விசுவமடு

விசுவமடு இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஏற்றுநீர்ப்பாசனத்திட்டத்தின் மூலம் குடியமர்த்தப்பட்ட ஒரு விவசாயக் கிராமமாகும். இது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் உள்ளது. 9°18'00"வ 80°41'00"கி என்னும் ஆள்கூறுகளைக் கொண்டு அமைந்துள்ளது. இப் பிரதேசத்தின் விவசாய செய்கைக்கு விசுவமடுக்குளம் நீர்ப்பாசன தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது.

விசுவமடு
நகரம்
நாடுஇலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலாளர் பிரிவுபுதுக்குடியிருப்பு

பாடசாலைகள்தொகு

  • மு/விசுவமடு மகா வித்தியாலயம்
  • மு/றெட்பானா பாரதி வித்தியாலயம்
  • மு/விசுவமடு விசுவநாதர் ஆரம்ப பாடசாலை
  • மு/நெத்தலியாறு அ.த.க.பாடசாலை
  • கிளி/பிரமந்தனாறு மகா வித்தியாலயம்
  • கிளி/புன்னைநீராவி அ.த.க.பாடசாலை

கோவில்கள்தொகு

இந்துக் கோவில்கள்தொகு

  • தொட்டியடி பிள்ளையார் கோவில்
  • அதிசயவிநாயகர் ஆலயம்
  • புத்தடி பிள்ளையார் கோவில்
  • மாணிக்கப்பிள்ளையார் கோவில்
  • குளத்தடி வீரபத்திரர் கோவில்
  • தொட்டியடி ஆஞ்சநேயர் ஆலயம்

கிறித்தவ ஆலயங்கள்தொகு

  • றெட்பானா புனித இராயப்பர் ஆலயம்
  • பிரமந்தனாறு இறைஇரக்க யேசு ஆலயம்
  • தென்னிந்திய திருச்சபை
  • இலங்கை பெந்தகொஸ்தே திருச்சபை

சமூக அமைப்புகள்தொகு

  • விசுவமடு மத்திய சனசமூக நிலையம் 1993 இல் ஆரம்பிக்கப்பட்டு நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளினால் அதன் செயற்பாடுகள் சிறிதுகாலம் தடைப்பட்டிருந்தன. இது இவ்வூர் மக்களின் கல்வி, கலை, கலாச்சார, பண்பாடு, விளையாட்டு மற்றும் பாரம்பரிய விழுமியங்களை மேம்படுத்தும் நோக்குடன் அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

விளையாட்டுக் கழகங்கள்தொகு

  • விசுவமடு மத்திய விளையாட்டுக்கழகம்
  • விசுவமடு தோழர்கள் விளையாட்டுக்கழகம்
  • நாச்சிக்குடா இளந்தென்றல் விளையாட்டுக்கழகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுவமடு&oldid=3392154" இருந்து மீள்விக்கப்பட்டது