விஜயானந்த தகநாயக்கா

டபிள்யூ. தகநாயக்க எனப் பொதுவாக அறியப்படும் விஜயானந்த தகநாயக்கா (Wijeyananda Dahanayaka, சிங்களம்: විජයානන්ද දහනායක; 22 அக்டோபர் 1902 – 4 மே 1997) இலங்கையின் அரசியல்வாதி. இவர் இலங்கையின் பிரதமாராக 1959 இலிருந்து 1960 வரை இருந்தார்.

விஜயானந்த தகநாயக்கா
இலங்கையின் பிரதமர்
பதவியில்
26 செப்டம்பர் 1959 – 20 மார்ச் 1960
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
முன்னையவர்சாலமன் பண்டாரநாயக்கா
பின்னவர்டட்லி சேனாநாயக்க
இலங்கை நாடாளுமன்றம்
for காலி
பதவியில்
14 அக்டோபர் 1947 – 19 மார்ச் 1960
பின்னவர்டபிள்யூ. டி. எஸ். அபேகுணவர்தன
பதவியில்
20 சூலை 1960 – 21 சூலை 1977
முன்னையவர்டபிள்யூ. டி. எஸ். அபேகுணவர்தன
பின்னவர்ஆல்பர்ட் டி சில்வா
பதவியில்
20 டிசம்பர் 1979 – 15 பெப்ரவரி 1989
முன்னையவர்ஆல்பர்ட் டி சில்வா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1902-10-22)22 அக்டோபர் 1902
காலி, இலங்கை
இறப்பு4 மே 1997(1997-05-04) (அகவை 94)
காலி, இலங்கை
தேசியம்இலங்கை இலங்கைn
அரசியல் கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சி
முன்னாள் கல்லூரிரிச்மண்ட் கல்லூரி (இலங்கை)
தொழில்அரசியல்வாதி, ஆசிரியர்

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

இலங்கையின் காலி மாவட்டத்தில் முகாந்திரம் தியோனிசியசு சேபால பண்டித தகநாயக்கா என்பவரின் இரட்டை ஆண் பிள்ளைகளில் மூத்தவராக விஜயானந்த பிறந்தார். காலியில் உள்ள ரிச்மன்ட் கல்லூரியிலும், கல்கிசை புனித தோமையர் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[1]

அரசியலில்

தொகு

லங்கா சமசமாஜக் கட்சி உறுப்பினராக இருந்த இவர், 1944 ஆம் ஆண்டில் பிபிலை தொகுதியில் முதன் முதலாகப் போட்டியிட்டு அரசாங்க சபைக்கு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[1] காலி மாநகரசபை முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.[1] காலி தேர்தல் தொகுதியில் 1947 தேர்தலிலும்,[2] பின்னர் 1952 தேர்தலிலும்[3] போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1956 தேர்தலில்[4] சாலமன் பண்டாரநாயக்கா தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பண்டாரநாயக்கா அரசில் 1956 முதல் 1959 வரை கல்வி அமைச்சராகப் பணியாற்றினார்.

1959 செப்டம்பரில் பிரதமர் சாலமன் பண்டாரநாயக்கா படுகொலை செய்யப்பட்ட போது இடைக்கால அரசுக்கு இவர் பிரதமராகவும், பாதுகாப்பு, வெளிவிவகார, மற்றும் கல்வி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். ஓராண்டு காலத்துக்கு இவர் பதவியில் இருந்தார்.

1960 மார்ச் தேர்தலில்[5] இவர் லங்கா பிரஜாதந்திரவாதி கட்சி (இலங்கை சனநாயகக் கட்சி) என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்து காலி தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். பின்னர் சூலை 1960 தேர்தலிலும், 1965 தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1965 முதல் 1970 வரை டட்லி சேனநாயக்கா தலைமையிலான அரசில் உள்ளூராட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1970 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1977 தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோற்றாலும், பின்னர் 1979 இல் காலித் தொகுதிக்கு இடம்பெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1989 வரை நாடாளுமன்றம் சென்றார். ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் அரசில் 1986 முதல் 1988 வரை கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் பதவியில் இருந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Gaston de Rosayro (26 அக்டோபர் 2014). "Remembering Wijayananda Dahanayake". தி ஐலண்டு. Archived from the original on 2014-10-29. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2014.
  2. "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-09-12.
  3. "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-09-12.
  4. "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-09-12.
  5. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-12. பார்க்கப்பட்ட நாள் 2014-09-12.

வெளி இணைப்புகள்

தொகு
அரசு பதவிகள்
முன்னர் இலங்கை பிரதமர்
1959–1960
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயானந்த_தகநாயக்கா&oldid=3572020" இலிருந்து மீள்விக்கப்பட்டது