விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று

கருத்து வேறுபாடுகள் தொகு

  • ஒரு தமிழ் வளர்ச்சி மையம் அன்று.

தமிழ் மொழி வழியான அனைத்து துறை சிந்தனைகள், தகவல்களை குவிப்பது தமிழ் விக்கிபீடியாவின் அடிப்படை நோக்கம் தான் என்றாலும், இது ஒரு தமிழ் வளர்ச்சி மையம் அன்று என்பதை நினைவில் கொள்ளலாம். இம்மாதிரியான பங்களிப்புகளை மட்டும் தர விரும்புவோர், தமிழ் விக்சனரிக்குப் பங்களிக்கலாம். அளவுக்கு மிஞ்சிய தூய தமிழ் நடையை கட்டுரைகளில் திணிப்பதைத் தவிர்க்கலாம். இது குறித்த அளவுக்கு அதிகமான கலந்துரையாடல்கள் சில நேரங்களில் கட்டுரைகளுக்கு பங்களிப்பதிலிருந்து, பயனர்களை திசை திருப்பக் கூடும்.

தமிழ் விக்கிபீடியா நிச்சியமாக தமிழின் ஒரு வளர்ச்சி முனைதான். தூய தமிழ் இது, தூய தமிழ் இதுவல்ல என்பதற்கு இறுதியான எல்லை கிடையாது. சோ, என்ன மெசேச் சொல்ல வருறன் என்றால் தமிழ் விக்கிபீடியா இயன்ற வரை எளிய தமிழ் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கவேண்டும். --Natkeeran 14:03, 14 ஜூன் 2006 (UTC)
இந்த கொள்கையை வேறுவிதமாக சொல்ல முயலுவோம். மொழி வளர்ச்சி என்பது தமிழ் விக்கிபீடியாவின் மைய நோக்கம் அல்ல என்றாலும் கூடியவரை நல்ல தமிழைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் இத்தேவையை பயனர்கள் மீது திணிக்க வேண்டாம். விரும்பும் பயனர்கள் எப்போதும் போல் வாக்கியங்களை மாற்றியமைக்கலாம். தனிப்பட்ட முறையில் எனது விருப்பத்தை இங்கே ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். இது தொடர்பாக பிறர் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும். -- Sundar \பேச்சு 15:03, 14 ஜூன் 2006 (UTC)

பல கட்டுரைகளில் இந்த தன்மை பாதிக்கிறது. [உ-ம்] விருத்த சேதனம் என்ற கட்டுரைத் தலைப்பு. நடைமுறையில் இந்த வார்த்தை பயன்படுத்துவதில்லை. விக்கி பயனர்கள் இதனால் மிதமிஞ்சிய தமிழை அறிந்து கொண்டாலும், எளிமைத் தன்மை பாதிக்கப்படுவதாக தோன்றுகிறது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. நன்றி.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

  • பொதுவழக்கில் உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்க வேண்டும்.
பொது வழக்கு என்று ஒன்று எல்லா விடயங்களிலும் இருக்க மாட்டாது. குறிப்பாக இலங்கை வழக்கு, தமிழக வழக்கு என்று உச்சரிப்பில், சொற் பிரயோகங்களில் இருக்கின்றது. அனைத்து விடயங்களிலும் தமிழக வழக்கை பொது வழக்கு என்பதோ, அல்லது இலங்கை வழக்கை தமிழ் விக்கிபீடியா வழக்கு ஆக்குவதோ ஏற்றுக்கொள்ளப்படகூடியதாக அமையாது. இதை நோக்கிய ஒரு புரிந்துணர்வு தேவை. இப்பொழுது உச்சரிப்பை பொறுத்தவரை யார் கட்டுரையை இடுகின்றார்களோ அந்த உச்சரிப்பை கட்டுரையை பின்னர் மேம்படுத்துவர்கள் பின்பற்றினால் நன்று என்ற புரிந்துணர்வில் இயங்குகின்றோம். எனினும் இது ஒரு நிரந்தர தீர்வாக அமையுமா?
தமிங்கிலிஸ் பொதுவழக்காக தமிழ்நாட்டில் வரக்கூடும், அதற்காக அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? எனவே ஒவ்வொரு விடயத்தையும் தனித்தனியாக ஆய்ந்து ஒரு நிலை எடுக்க வேண்டும். தமிழுக்கு ஒரு நடுவண் அமைப்பு என்று ஒன்று அறிதியாக கிடையாது. எனினும் தமிழ்நாடு அரசே அப்படி செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பித்தக்கது. --Natkeeran 14:03, 14 ஜூன் 2006 (UTC)
இக்கொள்கையை அதிகம் அலசாமல் நானே ஏற்றினேன். இது பற்றி கலந்துபேசி முடிவெடுக்க வேண்டும். உங்கள் ஐயப்பாடு மிகவும் சரி. பொது வழக்கு என்பதற்கு மாற்றாக "தரப்படுத்தப்பட்ட" அல்லது "முறைசார்" என்று குறிப்பிடலாமோ? மேலும், த.வியில் நடை விதிமுறைகள் இல்லாதவிடங்களில் மட்டும் இது செல்லுபடியாகும்படி செய்யலாமா? -- Sundar \பேச்சு 15:03, 14 ஜூன் 2006 (UTC)

தலைப்பு சற்று உறுத்துகின்றது, பின்வரும் தலைப்பையும் பரிசீலியுங்களேன்: தமிழ் விக்கிபீடியா இவை அன்று --Natkeeran 14:03, 14 ஜூன் 2006 (UTC)

நீங்கள் பரிந்துரைத்துள்ள தலைப்பு நன்றாக உள்ளது. -- Sundar \பேச்சு 15:03, 14 ஜூன் 2006 (UTC)
இதன் முன்னர் இருந்த தலைப்பு என்னவென்று தெரியாது.இப்போதுள்ளது சற்று குழப்பமேற்படுத்துவதாக எண்ணுகிறேன். அன்று என்பது அல்ல என்ற எதிர்மறையையும் அந்நாள என்ற காலச்சுட்டினையும் குறிப்பதால் விக்கிப்பீடியா அன்று எவ்வாறு இருந்தது என்னும் வரலாற்று பக்கமாக மயங்கினேன். அல்ல என்ற விகுதி பற்றி ஏதேனும் தயக்கம் உண்டா ? ஐயம் திரிபற "தமிழ் விக்கி இவையெல்லாம் அல்ல" என வைக்கலாமோ ? ---மணியன் 09:30, 17 செப்டெம்பர் 2009 (UTC)Reply
நல்ல பரிந்துரை. "தமிழ் விக்கி இவையெல்லாம் அல்ல" அல்லது "தமிழ் விக்கிப்பீடியா வை அல்ல" போன்ற ஒரு தலைப்பைத் தேர்வு செய்யலாம். மணியன், உங்கள் தமிழ் இனிக்கிறது. :-) -- சுந்தர் \பேச்சு 16:15, 17 செப்டெம்பர் 2009 (UTC)Reply

எழுத்து சீர்திருத்தம் செய்ய தமிழ் நாடு அரசுக்கும், சிறீலங்கா அரசுக்கும் உரிமை இருக்கு (மக்களின் வாக்குரிமை பெற்றதால்), ஆனால், யுனிக்கோடு, infitt போன்றவைகளுக்கு கிடையாது, எனினும், இவ்வகை நிறுவனங்கள் பொதுமக்களின் ஒப்புதலோ, அல்லது அவர்களுடன் கலந்தாலோசிக்காமலோ, எத்தனையோ மாற்றங்களைப் புகுத்தியிருக்கின்றன. உண்மையான தமிழ் நலம் பேணும் அறிஞர்களின் கருத்துகளைக் கேளாமல் இயங்கி வந்துள்ளன (இராம.கி, மணிவண்ணன் போன்றவர்களைக் கேட்டால் தெரியும்). எனவே இங்கு இது ஒரு கொளகையாக வைத்துள்ளது சரியா என்று விளங்க வில்லை. விக்கியில் பங்கு கொள்பவர்கள், விக்கி பீடியாவின் ஆக்கங்களால் மக்கள் எப்படி பயன் பெறுவார்கள் என்பதே தலையாய குறிக்கோள்களுள் ஒன்றாக இருக்கும் என நம்புகிறேன். உண்மையான பயன்பாடு கருத வேண்டும்.--C.R.Selvakumar 23:17, 16 ஜூன் 2006 (UTC)செல்வா

செல்வா, ஒரு திருத்தம். மக்களின் வாக்குரிமை பெற்றதால் சீர்திருத்தம் செய்ய உரிமை உண்டென்றால், அந்த உரிமை சிறீலங்கா அரசுக்கு இல்லை. அது தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிந்தெடுக்கப்பட்டதல்ல.--Kanags 23:33, 16 ஜூன் 2006 (UTC)
கனகு, என்கருத்தும் அதுவே. நான் சிறீலங்கா அரசு என்று எழுதி பிறைக் குறிகளுக்குள் எழுதியதன் பொருளே அதுதான். அதிலும் இன்னும் பல கோணங்கள் உண்டு. பெரும்பான்மை ஒருக்கால் உண்மையிலேயே ஒரரசு பெற்றிருப்பதாலும் அது எது வேண்டுமானாலும் செய்யவும் கூடாது, உரிமையும் கிடையாது. கடமை, பொது நலம், பொறுப்புகள் என பல இருக்கின்றன. --C.R.Selvakumar 00:28, 17 ஜூன் 2006 (UTC)செல்வா

தமிழ் வளர்ச்சி மையம் அன்று என்பதை இரவி இப்பக்கத்தில் சேர்த்தது ஒரு குறிப்பிட்ட விசயத்தில் இருந்த நிலைப்பாட்டைக் காட்டும் பொருட்டு என நினைக்கிறேன். என் நினைவில், செல்வா புதியமுறை ஒலிபெயர்ப்புக் குறியீட்டை முன்வைத்தபோது அதன் நோக்கம் தமிழ் நலம் காப்பதாக இருந்தாலும் இங்கு அறிமுகப்படுத்த வேண்டாம் என்ற நோக்கில் இரவி சேர்த்தார் என நினைக்கிறேன். ஆனால், அதை மொழிச் சோதனைக் களம் அல்ல போன்ற குறிப்பால் சொல்லலாமென நினைக்கிறேன். ஏனெனில், இலக்கணம், நடை, எழுத்து என எங்கும் சரியான பயன்பாடு என முன்வைக்கும்போது இந்தக் குறிப்பு சுட்டப்படுகிறது. இதைச் சேர்த்த நோக்கம் வேறு என்பதால் மாற்ற வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 11:35, 22 சனவரி 2012 (UTC)Reply

பொதுவழக்கில் உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்க வேண்டுமா தொகு

ஏற்கனவே "பொதுவழக்கில் உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்க வேண்டும்." என்னும் தொடர் பற்றி இங்கு உரையாடல் நிகழ்ந்துள்ளது. இதனை முன்வைப்பதில் பல இடர்ப்பாடுகள் உள்ளன. எது , பொது, பொதுவழக்கு என்பவை யாவை என்று நிறுவாமல், உள்ளது உள்ளபடி பிரதிபலிக்க வேண்டும், என்று கூறுவதும், அப்படி இருக்கவும் இயலுமா என்று ஒரு சிறிதேனும் எண்ணி, கருத்தாடாமல் இங்கு விக்கிப்பீடியா பக்கத்தில் "கொள்கைபோல்" ஒருசிலரால் முன்வைத்து இருப்பது தவறு. எளிமையாக, படிப்பவர் புரிந்துகொள்ளுமாறு நல்ல நடையில் இருக்க வேண்டும் என்பது தேவை. "உள்ளது உள்ளபடியே பிரதிபலிக்க வேண்டும்" என்னும் கூற்று இங்கு பொருளற்றது. பல இடங்களில் பல நடைகள் உள்ளன. இதழ்களிலும் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சி, வானொலி, பாடநூல்கள் என்று பல்வேறு ஊடகங்களிலும், பல நடைகள் உள்ளன. எழுதுவது புரியும் படியாக, நல்ல நடையில் இருக்க வேண்டும் என்று சொன்னால் போதாதா? பொருளற்ற இவ்வரியை நீக்க வேண்டுகிறேன். நான் விக்கியில் சேர்ந்த புதிதில், ரவி தன்னிச்சையாக எழுதி வைத்தது இத்தொடர் (இப்பக்கமும்). --செல்வா 16:10, 27 ஏப்ரல் 2008 (UTC)

ஆம், அப்போது அடிக்கடி பங்களிப்பவர்கள் குறைவு. இதைச் சற்று (இரு நாட்கள்) ஆறப்போட்டு பின் தகுந்த மாற்றங்கள் செய்யலாம் என்பது என் கருத்து. கொள்கை முடிவுகள் எடுக்கப்படுவதற்குப் பின்னால் இருந்த நேர்மையான காரணங்கள் தரப்பட்டால் படிப்பவர்களுக்கு ஏற்பு மிகும். -- சுந்தர் \பேச்சு 17:19, 27 ஏப்ரல் 2008 (UTC)

பொதுவழக்கில் உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்க வேண்டும் என்ற சொற்றொடரில் உள்ள குறைபாட்டையும் இது குறித்து செல்வா எழுப்பியுள்ள வினாக்களை ஒப்புக்கொள்கிறேன். இந்த வரைவை எழுதுகையில் தமிழ் விக்கிப்பீடியாவில் நிலவிய சூழல்களை ஒட்டியும் இச்சொற்றொடரை எழுதினேன். குறிப்பாக, அங்கு தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டில் உள்ளபடி நுட்பச் சீர்த்திருத்தங்களைக் குறித்தே அந்த சொற்றொடர் எழுதப்பட்டது. மொழிநடையை நினைத்து எழுதவில்லை. ஏனெனில், பல இடங்களில் மொழி நடை குறித்து விரிவாக அலசி இருக்கிறோம். எல்லா விசயங்களிலும் பொது வழக்கை உள்ளது உள்ளபடி பிரதிபலிக்கத் தேவையில்லாத அதே நிலையில் தமிழ் விக்கிப்பீடியாவை முழுக்க சோதனை கூடமாக, சீர்திருத்தக் களமாக இட்டுச் செல்வதற்குரிய போக்குகள் குறித்தும் உரிய கவனம் தர வேண்டும். எப்படி இந்தச் சொற்றொடரை வைத்து பொது வழக்கில் உள்ளதைத் தான் எதிரொளிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டப்படுகிறதோ அதே போல் தகுந்த கொள்கை இல்லாத நிலையில் எல்லா சோதனைகளுக்கும் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் நிலை வந்து விடக்கூடாது. ஒரு திறந்த கொள்கை இருந்தால் என்னென்ன சீர்திருத்தங்கள், சோதனைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் மேற்கொள்ளப்படும் என்பதற்கு எந்தக் கட்டுப்பாடும் நம்மிடம் இருக்காது. முழு தமிழ் விக்கிப்பீடியாவையும் பாதிக்கக்கூடிய கொள்கைகளை ஒவ்வொன்றாகத் தனித்தனியாக ஆய்ந்து பார்த்தே ஏற்பதா தள்ளுவதா என்று பார்க்க வேண்டும்.--ரவி 17:48, 27 ஏப்ரல் 2008 (UTC)

Return to the project page "தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று".