விக்கிப்பீடியா பேச்சு:விக்கி மின்மினிகள்/பயிற்சி/நாள் 1
சிறப்பாயுள்ளது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:55, 2 சூலை 2014 (UTC)புள்ளியிட்டு குறிப்பிட்டுள்ளவற்றை கட்டம் ஒன்றினுள் தந்தால் நல்லதல்லவா?--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:57, 2 சூலை 2014 (UTC)
- நன்றி, சஞ்சீவி சிவகுமார். பயிற்சிகளை மேம்படுத்த, அழகூட்ட என்று அனைத்து விதமான பங்களிப்புகள், உதவிகளையும் வரவேற்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 06:04, 2 சூலை 2014 (UTC)
சில கருத்துகள்
தொகு- இதன் மூலம் பயனர்கள் (மின்மினிகள்) வந்துள்ளனரா என்று அறிய பயிற்சி நாளை முடித்த பயனர்களை ~~ மூலம் கையொப்பம் இடசெய்யலாம் . இவ்வாறாக , மூத்த பயனர்கள் , அவர்களை கவனிப்புப் பட்டியலில் வைத்து அவர்களுக்கு உதவ முடியும் ,
- பயிற்சி நிமித்தமாக , "உங்கள் பயனர் பெயர் ஏன் சிவப்பில் இருக்கிறது" , அதை எவ்வாறு நீல நிறத்தில் மாற்றுவது ? என்பதை வைக்கலாம் .--Commons sibi (பேச்சு) 13:37, 2 சூலை 2014 (UTC)
- ஆகா! அருமையான யோசனை! இந்த கருத்தை முகநூல் குழுவிலும் தெரிவித்துவிடுங்கள். நானும் கண்காணித்து, உதவுவேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:07, 2 சூலை 2014 (UTC)
- ஆம், சிபி. யார் யார் பங்கு பெறுகிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். அடுத்து வரும் பயிற்சிகளில் ஒரு வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடச் சொல்வோம்.
அடுத்து வரும் பயிற்சிகளுக்கான எண்ணக்கருக்களைக் கீழே தருகிறேன். எங்கே கூட்டலாம், குறைக்கலாம், வரிசையை மாற்றலாம் என்று தெரிவியுங்கள். மிகவும் கடினமாகவோ நீள்வது போலவோ தெரிந்தால் சில நாள்களைக் குறைக்கலாம். இதன் மூலம் பெறும் அனுபவத்தின் அடிப்படையில் ஒரு தொடர் பயிற்சிக்கான செயல் திட்டத்தை மெருகேற்றுவது தான் நோக்கம்.
- நாள் 1 - தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் அறிமுகம், பயனர் கணக்கு உருவாக்கல், விக்கிப்பீடியாவில் உலாவல், தமிழ்த் தட்டச்சு, ஒத்தாசைப் பக்கம் அறிமுகம்.
- நாள் 2 - பயனர் உரையாடல், பக்க வரலாறு, நன்றியுரைத்தல், கவனிப்புப் பட்டியல் அறிமுகம்
- நாள் 3 - மணல் தொட்டி, தொகுப்புப் பெட்டியில் உள்ள பொத்தான்கள் / கருவிகள் அறிமுகம்
- நாள் 4 - பயனர் பக்கம் உருவாக்கல்.
- நாள் 5 - ஏதாவது ஒரு கட்டுரை பயன்படுத்தி எழுத்து / இலக்கணம் / தகவல் பிழைகள் திருத்தம்
- நாள் 6 - படிமம் சேர்த்தல், காமன்சு அறிமுகம்
- நாள் 7 - விக்கிப்பீடியா ஐந்து தூண்கள், நடைக்கையேடு, அடிப்படைக் கொள்கைகள் அறிமுகம்.
- நாள் 8 - குறுங்கட்டுரை விரிவாக்கும் பயிற்சி
- நாள் 9 - புதிய கட்டுரை உருவாக்குதல்
- நாள் 10 - Hotcat அறிமுகம், பகுப்பிடும் பயிற்சி
- நாள் 11 - Prove it அறிமுகம், சான்று தரும் பயிற்சி
- நாள் 12 - விக்கித் தரவு அறிமுகம்
- நாள் 13 - விக்கியில் உரையாடி இணக்க முடிவு நோக்கி நகர்வது குறித்த பயிற்சி (சில எடுத்துக்காட்டு உரையாடல்களைச் சுட்ட வேண்டும்)
- நாள் 14 - காமன்சில் படிமம் பதிவேற்றல், கிரியேட்டிவ் காமன்சு உரிமங்கள் பயிற்சி
- நாள் 15 - பல்வேறு துப்புரவுப் பணிகள் அறிமுகம் (விக்கியாக்கம், உள்ளிணைப்புகள் தருவது, மொழிபெயர்ப்பது, வார்ப்புரு இடுவது.. இன்ன பிற)
- நாள் 16 - பயனர் அரவணைப்புப் பயிற்சி (புதுப்பயனர் வரவேற்பு, முதல் தொகுப்பு / கட்டுரை வார்ப்புருக்கள் இடல், ஒத்தாசைப் பக்க உதவிகள் அறிமுகம்)
- நாள் 17 - பயிற்சியின் போது உருவாக்கிய புதிய கட்டுரையை விரிவாக்குதல்
- நாள் 18 -
- நாள் 19 -
- நாள் 20 - பரப்புரை பயிற்சி (முகநூல், துவிட்டர், மின்மடல் மூலமாகவும் அறிந்தவர்களுக்கும் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்துதல்)
- நாள் 21 - பயிற்சிகள் நிறைவு கண்ணோட்டம்.--இரவி (பேச்சு) 14:37, 2 சூலை 2014 (UTC)
மணியன்
தொகுநல்ல முயற்சி. வெற்றியடைய வாழ்த்துகள் !! நீக்கப்படும் (அல்லது துப்புரவு வார்ப்புரு இடப்படும்) கட்டுரைகளின் அடிப்படையில் சில கருத்துக்கள்:
- பெரும்பாலான புதியவர்களுக்கு, முக்கியமாக இந்தியச் சூழலில் இருந்து வந்தவர்களுக்கு, பதிப்புரிமை, காப்புரிமை பற்றிய விழிப்புணர்வு இல்லை. இதனாலேயே பல புதிய பங்களிப்புகள் நீக்கப்படுகின்றன.
- இதனை சேமிப்புக் கிடங்காக பெரும்போலோர் நினைக்கின்றனர். தகவற்களஞ்சிய நோக்கு பதியப்பட உள்ளடக்கம் வழிகாட்ட வேண்டும்.
- வலைப்பதிவு அல்ல என்பதையும் வற்புறுத்த வேண்டும்.
- விக்கியாக்கம், சான்று சேர்த்தல் ஆகியவற்றினை விரிவாக விளக்க ஓரிரு நாட்கள் ஒதுக்கலாம்.
- குறிப்பிட்ட தலைப்பில் முன்னமே கட்டுரை உள்ளதா என்பதை அறிந்து கொள்வதை விளக்க வேண்டும். மேலும் ஏற்கெனவே உள்ள கட்டுரையில் உள்ள உள்ளடக்கங்களை முழுவதுமாக நீக்கி புதிய கட்டுரை துவங்கப்படுவதும் முறையற்ற செயல் என்பது வலியுறத்தப்பட வேண்டும்.
- சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களை நீக்காது உரையாடற் பகுதியில் பேசி பின்னர் இணக்க முடிவின்படி செயலாற்றும் தன்மையை உணர்த்த வேண்டும்.
- கட்டுரை வரலாற்றினை காண்பது, அதன் முக்கியத்துவம், அதனை பேண வேண்டியதன் தேவை ஆகியனவும் பயிற்சியில் இடம் பெற வேண்டும்.
இந்த முயற்சியில் முறையாகக் கலந்து கொள்வோருக்கு அடையாளம் கொடுத்து அவர்களுக்குள்ளே மட்டுமேயான ஓர் கட்டுரைப் போட்டி நடத்தி பரிசு கொடுத்து ஊக்குவிக்கலாம். --மணியன் (பேச்சு) 03:40, 4 சூலை 2014 (UTC)
- கருத்துகளுக்கு நன்றி, மணியன். நீங்கள் கூறிய சில விசயங்களை ஏற்கனவே உள்ளடக்கியிருக்கிறோம். மற்றவற்றையும் சேர்த்து விடுகிறோம். பரிசுகள் கொடுப்பது தவிர வேறு எந்த வகையில் ஊக்குவிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஏன் எனில், எல்லாவற்றுக்கும் பரிசு என்ற உத்தி மட்டும் போதுமா என்று தோன்றுகிறது.--இரவி (பேச்சு) 11:32, 4 சூலை 2014 (UTC)
திருத்திய பயிற்சித் திட்டம்
தொகுகட்டுரைப் போட்டி அனுபவம் சற்று சிந்திக்க வைத்தது. ஆழமாகவும், பரவலாகவும் சொல்லித் தர வேண்டும். அதே வேளை, நீண்ட நாட்களுக்குச் சொல்லித் தந்தால் வரும் அலுப்பு, தொடர்ச்சி விட்டுப் போதல் ஆகிவயற்றையும் தவிர்க்க வேண்டும். சில இடங்களில் கோடிட்டுக் காட்டி அவர்களையே தேடிப் பார்க்கவும் செய்ய வேண்டும். இதனைக் கருதிதல் கொண்டு 14 நாட்களாக மாற்றிய பாடத்திட்டம். ஒரு நாளைக்கு அரை மணி நேரம் என்றால் தோராயமாக 200 நிமிடங்களில் இந்தப் பயிற்சியை முடிக்கலாம்.
- நாள் 1 - தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் அறிமுகம், பயனர் கணக்கு உருவாக்கல், விக்கிப்பீடியாவில் உலாவல், தமிழ்த் தட்டச்சு, ஒத்தாசைப் பக்கம் அறிமுகம்.
- நாள் 2 - பயனர் உரையாடல், பக்க வரலாறு, நன்றியுரைத்தல், கவனிப்புப் பட்டியல் அறிமுகம்
- நாள் 3 - மணல் தொட்டி, தொகுப்புப் பெட்டியில் உள்ள பொத்தான்கள் / கருவிகள் அறிமுகம்
- நாள் 4 - ஏதாவது ஒரு கட்டுரை பயன்படுத்தி எழுத்து / இலக்கணம் / தகவல் பிழைகள் திருத்தம்
- நாள் 5 - விக்கிப்பீடியா இவை அன்று
- நாள் 6 - விக்கிப்பீடியா ஐந்து தூண்கள், நடைக்கையேடு, அடிப்படைக் கொள்கைகள் அறிமுகம்.
- நாள் 7 - புதிய கட்டுரை உருவாக்கம், குறுங்கட்டுரை விரிவாக்கம்.
- நாள் 7 - Hotcat, Prove it அறிமுகம். பகுப்புகள், சான்றுகள் சேர்க்கும் பயிற்சி
- நாள் 9 - விக்கியில் உரையாடி இணக்க முடிவு நோக்கி நகர்வது குறித்த பயிற்சி (சில எடுத்துக்காட்டு உரையாடல்களைச் சுட்ட வேண்டும்)
- நாள் 10 - படிமம் சேர்த்தல், காமன்சு அறிமுகம், கிரியேட்டிவ் காமன்சு உரிமங்கள் பயிற்சி
- நாள் 11 - பல்வேறு துப்புரவுப் பணிகள் அறிமுகம் (விக்கியாக்கம், உள்ளிணைப்புகள் தருவது, மொழிபெயர்ப்பது, வார்ப்புரு இடுவது.. இன்ன பிற)
- நாள் 12 - பயனர் பக்கம் உருவாக்கல், பயனர் அரவணைப்புப் பயிற்சி (புதுப்பயனர் வரவேற்பு, முதல் தொகுப்பு / கட்டுரை வார்ப்புருக்கள் இடல், ஒத்தாசைப் பக்க உதவிகள் அறிமுகம்)
- நாள் 13 - விக்சனரி அறிமுகம்
- நாள் 14 - பயிற்சி நிறைவு கண்ணோட்டம். பங்களிப்பதற்கான களங்கள். பரப்புவதற்கான களங்கள்.