விக்கிப்பீடியா பேச்சு:விக்கி நிகழ்படப் பாடங்கள்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Dineshkumar Ponnusamy
விக்கிபீடியாவை புதியவர்களுக்கு அறிமுகம் செய்ய, வீடியோ பாடங்களை உருவாக்கலாமா?
- விக்கிபீடியா அறிமுகம்
- துணைத்திட்டங்கள்
- கணக்கு உருவாக்கம்
- விக்கி பக்கங்கள்
- தொகுத்தல்
- விக்கி நடை
- விக்கியில் செய்யக்கூடாதவை
- கவனிப்புப்பட்டியல்
- அண்மைய மாற்றங்கள்
- அமைப்புகள்
- கருவிகள்
- தட்டச்சு வசதிகள்
- ...
ஒரு சிலரோ, பலரோ இவற்றை உருவாக்கலாம்.
ஆர்வமுள்ளோர் இங்கே பதில் தர வேண்டுகிறேன்.
--Tshrinivasan (பேச்சு) 09:17, 21 அக்டோபர் 2013 (UTC) விருப்பம்நந்தினிகந்தசாமி (பேச்சு) 13:04, 21 அக்டோபர் 2013 (UTC)
- நல்ல திட்டம் சீனிவாசன். இதற்கு வேண்டிய கட்டமைப்பை உருவாக்குங்கள். எப்படி உருவாக்குவது போன்ற விளக்கத்தைத் தாருங்கள். இயன்றவர்கள் உதவுவோம். -- சுந்தர் \பேச்சு 15:40, 21 அக்டோபர் 2013 (UTC)
- மிக நல்ல திட்டம் சீனிவாசன். இதனைச் சிறப்பாகச் செய்தால் மிகவும் பயனுடையதாக இருக்கும். ஒவ்வொரு நிகழ்படத்துக்கும் ஒரு எழுத்தினான வரைவு இருப்பது வேண்டும். அது நிகழ்படத்துக்கு உகந்த வடிவில் இருக்க வேண்டும். கூறப்படும் கருத்துகள் துல்லியமாகவும் சரியாகவும் சரியான கோணத்திலும் வழங்கப்பட வேண்டும். செய்முறைக் காட்சிகள் சேர்ப்பதும் அவசியம். விக்கியின் ஐந்து தூண்கள் பற்றியும் ஒரு நிகழ்படம் இருப்பது நல்லது. இதில் பேசுவோர் நல்ல தமிழ் ஒலிப்புடன் பேசுதல் வேண்டும் (ல, ள, ழ வேறுபாடுகள், ந, ன, ண வேறுபாடுகள் ர, ற வேறுபாடுகள். இதில் ர, ற சற்று கடினம், வேறுபாட்டை உணர்வதும் கடினம். ஆனால் மற்ற வேறுபாடுகளைத் துல்லியமாகக் காட்டும்படியாக இருக்கவேண்டும். இவற்றோடு ஞ என்னும் எழுத்தையும் சரியாக ஒலிக்க வேண்டும். ட, ண முதலான நடுவண்ன ஒலிகள் தெளிவாக இருக்கவேண்டும். சரியான ஒலிப்பு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்). <
இவற்றைப் பேச்சுப்பக்கத்துக்கு மாற்றவேண்டும் எனில் அங்கு மாற்றிவிடுகின்றேன்.--செல்வா (பேச்சு) 18:52, 21 அக்டோபர் 2013 (UTC) (இதே பேச்சுப்பக்கம்தான் என்பதை உணரவில்லை!! :) )
- மிக நல்ல திட்டம் சீனிவாசன். இதனைச் சிறப்பாகச் செய்தால் மிகவும் பயனுடையதாக இருக்கும். ஒவ்வொரு நிகழ்படத்துக்கும் ஒரு எழுத்தினான வரைவு இருப்பது வேண்டும். அது நிகழ்படத்துக்கு உகந்த வடிவில் இருக்க வேண்டும். கூறப்படும் கருத்துகள் துல்லியமாகவும் சரியாகவும் சரியான கோணத்திலும் வழங்கப்பட வேண்டும். செய்முறைக் காட்சிகள் சேர்ப்பதும் அவசியம். விக்கியின் ஐந்து தூண்கள் பற்றியும் ஒரு நிகழ்படம் இருப்பது நல்லது. இதில் பேசுவோர் நல்ல தமிழ் ஒலிப்புடன் பேசுதல் வேண்டும் (ல, ள, ழ வேறுபாடுகள், ந, ன, ண வேறுபாடுகள் ர, ற வேறுபாடுகள். இதில் ர, ற சற்று கடினம், வேறுபாட்டை உணர்வதும் கடினம். ஆனால் மற்ற வேறுபாடுகளைத் துல்லியமாகக் காட்டும்படியாக இருக்கவேண்டும். இவற்றோடு ஞ என்னும் எழுத்தையும் சரியாக ஒலிக்க வேண்டும். ட, ண முதலான நடுவண்ன ஒலிகள் தெளிவாக இருக்கவேண்டும். சரியான ஒலிப்பு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்). <
- மிக அருமையான திட்டம், ஒரு புதிய தலைப்பையும் சேர்த்துள்ளேன். வாழ்த்துக்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:33, 23 அக்டோபர் 2013 (UTC)