விக்கிப்பீடியா பேச்சு:படிமக் கொள்கை

படிமங்கள் பற்றி நாம் இதுவரை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. 10,000 கட்டுரைகளை எட்டும் போது இது முக்கியமாக நோக்கப்படும்.

Fair use

(இதற்கு தமிழ் என்ன?) படிமங்களுக்கான விதிமுறைகள விரிவு படுத்தப்பட வேண்டும். இதன்போது ஆங்கில விக்கியளவு கடுமையான விதிகள் தேவையற்றவை எனினும் சில விதி முறைகளை ஆக்குவது நலம். (ஏ+கா இணைய தளத்தின் பெயர் கொண்ட படிமங்கள்) விதிகள் தெளிவாக எழுதப்படுவது விக்கியில் சனநாயகத்தை மேம்படுத்த உதவும்.

மூலம்

இக்குறையை நானே பலமுறை விட்டிருக்கிறேன். படம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதற்கான மூலம் கட்டாயம் சேர்க்கப்படல் வேண்டும்

பொது உரிமம்

பொது உரிமம் தொடர்பான படிமங்களில் வெறுமனே அதை குறிக்காமல் ஏன் (சொந்த படைப்பு, காலத்தால் முந்தியது, இந்திய பதிப்புரிமைச் சட்டப்படி...) என்பதைக் குறித்தல்

நீக்கம்

பொறுத்தமற்ற படிமங்கள் நீக்குவதற்கான ஒரு விதி முறை வேண்டும்.

--டெரன்ஸ் \பேச்சு 13:33, 6 டிசம்பர் 2006 (UTC)

படிமங்களை வகைப்படுத்துவது பற்றி நாம் இப்போது சிந்திப்பது மிகவும் நல்லது. எனினும் காப்புரிமைப் பற்றி பலரின் கருத்துக்களிலிருந்து நான் சற்று மாறுபடுகிறேன். நான் படிமங்களைப் பதிவேற்றும் போது முடிந்தவரை அப்படிமம் சம்மந்தப்பட்ட அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து எடுக்கிறேன். அப்படி முடியாவிட்டால் கூகில் செய்து எடுத்துக்கொள்கிறேன். காப்புரிமைப் பற்றி நான் பெரிதும் அலட்டிக்கொள்வதில்லை.

பாலாஜி, இங்கு உங்களிடம் முற்றிலும் வேறுபடுகின்றேன். முற்றிலும் கட்டற்ற முறையில் இருப்பதுதான் தொலைநோக்கில் நல்லது. இங்கு வரும் ஒரு பயனர், ஒரு படத்தை பிரதி செய்து பயன்படுத்தும்பொழுது அதன் பதிப்புரிமை பற்றி பயப்படாமல் பயனபடுத்தும் வண்ணம் இருக்க வேண்டும். நாம் கட்டற்ற படங்களை மட்டுமே பயன்படுத்துவோம் என்றால், அவர்களும் அப்படி அனுமதி தர முன்வருவார்கள். அப்படியான ஒரு சூழலே நன்று. இந்த நோக்கிலான சிந்தனையே கட்டற்ற என்ற கொள்கைக்கு பொருந்தும். மேலும், Creative Commons, GNU GPL, Wikipedia Commons, NASA என்று படங்கள் கிடைக்கின்றன. தமிழ் நாட்டு அரச தளங்களையும் தங்கள் படங்களை PL தர வேண்டும் என்று வேண்டுதல் விட வேண்டும். இதுவே தொலை நோக்கில் சரியான வழி. --Natkeeran 01:36, 9 டிசம்பர் 2006 (UTC)
நற்கீரனுடன் உடன்படுகிறேன். உண்மையில், விக்கிபீடியா போன்ற பொதுநல அமைப்பின் மீது அதுவும் தமிழ்நாட்டில் யாரும் வழக்கு போட மாட்டார்கள் என்பது உண்மை தான். போட்டாலும் ஒரு தலைமுறைக்கு வழக்கு இழுக்கலாம். ஆனால், இங்கு விதயம் மாட்டிக் கொள்கிறோமா என்பது பற்றி இல்லை. நாம் செய்வது சரியா என்பது தான். (நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே சரிங்கிறீங்களா ;)) பாலாஜி, ஓரிரு மாதங்கள் முன்பு வரை நான் கூட உங்கள் மனப்பான்மையுடன் தான் இருந்தேன். ஆனால், இப்பொழுது கருத்து மாற்றங்களை கொண்டுள்ளேன். ஒரு பயனுள்ள கலைக்களஞ்சியத்தை உருவாக்குகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவு அது முறையானதாகவும் கட்டற்றதாகவும் இருக்க வேண்டும் என்பதும் முக்கியம். நாளை தமிழ் விக்கிபீடியா இறுவட்டுகள், தமிழ் விக்கிபீடியா அச்சுப் பதிப்புகள் வரும். அப்பொழுது, நம் படிமங்களை பயன்படுத்த முடியாமல் போவதால் என்ன நன்மை? கலைக்களஞ்சியத்தை வளர்ப்பதோடு, கட்டற்ற செயல்பாடு, கொள்கை, ethics, principles, பண்பாடு ஆகிய இதரக் கூறுகளையும் நம் தமிழ்ச்சூழலில் வளர்க்க முற்படலாமே? அதற்கு விக்கிபீடியா ஒரு களமாகவும் முன்மாதிரியாகவும் ஏன் இருக்கக்கூடாது? நாம் எவ்வளவு தான் பூசி மெழுகினாலும் காப்புரிமை மீறல் என்பது ஒரு திருட்டு தான். யாரும் கண்டுபிடிக்கும் வரை திருடலாம், ஊர்க் காரியத்துக்காக திருடலாம் என்று உண்டா என்ன? திருட்டு திருட்டு தான். தற்பொழுது கட்டற்ற படிமங்கள் குறைவாக இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், எண்மப் படக்கருவிகளின் பெருக்கத்தால், படிமங்களை பகிர்ந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதை flickr போன்ற தளங்களில் கவனிக்கலாம். அடுத்த முறை ஊருக்கு போகும்போது நானே கூட சில படங்களை எடுத்து இப்படிப் பகிரலாம். நிலைமை வெகு விரைவில் மாறும், பாலாஜி.
பொதுவாக தமிழ்நாட்டில் அச்சு நூல்களை படி எடுப்பது, திரைப்பட வட்டுக்களை படி எடுப்பதை குற்ற உணர்வு இல்லாமல் செய்து கொண்டிருக்கிறோம். அதே தவறை நாம் விக்கிபீடியாவிலும் செய்ய வேண்டாமே. இதன் மூலம் தமிழ்ச் சமூகத்தில் பிறரின் படைப்புகளுக்கு மதிப்பு தரும் நற்பண்பை வளர்த்தெடுக்கலாம். தவிர, கீழே நற்கீரன் சொல்லி உள்ள அனைத்துக் கருத்துக்களுடனும் முழுக்க உடன்படுகிறேன்--Ravidreams 10:31, 9 டிசம்பர் 2006 (UTC)


உரையாடல் பக்கங்களில் நிறைய எழுத விரும்பாததால், சுருக்கமாக பதிலளிக்க முயற்சிக்கிறேன்!
1. நாம் தீர்க்க விரும்பும் பிரிச்சனையை முதலில் தெளிவாக்கிக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். படிமங்களை பதிவேற்றும் போது அதன் காப்புரிமை நிலையை தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்பதுதான் முக்கியம். எனவே tag மற்றும் மூலம் குறிப்பிடப்படாத படிமங்களை அகற்றுவதை நான் ஆதரிக்கிறேன்.
2. எனினும் பயணர்களின் பங்களிப்புகள் மேலும் அதிகரிக்க வேண்டுமென்றால் possibly non-free என்று வரையறுக்கத்தக்க படிமங்களையும் நாம் அனுமதிக்க வேண்டும். அத்தகைய படிமங்கள் எப்போது அகற்றப்பட வேண்டுமென்பது த.வி.யின் கொள்கையைப் பொருத்தது. (சில ஆண்டுகள் என்று வைத்துக்கொள்வதுகூட நல்லது!)
3. நல்ல நோக்கம் (GFDL) மற்றும் நடைமுறைச் சாத்தியம் (rampant piracy in India) இரண்டிற்கும் நடுவில் நாம் செயல்பட வேண்டியிருக்கிறது. இப்போது த.வி.யில் பங்களிப்போரில் பலர் வளர்ந்த நாடுகளிலிருப்பது கவணிக்கத்தக்கது. தமிழ்கம், ஈழம், சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களிலிருந்து பெருமளவில பங்களிப்புக்கள் வரவேண்டும். நமக்கு நேரம் மட்டுமே முதலீடாக இருக்கலாம். அவர்களுக்கு இணையத் தொடர்புக்கான செலவு உள்ளிட்ட பல முதலீடுகள் இருக்கலாம். அதற்கு எற்றார் போல த.வி. கொள்கைகளை ஏற்படுத்த வேண்டும்.
4. த.வி.யில் பங்களிக்க வருபவர்களின் கொள்கைகளை மாற்ற நாம் முயற்சிக்கத் தேவையில்லை! நான் விண்டோஸ் உள்ளிட்ட காப்புரிமையுள்ள மென்பொருள்களை (முறையாக வாங்கியிருந்தும்) முற்றிலிலுமாகப் புறக்கணிக்கிறேன். அதனால் இந்தியாவில் pirated விண்டோஸ் பயன்படுததுவோரை நான் குறை சொல்ல வேண்டுமா என்ன?்
5. நான் பதிவேற்றிய படிமங்கள் அனைத்தும் public domain, fairuse, possibly non-free என்று வரையறுக்கத்தக்கவையே. பெரும்பாலானவற்றுக்கு நான் மூலத்தையும் குறிப்பிட்டுள்ளேன். எனினும் தங்களுக்கு ஆட்சேபனையிருந்தால் அவற்றை அகற்ற முன்வருகிறேன்.
பாலாஜி 16:56, 9 டிசம்பர் 2006 (UTC)

காரணங்கள்:

1. GPLலில் வெளியிடப்படும் படிமங்கள் மிகவும் குறைவே. ஊடகங்களில் வெளியிடப்படும் படிமங்களை நாம் பயன்படுத்துவதை அதன் உரிமையாளர்கள் ஆட்சேபிக்கிறார்கள் (அல்லது ஆட்சேபிப்பார்கள்) என்பதற்கு தற்போது நம்மிடம் தெளிவான Pointers எதுவும் இல்லை. த.வி. போன்ற பொது நல அமைப்புகள் மிது யாரும் வழக்கு போடமாட்டார்களென நம்புவோம்.

குறைவாக இருக்கலாம், ஆனால் நீங்கள் படங்களை எடுத்து அப்படி பகிரும் பொழுது அந்த பொதுச் சொத்து வட்டம் விரியும். இப்பொழுது பலரும் digital camara மூலம் படம் எடுத்து பகிர முற்படுகின்றார்கள். அப்படியான படங்கள் காலப்போக்கில் பெருகும் என்றே எதிர்பார்க்கலாம். --Natkeeran 01:36, 9 டிசம்பர் 2006 (UTC)

2. எனினும் யாரேனும் ஆட்சேபித்தால் அப்போது குறிப்பிட்ட அந்த படிமத்தை நீக்கிவிட்டால் போகிறது. கூகுல் விடியோ, யூடியுப் போன்ற வனிக நிறுவணங்களே கூட இதே கொள்கையைப் பின்பற்றுகின்றன. ஆட்சேபத்திற்குரிய படிமத்தை நாம் நீக்கத் தயாராக இருக்கும் வரை த.வி சட்டரீதியாக Vulnerable இல்லை என்றே நினைக்கிறேன்.

அப்படிப்பட்ட வணிக நிறுவனங்கள் செய்வதால் பொது நல - இலாப நோக்க மற்ற த.வி. செய்ய வேண்டும் என்று சொல்வதின் தர்க்கம் புரியவில்லை. எனது கருத்து என்னவென்றால் பயனர் த.வி. படம் ஒன்றை தரவிறக்கம் செய்யும் பொழ்து 100% வீதம் பதிப்புரிமை பற்றி கவலைப்படாமல் தரவிறக்க வேண்டும். --Natkeeran 01:36, 9 டிசம்பர் 2006 (UTC)

3. நமக்கு முன்பாக இரண்டு வழிகள் இருக்கின்றன. FUDக்கு (Fear, Uncertanity and Doubt) பயந்து படிமங்களை சேர்க்காமல் இருப்பது! அல்லது படிமங்களை (மூலத்தோடு) சேர்த்து த.வி.யை பயனர்களுக்கு மேலும் சிறப்பாகத் தருவது!

மேலே சுட்டியபடி, அனேக கட்டுரைகளுக்கு PD, GNU GPL, CC ஆகிய கட்டற்ற உரிமைகளுடன் படம் கிடைக்கும், கிடைக்கின்றது. இது FUD இல்லை. இது விடுதலை பற்றியது.
இவை எனது தனிப்பட்ட கருத்துக்களே. த.வி. தெளிவான நிலைப்பாடு தற்சமயம் இல்லை, ஆனாலும் பதிப்புரிமை உள்ள படங்களை அனுமதி இன்றி சேர்க்கப்படாததென்பதே எமது புரிந்துணர்வு, மற்றும் ஆ.வி. கொள்கை. --Natkeeran 01:36, 9 டிசம்பர் 2006 (UTC)

பரிந்துரைகள் தொகு

ஆண்டு அறிக்கை தொடர்பாகவும் பிற சில பக்கங்களிலும் தொடர்ந்து உரையாடி வந்ததை ஒட்டி சில பரிந்துரைகளை முன் வைக்கிறேன்.

1. பயன்படுத்தப்படாத படிமங்களில் நீங்கள் பதிவேற்றிய படிமங்கள் எதையும் தற்போது பயன்படுத்த முடியுமா என்று பாருங்கள். உடனடியாக பயன்படுத்த இயலாத ஆனால் வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் படிமங்கள் காப்புரிமை விலக்கு பெற்றிருந்தால் அதை காமன்சில் பதிவேற்றுங்கள். பதிவேற்றிய பின் எவை எவற்றை அழிக்க வேண்டும் என்ற பரிந்துரையை நீங்களே wikipedia:படிம நீக்கப் பரிந்துரை பக்கத்தில் தாருங்கள். உடனடியாக பயன்படுத்த இயலாத ஆனால் வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் படிமங்கள் காப்புரிமை விலக்கு இல்லாதிருந்தால் அவற்றை பற்றிய இயன்ற அளவு உரிமை தகவல்கள், எங்கிருந்து எடுக்குப்பட்டது ஆகிய தகவல்களை தாருங்கள். ஒரு விவரமும் தெரியாத, பயன்படுத்த இயலாத படிமங்கள் பட்டியலை wikipedia:படிம நீக்கப் பரிந்துரை பக்கத்தில் தாருங்கள். இதற்கு ஒரு மாதம் காலக்கெடு என்று வைத்து வரும் போகித் திருநாள் என்று அழித்து விடலாம் :) அன்று பழையன கழியலாம் தானே :)

காணாமல் போன பயனர்களின் கேட்பாரற்ற பெறுமதியற்ற உரிமை தகவலற்ற படிமங்கள் அறிவிப்பின்றி அழிக்கப்படும். ஒவ்வொரு பக்கத்துக்கும் சென்று அறிவிப்பு இட்டு நீக்குவது நிர்வாகிகளுக்கு கூடுதல் வேலை சுமை !

2. ஏற்கனவே இருக்கிற காப்புரிமை விலக்கு இல்லாத படிமங்களுக்கு மாற்றாக காப்புரிமை விலக்கு உள்ள படிமங்கள் கிடைக்கப்பெற்றால் அறிவிப்பின்றி அவற்றை பதிலீடு செய்யலாம்.

3. காப்புரிமை விலக்கு பெற்ற படிமங்களையே முன்னுரிமை கொடுத்து தமிழ் விக்கிபீடியாவில் சேர்க்க முன்வர வேண்டும். அப்படி சேர்க்கும் படிமங்களை இங்கு பதிவேற்றாது காமன்சில் பதிவேற்ற வேண்டும்.

4. காப்புரிமை விலக்கு இல்லாத படிமங்கள் கிடைக்கப்படாத பட்சத்தில் செய்தித் தளங்கள் போன்ற பொதுத் தளங்களில் இருந்து படிமங்களை எடுக்கலாம். ஆனால், படிமம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

5. சிலைகள், கலைப்படைப்புகள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த படிமங்களை குறித்த வலைத்தள ஆசிரியருக்கு முறையாக எழுதி அனுமதி கேட்டே பயன்படுத்த வேண்டும்.

6. அனைத்துப் படிமப் பக்கங்களுக்கும் காப்புரிமை விளக்க வார்ப்புருக்கள் இடப்பட வேண்டும். இது குறித்த வார்ப்புருக்கள் உருவாக்கப்படுவதோடு படிமங்களை உரிமம் வாரியாகவும் பொருள் வாரியாகவும் பகுக்க வேண்டும்.

7. எங்கிருந்து எடுக்கப்பட்டது என்றே தெரியாமல் இருக்கும் பயன்பாட்டில் இருக்கும் படிமங்களை அறிவிப்பு இட்டு நீக்க வேண்டும்.

--Ravidreams 19:25, 13 டிசம்பர் 2006 (UTC)

Return to the project page "படிமக் கொள்கை".