞ்சிகைகளைப் போலவே பரந்த செல்வாக்குப் பெறுவதற்குரிய வாய்ப்புக் கொண்ட ஒரு ஊடகம். எனவே இது தொடர்பில் நாம் அசட்டையாக இருக்கக்கூடாது. முறையான தமிழ் மொழி வளர்ச்சி தொடர்பில் முன்னணிப் பங்கு வகிப்பதற்காக முறையில் விக்கிபீடியாவை நாம் உருவாக்குவது அவசியம். Mayooranathan 05:52, 16 பெப்ரவரி 2007 (UTC).


நல்ல வேர்ச்சொல்

தொகு
  • சொல்புழக்கத்தில் ஊடகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. நல்ல வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட புதிய சொற்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. மாணிக்கவாசகரும் தொல்காப்பியரும் பின்னர் வந்தோரும் பயன்படுத்தியிருந்தாலும் ஒரு கலைக்களஞ்சியத்தில் நல்ல தமிழ்வேர்ச்சொற்களைப் பயன்படுத்துவதால் நல்லதுதானே? (பொதுவழக்கு மற்றும் பழைய அகராதியில் உள்ள சொற்களையும் மாற்றுச் சொற்களாகத் தரலாம்). சில பொதுப்பயன்பாட்டுச் சொற்கள் முதன்மையாக வடமொழியிலும் தமிழ்வேர்ச்சொற்கள் அடைப்புக்குறிக்குள்ளும் தரப்பட வேண்டும் என்பதில் உடன்படுகிறேன். இது தொடர்பான நமது பழைய உரையாடலை ஒருமுறை பாருங்கள். -- Sundar \பேச்சு 17:45, 15 பெப்ரவரி 2007 (UTC)

தேவையற்ற கேள்வி

தொகு

விக்கி எழுதுபவர்களும் படிப்பவர்களும் நல்ல தமிழை விரும்புபவர்கள் என்று சொல்லாமலேயே எல்லொருக்கும் தெரியும். அதனால் அது பொருத்தம் என் நிரூபிக்கவே வேண்டாம்.--விஜயராகவன் 09:16, 17 பெப்ரவரி 2007 (UTC)

Return to the project page "சொல் தேர்வு/தொகுப்பு 3".