விச்சிக்கோ

சங்க கால மன்னன்

விச்சிக்கோ சங்ககால மன்னர்களில் ஒருவன். விச்சிமலை நாட்டின் அரசன். விச்சிக்கோ, விச்சிக்கோன், விச்சியர் பெருமகன் என்றெல்லாம் சங்கநூல்களில் இவன் குறிப்பிடப்படுகிறான்.

பாரிமகளிரை மணக்க மறுத்தவன்தொகு

பாரி இறந்தபின் கபிலர் பாரிமகளிரை அழைத்துக்கொண்டு சென்று அவர்களைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வேண்டினார். விச்சிக்கோ பாரிமகளிரைத் திருமணம் செய்துகொள்ளவில்லை எனத் தெரிகிறது. [1]

விச்சிக்கோவின் தம்பி இளவிச்சிக்கோதொகு

விச்சிக்கோ தன் தம்பி இளவிச்சிக்கோவுக்குக் கொடைஉள்ளம் இல்லாத நன்னன் ஒருவனின் மகளைத் திருமணம் செய்துவைத்தான். [2]

விச்சியர் பெருமகன் வேந்தரோடு போரிட்டதுதொகு

விச்சியர் பெருமகன் விற்படை வீரர்களை மிகுதியாகப் பெற்றிருந்தான். இவன் வேந்தரை எதிர்த்துப் போரிட்டான். இந்தப் போர் புலியும் காடைப்பறவையும் மோதுவது போல் உள்ளது என்று பேசிக்கொண்டு குறும்பூர் மக்கள் ஆரவாரம் செய்தனர். [3]

அடிக்குறிப்புதொகு

  1. கபிலர் - புறநானூறு 200
  2. வன்பரணர் - புறநானூறு 151
  3. பரணர் - குறுந்தொகை 328
"https://ta.wikipedia.org/w/index.php?title=விச்சிக்கோ&oldid=1839850" இருந்து மீள்விக்கப்பட்டது