விக்கிப்பீடியா பேச்சு:விக்கிக்கோப்பை

உரையாடல்

விக்கிக்கோப்பை உரையாடல் 2017 பங்கேற்பாளர்கள் பயனர் நிலவரம் புள்ளி நிலவரம்

காலம்

தொகு

3 மாதங்கள்? --AntanO 20:30, 28 திசம்பர் 2015 (UTC)Reply

  விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:02, 29 திசம்பர் 2015 (UTC)Reply

புள்ளிகள்

தொகு
  1. ஆங்கில விக்கியில் தொகுப்புகளுக்கே புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. நாம் கட்டுரைகளின் எண்ணிக்கையை கூட்டவே இந்த முயற்சியே மேற்கொள்கிறோம் என்பதால் இதனை ஏற்றுக் கொள்ளலாம்; இருப்பினும் விக்கி என்பது கூட்டு முயற்சியாகும். இதில் ஒருவர் கட்டுரையைத் துவங்கி மற்றவர் தொகுத்து சொற்களை சேர்க்கலாம். அல்லது நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொற்களை கூட்டலாம். இத்தகைய நிலைகளில் புதிய கட்டுரைகளைத் தவிர துவங்கப்பட்ட கட்டுரைகளில் சேர்க்கப்படும் சொற்களுக்கு புள்ளிகள் வழங்கப்படலாம். இவை இப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கும் போட்டி காலத்தில் துவங்கப்பட்ட கட்டுரைகளுக்கும் மட்டுமே என மட்டுப்படுத்தலாம்.
  2. புள்ளிகளை linearஆக வழங்கலாம் என்பது எனது கருத்து. குறைந்தது 50 சொற்கள் எனவும் ஒவ்வொரு 50 சொற்களுக்கும் 10 புள்ளிகள் எனவும் வைக்கலாம். குறுங்கட்டுரைகளைத் தவிர்க்க 500 சொற்களுக்கு குறையாது எழுதப்படும் கட்டுரைகளுக்கு கூடுதலாக, ஊக்கப்புள்ளிகளாக, 10 புள்ளிகள் வழங்கலாம்.
  3. முதற்பக்க கட்டுரை, உங்களுக்குத் தெரியுமாவில் இடம் பெறும் கட்டுரைகளுக்கு ஊக்கப்புள்ளிகளாக, குறிப்பிட்டவாறு, 30,15 புள்ளிகள் முறையே வழங்கலாம்.
  4. மற்ற விக்கிப்பீடியாக்களில் இல்லாத, தமிழர் வாழ்வியல் சார்ந்த, விக்கிப்பீடியாத் தரமுள்ள கட்டுரையாக்கத்திற்கு ஊக்கப்புள்ளியாக 30 புள்ளிகள் தரலாம். --மணியன் (பேச்சு) 05:10, 26 திசம்பர் 2015 (UTC)Reply
தமிழர் சார்ந்த கட்டுரை என்பதை தளர்த்தி, தாயகத்தை பற்றிய கட்டுரை என்று மாற்றலாம். இதன் மூலம் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் ஏனைய பகுதிகளை பற்றியும், இலங்கையின் சிங்களர் வாழ் பகுதிகளை பற்றியும் கட்டுரைகள் குவியும்.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:09, 29 திசம்பர் 2015 (UTC)Reply
    • புதிய கட்டுரைகளை வரவேற்பதே நோக்கம் என்பதால் மேலதிகமாக சேர்க்கப்படும் சொற்களுக்கு வழங்கப்படும் புள்ளிகளை அளவிறுக்க வேண்டும் எனக் கருதுகிறேன். ஒவ்வொரு புதிய கட்டுரைகளுக்கும் தனித்துவமான புள்ளிகள் வழங்கலாம். மேலதிகமாக சொற்களுக்கு ஏற்ப புள்ளிகளை வழங்கலாம். இது புதிய கட்டுரைகள் சேர்வதை உறுதிப்படுத்தும். அவ்வாறு தொடங்கப்படும் கட்டுரைகளுக்கு ஒரு குறைந்த வரம்பு வேண்டும். (எ-டு: ஐம்பது, முப்பது) அதாவது ஒரு புதிய கட்டுரை ஐம்பது சொல்லுடன் தொடங்கப்பட்டால் புதிய கட்டுரைக்கான புள்ளியும் அடிப்படைச் சொற்களுக்கான புள்ளியும் வரும். மேலதிகமாக உள்ள சொற்களுக்கு மணியனின் இரண்டாவது பரிந்துரை. :) புதிய கட்டுரையானது அடிப்படை அளவுச் சொற்கள் இல்லாது துவங்கப்பட்டால் அடிப்படைச் சொற்களுக்கான புள்ளிகள் இல்லை. தொடர்ந்து மேலதிக சொற்களுக்கான புள்ளிகள் சேரும்.
    • குறைந்தது ஒன்றிரண்டு மேற்கோளைக் கொண்டிருக்கவேண்டும் என குறிப்பிடலாம். மேற்கோள்களுடைய கட்டுரைகளுக்கு புள்ளிகள் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கலாம். --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 05:39, 26 திசம்பர் 2015 (UTC)Reply
இற்றைப்படுத்தியுள்ளேன். --AntanO 20:30, 28 திசம்பர் 2015 (UTC)Reply

தலைப்புகள்

தொகு

விக்கிக் கோப்பைக்கு தலைப்புகளை பரிந்துரைக்காது விருப்பத்தேர்வுப்படி விட்டு விடலாம்.--மணியன் (பேச்சு) 05:10, 26 திசம்பர் 2015 (UTC)Reply

  விருப்பம் அத்தோடு அனைத்து விக்கிகளிலும் கட்டாயம் இருக்கவேண்டிய கட்டுரைகளைப் பரிந்துரைத்து அவற்றை உருவாக்கும் பட்சத்தில் அதிகமாக சில புள்ளிகளையும் வழங்கலாம் என்பது எனது கருத்து. --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 05:23, 26 திசம்பர் 2015 (UTC)Reply
  விருப்பம்ஆம். பொதுவான கட்டுரைகளுக்கு வழங்கப்படும் புள்ளிகளோடு, பரிந்துரைக்கப்பட்ட கட்டுரைகளுக்கு பத்து புள்ளிகளை அதிகம் வழங்கலாம். தேர்வு பயனரின் விருப்பத்துக்கு உட்பட்டது -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:04, 29 திசம்பர் 2015 (UTC)Reply
  விருப்பம் தமிழ் விக்கியில் தாவரங்கள், அறிவியல் போன்ற கட்டுரைகளில் மலையாள விக்கியைவிட பின்தங்கியே மொழிபெயர்ப்பு இருப்பதை நிறைய பக்கங்களில் பார்க்க முடிகிறது. போட்டியாளர்கள் இதனையும் கவனிக்க வேண்டுகிறேன்.--Muthuppandy pandian (பேச்சு) 07:29, 9 திசம்பர் 2016 (UTC)Reply

கோப்பை

தொகு

ஏற்கனவே வழங்கப்பட்ட கோப்பைகள் அல்லாது :) புதிதாக வழங்கவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். :) ஆங்கில விக்கியில் வழங்கப்பட்டதால் இது சற்றுப் பழையதாகியிருக்க வேண்டும். :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 05:22, 26 திசம்பர் 2015 (UTC) Reply

வடிவமைக்கலாம். --AntanO 20:30, 28 திசம்பர் 2015 (UTC)Reply

வாழ்த்துகள்

தொகு

நல்ல முயற்சி. கோப்பைக்குப் போட்டி போடாமல் வாழ்த்தி உற்சாகப்படுத்தும் சங்கத்தின் சார்பாக :) --இரவி (பேச்சு) 15:01, 27 திசம்பர் 2015 (UTC)Reply

நானும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:04, 27 திசம்பர் 2015 (UTC)Reply
+1 --மதனாகரன் (பேச்சு) 15:22, 27 திசம்பர் 2015 (UTC)Reply
+1 நானும் பங்குபற்றுவோரை வாழ்த்துகின்றேன்.--கலை (பேச்சு) 08:04, 6 சனவரி 2016 (UTC)Reply

தத்தம் பெயர்களைப் பதிவு செய்தல்

தொகு

விக்கிக்கோப்பையில் பங்குபற்றுவோர் இங்கு ஏற்கனவே தத்தம் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். எனினும் வேறு பயனர்கள் இங்கு தம் பெயர்களைப் பதிவு செய்யாமலேயே விக்கிக்கோப்பையின் விதிமுறைகளைப் பின்பற்றி மறைமுகமாகவும் இதில் பங்குபற்றியபின் அவர்கள் தம் பெயரை மார்ச்சு 30, 2016 23:59 அன்றும் தமது பெயரைப்பதிவு செய்கின்றனர் என வைத்துக்கொள்வோம். த.விக்கியின் வளர்ச்சிக்கு அவர்களின் கட்டுரை உருவாக்கங்கள், விரிவாக்கங்கள் உதவியாகவும் உந்துதலாகவும் இருக்கின்ற வேளையிலும் அக்கட்டுரைகளுக்கான புள்ளிகள் கணக்கில் எடுக்கப்படுமா? இவ்வாறான பிரச்சினைகள் போட்டிமுடிவடையும் காலத்தின் போது எழக்கூடும். ஆகவே ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் பங்குபற்ற விரும்புவோர் அனைவரும் தத்தம் பெயரை பதிவுசெய்வதை விதிமுறையாக்கலாம். காலவரையறை ஒருன்ங்கிணைப்பாளர்களால் தீர்மானிக்கப்படல் நன்று. தங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன், நன்றி!...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 06:06, 29 திசம்பர் 2015 (UTC)Reply

போட்டியில் பங்குபற்றக் கால வரையறை வைப்பதானது போட்டி நோக்கத்தை குன்றச்செய்யும். பயனர்கள் எப்போதும் தங்கள் பெயர்களைச் சேர்க்கலாம். போட்டி காலத்தில்; அப்பயனர் போட்டியில் சேர்ந்ததன் பின்னரான புள்ளிகளைமட்டும் கணக்கில் எடுத்தால் சரி. விக்கிக் கோப்பை விதிக்கமைவாக மறைமுகமாக பங்குபெற முடியாது. :) :) பங்குபற்றுவோர் பக்கத்தில் பதிந்த பின்னரே பங்குபற்றுவார். பங்குபற்றுபவர் பகுதியில் இணைந்தபின்னரே போட்டியாளர் என விதிசமைக்க வேண்டுகிறேன் --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:43, 29 திசம்பர் 2015 (UTC)Reply
  விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:11, 29 திசம்பர் 2015 (UTC)Reply

பரிசு

தொகு

என்ன பரிசு தருவீர்கள் என்று சொல்லவேயில்லையே! :P எத்தனை பேருக்கு, குறிப்பிட்ட வரம்பை தாண்டுபவர்களுக்கா? விக்கிமீடியா மேலாளரின் கையொப்பமிட்ட பதக்கமும், விக்கிப்பயனர்கள் கையொப்பமிட்ட சான்றிதழ்/சட்டையும் வழங்கலாம். பரிசு பெறத் தகுதியானவர் நிரலாளராக இருந்தால், உலுவா போன்ற நிரல் மொழிகளை கற்பிக்க சிறப்பு வகுப்புகள் எடுக்கலாம். சிறப்பு வகுப்புக்கான விக்கிமீடியாவின் சான்றிதழும் தரலாம். விக்கிப்பீடியா கட்டுரைகளை அடங்கிய சிடியும் தரலாம். புதியவராக இருந்தால் முதல்பக்கத்தில் அறிமுகப்படுத்தலாம். பயனாளர்கள் யோசிக்க வேண்டும். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:21, 29 திசம்பர் 2015 (UTC)Reply

பரிசு மறந்துவிட்டது. விக்கிக்கோப்பை வழமையாக பாராட்டைத்தான் பரிசாக வழங்கும். :) ஆயினும் வேறு பரிசு கொடுக்கும் திட்டம் இருந்தால் பார்க்கலாம். அல்லது இதனை ஒரு வெள்ளோட்டமாக்க கொண்டு, வேறு ஒரு போட்டியை பின்னர் நடத்தவும் யோசிக்கலாம். எனக்குத் தெரிந்தது இவ்வளவே. :( மற்றவர்களின் கருத்துக்கு விடுகிறேன். @Ravidreams: --AntanO 13:42, 29 திசம்பர் 2015 (UTC)Reply
தமிழ்க்குரிசில், விக்கிக் கோப்பை என்பது ஒரு விடுதியில் / பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களுக்குள் நட்பு நோக்கில் விளையாடும் போட்டிகளைப் போன்றது. இது நம்மை நாமே உற்சாகப்படுத்தி உழைக்கவே ! பொது மக்களை நோக்கி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்கும் வகையில் போட்டிகளை வைக்கும் போது அதற்குப் பரிசுகள் அறிவிக்கலாம்.--இரவி (பேச்சு) 13:18, 1 சனவரி 2016 (UTC)Reply

பயனர் நிலவரம்

தொகு

இவ்வாறு ஒரு பக்கத்தை உருவாக்கி அங்கு போட்டியில் பங்குபெறும் பயனர்கள் போட்டிக்காக உருவாக்கிய கட்டுரைகளை உடனுக்குடன் இற்றை செய்யலாம். (விரும்பினால் பயனர்கள் தாமாகவே இற்றைப்படுத்தலாம் - உடனுக்குடன் இற்றைப்படுத்த வேண்டும்) அவ்வாறு பங்குபெறும் ஒவ்வொருவருக்கும் ஓர் பகுதியை உருவாக்கலாம். இதன் மூலம் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு பயனரின் நிலவரத்தையும் இலகுவாக கண்காணிக்க முடிவதுடன் பங்குபெறுபவர்கள் மற்றையோரைப் பார்த்து மேலும் மேலும் போட்டியுடன் அதிக கட்டுரைகளையும் உருவாக்க முனைவர். இறுதியில் காணப்படும் புள்ளி நிலவரத்தையும் தரப்படுத்தலையும் இங்கு இற்றைப்படுத்தலாம். தங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன். நன்றி.!... @Aathavan jaffna:,@Rsmn:--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:56, 30 திசம்பர் 2015 (UTC)Reply

தற்போது இப்பக்கத்தை உருவாக்கியுள்ளேன். இதற்கு முரண்பட்ட கருத்துக்கள் இருப்பின் அழித்து விடலாம். தங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன். நன்றி.!...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:40, 30 திசம்பர் 2015 (UTC)Reply

சொற்கள் கணக்கிடுவதில் சந்தேகம்

தொகு

த.விக்கியின் ஆசிய மாதப்போட்டியில் இப்பக்கம் பயன்படுத்தப்பட்டதை அறிந்தேன். விக்கிக்கோப்பையிலும் கூட சொற்களின் எண்ணிக்கையைக் கணக்கிட wordcounttool பயன்படுத்தப்படும் என விதிகள் பகுதியில் கூறப்பட்டுள்ளது. எனினும் இக்கருவியானது ஒரு கட்டுரையின் உரைப்பகுதியில் உள்ள இடைவெளிகளையும் (space) ஒவ்வொரு சொற்களாக கணக்கெடுக்கிறது. ஆகவே சொற்கள் கணக்கெடுக்கும் போது கூடவே இடைவெளிகளும் சொற்களாகக் கணக்கெடுக்கப்படுகின்றன. இக்கருவி நம்பகத்தன்மை வாய்ந்ததா என சந்தேகமாக இருக்கின்றது. தங்கள் கவனத்திற்கு...@Rsmn: @Aathavan jaffna:, @AntanO:...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:52, 30 திசம்பர் 2015 (UTC)Reply

ஒல்லாந்தர் கால இலங்கை கட்டுரையை கணக்கிட்டதில் 84 சொற்கள் என வந்தது. "Ms-Word" உம் இதே அளவைக்காட்டியது. மேலும் இது ஒரு விளையாட்டாக இருப்பதால், கடுமையான மதிப்பீட்டைச் செய்யத் தேவை இல்லை என்பது என் கருத்து. --AntanO 11:01, 30 திசம்பர் 2015 (UTC)Reply
சிறு மாற்றம் 84 சொற்கள் → 83 சொற்கள் (மேற்கோள் தவிர்ந்த). //கடுமையான மதிப்பீட்டைச் செய்யத் தேவை இல்லை//   விருப்பம்சந்தேகத்தை தீர்த்தமைக்கு நன்றி அன்ரன் ஐயா!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:01, 30 திசம்பர் 2015 (UTC)Reply

சந்தேகம்

தொகு

@AntanO: //தமிழர் வாழ்வியல் சார்ந்த, விக்கிப்பீடியாத் தரமுள்ள, 300 சொற்கள் சேர்க்கப்பட்ட கட்டுரைக்கு கூடுதலாக 30 புள்ளிகள்.// இந்த விதி புதிய கட்டுரை எழுதினாலா? அல்லது விரிவாக்கினாலும் சேர்க்கப்படுமா?-- மாதவன்  ( பேச்சு  ) 09:44, 3 சனவரி 2016 (UTC)Reply

இரண்டுக்கும் பொருந்தும் --AntanO 03:48, 5 சனவரி 2016 (UTC)Reply

Antan அவர்களே, நாம் விரிவாக்கும் கட்டுரைகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டிய காலவரையறையென ஏதாவது இருக்கின்றதா? (எ.கா- விக்கிகோப்பைக் காலப்பகுதியில் உருவாக்கப்பட்டவையை மட்டும் விரிவாக்கலாம்) இது பற்றி மணியன், ஆதவன் ஆகியோரால் உரையாடப்பட்டுள்ளது.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:03, 5 சனவரி 2016 (UTC)Reply


விக்கிக்கோப்பை போட்டியில் பங்கு"பற்றி", சிறந்த தொகுத்தல் மேற்கொள்ளும் தமிழ் விக்கிப்பீடியராகுங்கள்! என விக்கி பக்கத்தின் மேல் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அங்கு பங்குபெற்று என்றல்லவா வந்திருக்க வேண்டும். கவனிக்க.. பயனர்:Shriheeran, User:AntanO --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:12, 6 சனவரி 2016 (UTC)Reply

தங்கள் கருத்தும் சரியானதே... எனினும் "பங்குபற்றுதல்" எனும் பதமே இலங்கையில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:15, 6 சனவரி 2016 (UTC)Reply

ஓ.. இது இலங்கை வழக்கா?. அறியத்தந்தமைக்கு நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:11, 30 சனவரி 2016 (UTC)Reply

நோக்கத்தில் மாற்றம்

தொகு

நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் இனிவரும் அனைத்து விக்கிக்கோப்பைக்கும் பொருந்துமா அல்லது 2017க்கு மட்டுமா என்பதனை உறுதி செய்யவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:29, 10 திசம்பர் 2016 (UTC)Reply

Sorry for typing in English due to some problems. I hope this mission continues forever only in ta wiki and the mission of expanding articles can be given for other competitions like kadduraip pooddi. But for wikicup this mission is suitable and useful to develop our wili and too we can expand the articles which will be created through other competition. Thank you!...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:56, 10 திசம்பர் 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை 2017

தொகு

புள்ளிகள் எழுதப்படும் புதிய கட்டுரைகளுக்கு மட்டும் தானா? அல்லது விரிவாக்கத்திற்காக எழுதப்படும் பங்களிப்புக்கும் புள்ளிகள் தரப்படுமா?--உழவன் (உரை) 16:50, 10 திசம்பர் 2016 (UTC)Reply

@Info-farmer:தாங்கள் போட்டியில் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி! மேலும் இப்போட்டியானது முற்றுமுழுதாக புதிய விக்கித்தரமுள்ள நல்ல பல கட்டுரைகள் உருவாக்கத்தை தழுவியது. ஆகவே உருவாக்கத்திற்கு மட்டுமே புள்ளிகள் மேலும் போட்டிகாலத்தில் உருவாக்கப்பட்ட கர்ருரைகளை குறிப்பிட்ட சொல்லளவுகளுக்கு மேல் விரிவாக்கினாலும் புள்ளீகள். கவனிக்க- போட்டிக்காலத்தில் உருவாக்கப்பட்ட கட்டுரைகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:15, 11 திசம்பர் 2016 (UTC)Reply

@Shriheeran:,@Maathavan:, நான் இன்று எழுதிய குடுமியான்மலை இசைக் கல்வெட்டு கட்டுரையை விக்கிக் கோப்பைக்காகச் சமர்ப்பிக்க முயன்றேன். தொடர்ந்து error என வருகிறது. சமர்ப்பிக்க முடியவில்லை. என்ன காரணம்? ---மயூரநாதன் (பேச்சு) 17:54, 1 சனவரி 2017 (UTC)Reply
இபோது சரியாகி விட்டது என எண்ணுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:58, 2 சனவரி 2017 (UTC)Reply

புள்ளியிடப்படாத கட்டுரைகள்

தொகு

போட்டியில் எனது இரு கட்டுரைகளுக்கு புள்ளிகள் வழங்கப்படவில்லை. குறைபாடுகளை சரி செய்துள்ளேன். அக் கட்டுரைகள் தாமாகவே கவனிக்கப்ட்டு புள்ளி வழங்கப்படுமா? இல்லை மறுபடியும் நாங்கள் பதிகருவியில் இற்றைப்படுத்த வேண்டுமா? அவ்வாறே ஏற்கனவே சமர்ப்பித்த கட்டுரைகளை தொகுக்கும்போதும் எப்படி புள்ளித்திட்டத்தில் இணைந்துகொள்ளும்?--ச.ஹோபிநாத் (பேச்சு) 14:13, 7 சனவரி 2017 (UTC)Reply

ஹோபிநாத் அவர்களே தற்போது புள்ளிகள் இடப்பட்டு விட்டன. தாங்கள் மேலதிகமாக விரிவாக்குபவற்றை முற்கூட்டியே விரிவாக்கிவிட்டு பதிகருவியில் சமர்ப்பியுங்கள். அதுவே இலகுவான வழி. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:44, 7 சனவரி 2017 (UTC)Reply
நன்றி. அதுவம் சரியான யோசைனதான்.--ச.ஹோபிநாத் (பேச்சு) 14:08, 8 சனவரி 2017 (UTC)Reply

அதிக புள்ளிகளைப் பெற என்ன செய்ய வேண்டும்?

தொகு

நீலகிரி மலையின மக்களின் இசைக்கருவிகள் என்ற கட்டுரை தமிழர் வாழ்வியலைச் சார்ந்தது. உள்ளங்கை, பாத கசிவுநோய் என்ற கட்டுரை தமிழர் வாழ்வியலைச் சாராதது. இரண்டும் ஒரே புள்ளிகளுடன் ( 31) இருக்கிறது. தமிழர் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைக்கு, அதிக புள்ளிகள் வருமென்று எண்ணினேன். ஒரு கட்டுரை எழுதினாலும், அக்கட்டுரை 2017 விக்கிக்கோப்பை நிகழ்வில், அதிக புள்ளிகள் பெற்ற கட்டுரையக இருக்க வேண்டும் என்ற ஆசை என்னுள் இருக்கிறது. அதற்கு நான் என்னென்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும்.?மேற்கூறிய இரு கட்டுரைகளில் ஒன்றினை, எடுத்துக்க்காட்டாக வைத்து, விதிகளைத் தருக--உழவன் (உரை) 12:33, 11 சனவரி 2017 (UTC)Reply

@Shriheeran and Maathavan: உங்களின் குறிப்புகளைத் தரக் கோருகிறேன்--உழவன் (உரை) 14:37, 12 சனவரி 2017 (UTC)Reply

தகவலுழவன் ஐயா அவர்களே, தற்போது மேலதிக பத்துப் புள்ளிகள் இடப்பட்டு விட்டன. இப்போட்டிட்யில் சொல்லளவும் கட்டுரையின் குறிப்பிடத்தகைமையுமே முக்கியமாகக் கொள்ளப்படுவதுடன் எந்தவொரு இறுக்கமான விதிகளும் கிடையாது. தாங்கள் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:49, 12 சனவரி 2017 (UTC)Reply
'ஐயா' என்றெல்லாம் அழைக்க வேண்டாம். அனைவரும் நண்பர்களே. எனக்கு முன்பு இட்ட வழிகாட்டுதலை உங்களுக்குத் தருகிறேன். இனி எழுதப்போகும் கட்டுரைக்கு, அதிகப்புள்ளிகள் பெறவே, வினவினேன். அதற்கு ஒரு கட்டுரைக்கு பெற்ற புள்ளி விவரங்களை காட்டி, இது மாதிரி தரவுகள் இருந்திருந்தால், இன்னும் புள்ளிகள் கிடைக்கும் என்று கூறுக--உழவன் (உரை) 14:57, 12 சனவரி 2017 (UTC)Reply

கேள்வி

தொகு

போட்டி முடிந்துவிட்டதா? இல்லை இனிமேலும் இணையலாமா? 31 ஜனவரி என்ற குறிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியது? எப்போது வரை இந்த போட்டி இருக்கும்? --Srini94 (பேச்சு) 17:45, 14 பெப்ரவரி 2017 (UTC)

முடிந்து விட்டதாகவே நினைக்கிறேன். @Shriheeran:.--Kanags \உரையாடுக 00:52, 15 பெப்ரவரி 2017 (UTC)
@Srini94: போட்டியின் இரண்டாம் சுற்றை இற்றைப்படுத்தாததற்கு மன்னிக்கவும், சான்றற்ற கட்டுரைகளில் சான்றிணைத்து நிறைவேற்றி போட்டியில் பங்குகொள்ளலாம்.

விக்கிக்கோப்பை-இரண்டாம் சுற்று

தொகு

விக்கிக்கோப்பைப் போட்டியில் தாங்கள் முனைப்புடன் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி!. விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படாத பல கட்டுரைகள் பல இருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் விக்கிக்கோப்பையின் இரண்டாம் சுற்றானது திகழ்கின்றது. அந்தவகையில் விக்கிக்கோப்பையின் பெப்ரவரி மாதம் முழுவதும் இடம்பெறும் இரண்டாம் சுற்றிலும் பங்குபற்றி உங்கள் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் கீழுள்ள பகுப்புகளிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றுகள்/மேற்கோள்களைச் சேர்த்து போட்டியின் வெற்றியாளராக வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் மேற்கோள் சேர்க்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் சமர்ப்பியுங்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு விசேட புள்ளிகளும் வழங்கப்படும். அப்பகுப்புகள்
*மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் * மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்* மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்] --ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:38, 15 பெப்ரவரி 2017 (UTC)

Return to the project page "விக்கிக்கோப்பை".