விசிறிவால் தங்கமீன்
விசிறிவால் தங்கமீன் |
---|
தோன்றிய நாடு |
சீனா & யப்பான் (ஆசியா) |
வகை |
விசிறிவால் |
இனப்பெருக்க தரம் |
BAS |
விசிறிவால் தங்கமீன் என்பது தங்கமீன் வகைகளுள் ஒன்றாகும். இது முட்டை வடிவில், உயரமான முதுகுத் துடுப்பு, நீண்ட நான்கு வால் துடுப்பு தோள்பட்டை இல்லாமல் காணப்படுகின்றன.[1][2] இது ரையுகின் போலக் காணப்படும். மேலும் மேற்கத்திய நாடுகளில் பொதுவாகக் காணப்படுகின்றது.
விளக்கம்
தொகுவிசிறிவால் தங்கமீன் உலோக அல்லது சிப்பி போன்ற செதில்கள் மற்றும் சாதாரண அல்லது தொலைநோக்கி கண்களைக் கொண்டுள்ளது. இந்த தொலைநோக்கி கண்கள் மீனின் வயது 6 மாதமாக இருக்கும் போதே தோன்றுகின்றன. குத மற்றும் வால் துடுப்பு இரு சம பிரிவாகப் பிரிந்து காணப்படும். பொதுவாகத் தங்கமீன்கள் தன் வாழிடச் சூழல் மாறுபாடுகளை உணரக்கூடியன. குறைந்த வெப்பநிலையில் நீண்ட நேரம் இவற்றை வைத்திருக்கும்போது பாதிப்படையும் தன்மை உடையனவாக உள்ளன. பொதுவாக இவற்றின் வாழிடச்சூழல் வெப்பம் 73 முதல் 74 பாகை பாரன்ஹீட் வரை தேவைப்படுகிறது [2]
இனப்பெருக்கம்
தொகுநல்ல வீரியமான விசிறிவால் மீன்களைத் தேர்வு செய்து இனப்பெருக்கம் செய்வதன் மூலம் தரமான மீன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. விசிறிவால் மீன்களை இனப்பெருக்கம் செய்விப்பது மிகவும் எளிதானது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Fancy Goldfish: A Complete Guide to Care and Collecting" by Dr. Erik L. Johnson, D.V.M. and Richard E. Hess, Weatherhill, Shambala Publications, Inc., 2006. – பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8348-0448-4
- ↑ 2.0 2.1 "An Interpet Guide to Fancy Goldfish" by Dr. Chris Andrews, Interpet Publishing, 2002. - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-902389-64-6