விக்ரம் சுகுமாரன்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

விக்ரம் சுகுமாரன் (Vikram Sugumaran) என்பவர் இந்திய தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர், எழுத்தாளர் ஆவார். திரைப்பட இயக்குநரான இவர் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்ற மதயானைக் கூட்டம் என்ற படத்தை இயக்கியவர். இவர் பொல்லாதவன், கொடிவீரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். [1]

வாழ்க்கைக் குறிப்பு தொகு

விக்ரம் சுகுமாரன் தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர். நடிகராகும் ஆசையில் சென்னைக்கு வந்தார். பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இணைந்தார். 1999இல் தொடங்கி 2000 வரை வெளியான கதை நேரம் வரிசையில் வெளியான 56 குறும்படங்கள், ஜூலி கணபதி திரைப்படம் போன்றவற்றில் பாலுமகேந்திராவிடம் பணிபுரிந்தார்.[2] வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் கொடிவீரன் படத்திலும் நடித்தார். மதுரையைக் களமாக கொண்ட ஆடுகளம் படத்திற்கு உரையாடல் எழுதினார். மதயானைக் கூட்டம் படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் இரண்டாவது படமாக இராவண கோட்டம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்து ஏறுதழுவலை மையமாக கொண்ட தேரும் போரும் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

குறிப்புகள் தொகு

  1. ஆனந்தப்பிரியா,தி.ஹரிஹரன், ச (in ta). ```மதயானைக் கூட்டம்'க்கு ரெண்டு க்ளைமாக்ஸ் யோசிச்சேன்; அது என்னன்னா?!" - விக்ரம் சுகுமாரன். https://cinema.vikatan.com/kollywood/director-vikram-sugumaran-interview. பார்த்த நாள்: 2023-02-25. 
  2. "வெயில் மனிதர்களின் வாழ்க்கை! - விக்ரம் சுகுமாரன் நேர்காணல்". இந்து தமிழ் திசை. பார்க்கப்பட்ட நாள் 2023-02-25. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்ரம்_சுகுமாரன்&oldid=3666015" இலிருந்து மீள்விக்கப்பட்டது