விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு

தொகுப்பு

தொகுப்புகள்


1 |

புதிய தானியங்கி இற்றை தொகு

முதற்பக்க பராமரிப்பாளர்களே,

வார்ப்புரு:Mainpage v2 பக்கத்தை நாம் தொகுக்காமல் அப்படியே முதற்பக்கம் இற்றைப் படுத்த சூர்யபிரகாசும், யுவராஜ் பாண்டியனும் லுவா நிரல் மொழியைக் கொண்டு ஒரு புதிய வழியை உருவாக்கியுள்ளனர். - Module:Main page. இதன் மூலம் mainpage v2 வைத் தொகுக்கத் தேவையில்லை. நாம் எப்போதும் உருவாக்கும் துணை வார்ப்புருகளை சரியான தேதி தலைப்பிட்டு உருவாக்கி வைத்து விட்டால் தானே இற்றையாகி விடும். இதற்கான மாதிரி mainpage v3 பக்கம் இதோ.

இந்த முறையை நாம் பின்பற்றத் தொடங்கினால், முதற்பக்க பராமரிப்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியன.

1) துணை வார்ப்புருக்களை கவனமாக உருவாக்க வேண்டும். எ.கா ஜூன் 23 தேதிக்கான வார்ப்புரு (உ.தா, கட்டுரை, சிறப்புப் படம்) ஏதாவது ஒன்றை உருவாக்கினால், அது காட்சிக்குத் தயாராகும் வரை {{underconstruction}} வார்ப்புரு கண்டிப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஜூன் 23 ஆம் தேதி {{underconstruction}} இல்லாமல் அப்படியொரு வார்ப்புரு இருப்பின் அது தானாக முதற்பக்கத்துக்குப் போய் விடும். எனவே முழுமையாகத் தயாராகும் வரை இவ்வார்ப்புருவினை நீக்க வேண்டாம்

2) தலைப்புகளில் மாதங்கள் பெயர்களில் தற்போது சீர்மை தேவைப் படுகிறது. மொழிபெயர்ப்பு விக்கியில் இருந்து மாதப் பெயர்கள் எடுக்கப்படுகின்றன. முன்பு பிற விக்கித் திட்டங்களில் முறிவு ஏற்பட்டதால், கிரந்தமற்ற, தமிழ் இலக்கணப்படியான பெயர்கள் (சனவரி, பெப்ரவரி, மார்ச்சு, ஏப்பிரல், சூன், சூலை, ஆகத்து, செப்டெம்பர், அக்டோபர், நவம்பர், திசம்பர்) மொழிபெயர்ப்பு விக்கியில் மாற்றப்படவில்லை. எனவே தற்போது அங்கு (ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டெம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்) ஆகிய பெயர்களே உள்ளன. எனவே அங்கு முழுமையாக மாறும் வரை (அல்லது மாறினாலும்) இரண்டு வகைப் பெயர்களுக்கும் வழிமாற்று தந்து உருவாக்க வேண்டும். இது சிறிது வேலையை அதிகப்படுத்தினாலும் நமக்குப் பாதுகாப்பானது. புதிய மாத மாறிகள், நிரல் மாற்றம் ஏற்பட்டாலும் முறிவின்றி வழிமாற்றுகள் காப்பாற்றிவிடும்.

இவ்விரண்டையும் முதற்பக்க பராமரிப்பில் கடந்த மூன்றாண்டுகளாக ஈடுபட்டு வருவோரும் இனி ஈடுபட விரும்புவோர் அனைவரும் மனதில் கொண்டால் இந்த மாற்றத்தை செய்து விடலாம். நமக்கு வேலைப்பளு குறையும். இது குறித்து தங்கள் கருத்துகளை வேண்டுகிறேன். இணக்க முடிவேற்பட்டால் அடுத்த வாரம் மாற்றி விடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 06:08, 29 மே 2013 (UTC)Reply

நல்லது. அப்படியே செய்யலாம். வேலை நடந்து கொண்டிருக்கிறது வார்ப்புருவிலே இதற்கான செய்தியையும் வழங்கினால் என்ன? அதாவது இப்பக்கம் முழுமையாகும் வரை இவ்வார்ப்புருவை நீக்க வேண்டாம் என்பது போல்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:16, 29 மே 2013 (UTC)Reply
  கண்டிப்பாக. அனைவருக்கும் மாதங்களைச் சீர்மையாகப் பயன்படுத்தினால் போதுமானது. சிறப்புப் படத்திற்கு underconstruction வார்ப்புரு ஏதும் தேவையில்லை. ஏனெனில் ஒரு படம், சிறு விளக்கம். ஆனால், உங்களுக்குத் தெரியுமா, முதற்பக்கக் கட்டுரை ஆகியவற்றுக்குக் கண்டிப்பாகத் தேவை. எனவே, இதன் பராமரிப்பாளர்கள் (தற்போதைய, வருங்காலத்திய) கண்டிப்பாக அந்த வார்ப்புருவைப் பயன்படுத்த வேண்டும். இவை, இரண்டு மட்டுமே, தற்போதைய தேவைகள். இவற்றைக் கடைபிடித்தால், தானியக்க இற்றைப்பாடு சாத்தியம். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 06:37, 29 மே 2013 (UTC)Reply
முதற்பக்க வலைவாசல், வார்ப்புரு, பங்களிப்பாளர் அறிமுகம் ஆகியன சீராக குறிப்பிட்ட இடைவெளியில் தற்போது இற்றைப்படுத்தப்படுவதில்லை. இற்றைப்படுத்துவதற்கான வார்ப்புருகளில் தேதியும் இல்லை. தானியக்க இற்றைக்கு மாறும்போது, இவற்றை தேதி கொண்டு செய்ய வேண்டி இருக்குமா? செய்ய வேண்டி இருக்கும் என்றால் செய்யலாம். அதற்கான formatஐத் தெரிவியுங்கள். அப்புறம், வலைவாசல் / பங்களிப்பாளர் அறிமுகம் இருக்கும் இடத்தில் ஒரு நேரத்தில் ஒன்று தான் வரும். வலைவாசல்கள் தீர்ந்த பிறகு புதிய பங்களிப்பாளர் அறிமுகங்கள் வரும். அதுவும் தீர்ந்த பிறகு, அந்த இடத்தில் வேறு எதையாவது காட்டினாலும் காட்டலாம். இதை எப்படி அணுகலாம்?
ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் உரையாடியபடி, சீரான மாதப் பெயர்களை மட்டும் பயன்படுத்துவது நன்று. ஒரு சிலரே இற்றைப் பணியில் இருப்பதால் இதைக் கவனத்தில் கொள்வது பெரிய விசயம் அன்று. இல்லாவிட்டால், வரும் சில மாதங்களுக்கு ஒட்டு மொத்தமாக சீர்மையான தலைப்புகளில் வெற்று வார்ப்புருக்களை உருவாக்கி வைத்து விடலாம்.
இது மிகவும் தேவையான ஒரு முயற்சி. இதனை முன்னெடுத்த சூரியாவுக்கும் பாண்டாவுக்கும் நன்றி :)--இரவி (பேச்சு) 06:49, 29 மே 2013 (UTC)Reply

  விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:15, 29 மே 2013 (UTC)Reply

இந்த உள்ளடக்கத்தை பிற ஊடகங்களிலும் (எ.கா தமிழ் விக்கி வலைப்பதிவு) தானியக்கமாக பதியக் கூடியவாறு ஒரு நிரல் இருந்தால் உதவியாக இருக்கும். --Natkeeran (பேச்சு) 18:13, 29 மே 2013 (UTC)Reply
சூரியா மற்றும் யுவராஜுவுக்கும் பாராட்டுக்கள். நல்ல முயற்சி. இற்றைப்படுத்தல் பணி மறந்துவிடப்படுவதை இது தடுக்கும். வேலைச் சுமையையும் குறைக்கும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:18, 30 மே 2013 (UTC)Reply
  விருப்பம் நட்கீரன், அருமையான யோசனை. முயல்கிறோம். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 09:05, 30 மே 2013 (UTC)Reply

மிகவும் எச்சரிக்கையுடனேயே இத்திட்டத்தை வரவேற்கிறேன். பெரும்பாலானோர் (வழமையான பயனர்களை விட) முதலில் விக்கிக்கு வருவது முதற்பக்கத்தினூடாகவே. எனவே முதற்பக்கத்தில் எப்போதும் குளறுபடி இருக்கக்கூடாது. முதற்பக்க இணைப்புகள் அனைத்தும் முன்கூட்டியே குறைந்தது ஒரு மாதத்திற்கேனும் இற்றைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஒரு சிறு தவறும் (அது ஒரு குறுகிய நேரம் என்றாலும்) நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எழுதப்படும் நிரல்கள் அனைத்து உலாவிகளிலும் (குறிப்பாக IE இல்) பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். தற்போது அண்மைய மாற்றங்களில் உள்ள நிரல்கள் IE இல் ஏற்றம் பெற வெகு சிரமமாக உள்ளது. இவற்றுடன் இரவி கூறிய கருத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.--Kanags \உரையாடுக 10:15, 30 மே 2013 (UTC)Reply


உங்கள் கருத்துகளுக்கும் யோசனைகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே. அவற்றைக் கருத்தில் கொண்டு படிப்படியாக இதனைச் செயல்படுத்தத் தொடங்குகுவோம். முதற் கட்டமாக. உங்களுக்குத் தெரியுமா பகுதியும் சிறப்புப் படம் பகுதியும். அடுத்த வாரம் ஜூன் 5 ஆம் தேதியில் இருந்து வெள்ளோட்டாமாக மாற்றப்படும். --சோடாபாட்டில்உரையாடுக 11:02, 31 மே 2013 (UTC)Reply

உங்களுக்குத் தெரியுமா பகுதியும் சிறப்புப் படம் பகுதியும் லுவா நிரல்வரி இற்றைப்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. (இங்கு) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 08:14, 1 சூன் 2013 (UTC)Reply
இதுபோன்ற அறிவிப்புகள் அனைத்து இற்றைப்பக்கங்களிலும் இட்டால், தவறு நேர்வது பெருமளவில் தவிர்க்கப்படும். உங்களுக்குத் தெரியுமா, சிறப்புப் படம் -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 08:34, 1 சூன் 2013 (UTC)Reply

முன்பக்க இற்றைப்படுத்தல் மேற்கொள்ளும் பயனர் தொகு

தற்போது இற்றைப்படுத்தல் மேற்கொள்ளும் பயனர் விபரம் கீழே தரப்பட்டுள்ளது. ஏற்கெனே உள்ளவர்களோடு ஆர்வமுள்ளவர்களும் இணைந்து கொள்ளலாம். இற்றைப்படுத்தல் மேற்கொள்ளும் பயனர்கள் யார்யாரென உறுதியானதும், அவர்களே இற்றைப்படுத்தல் முன்னெடுக்கும் பொறுப்பாளிகள். மற்றப் பயனர் உதவலாம். மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவியுங்கள்.

முதற்பக்க கட்டுரைகள்
முதற்பக்க வார்ப்புரு, முதற்பக்க வலைவாசல், விக்கிப்பீடியர் அறிமுகம்
சிறப்புப் படம்
உங்களுக்குத் தெரியுமா
இன்றைய நாளில், நடப்பு நிகழ்வுகள்
குறிப்பு
பயனர்:தென்காசி சுப்பிரமணியன், பயனர்:சஞ்சீவி சிவகுமார் - இற்றைப்படுத்தலில் ஈடுபடுதல் பற்றிய ஐயப்பாடு இருப்பதால் 2012 இல் பட்டியலிட்டேன். உங்கள் பெயர்களை தகுந்த தலைப்பின் கீழ் இணைத்துக் கொள்ளுங்கள்.

--Anton·٠•●♥Talk♥●•٠· 02:53, 11 அக்டோபர் 2013 (UTC)Reply

  விருப்பம். ஒவ்வொரு பணியிலும் 2 அல்லது அதற்கு மேற்பட்டோர் இணைந்து ஒரு குழுவாக செயல்படுவது சாலச் சிறந்தது. தவிர்க்க இயலாத சூழலில், ஒருவரால் இற்றைப்படுத்த இயலாத தருணத்தில் இன்னொருவர் அதைச் செய்ய இயலும்; சிறீதரன் அவர்களை ஒவ்வொருமுறையும் தொந்தரவு செய்வதையும் தவிர்க்க இயலும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:41, 11 அக்டோபர் 2013 (UTC)Reply
பணிப்பளு காரணமா முதற்பக்க வார்ப்புரு, முதற்பக்க வலைவாசல் இற்றை பணியில் இருந்து விலகிக் கொள்ள விரும்புகிறேன். பங்களிப்பாளர் அறிமுகம் தற்போது முதற்பக்கத்தில் இல்லை. அதற்குத் தேவையான புதிய அறிமுகங்களைப் பெற்று விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பகுதியில் சேர்ப்பதை மட்டும் அவ்வப்போது செய்து வருவேன். வருங்காலத்தில் மீண்டும் முதற்பக்கத்தில் அறிமுகங்கள் இடம் பெறும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். --இரவி (பேச்சு) 22:31, 14 அக்டோபர் 2013 (UTC)Reply

முதற்பக்க இற்றைக்குத் தன்னார்வலர்கள் தேவை தொகு

பல மாதங்களாக முதற்பக்கக் கட்டுரை இற்றைப்படுத்தப்படவில்லை :( இதைப் பொறுப்பேற்றுச் செய்ய தன்னார்வலர்கள் தேவை. --இரவி (பேச்சு) 07:48, 26 ஏப்ரல் 2019 (UTC)

  விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:48, 26 ஏப்ரல் 2019 (UTC)

Return to the project page "முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு".