விட்டாலியம்

விட்டாலியம் (Vitallium) என்பது 65% கோபால்ட், 30% குரோமியம், 5% மாலிப்டினம் மற்றும் பிற தனிமங்கள் சேர்ந்து உருவாக்கப்பட்ட ஒரு கலப்புலோகத்தின் வர்த்தகப் பெயராகும். அரிமானத்திற்கு எதிராக இது செயல்படும் என்பதால் பல் மருத்துவம் மற்றும் செயற்கை இணைப்பு மருத்துவம் போன்ற துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. நல்ல வெப்பத்தடையை கொடுக்கும் என்பதால் விட்டாலியம் சுழலிமின்னேற்றிகளின் பகுதிப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகிறது. 1932 இல் ஆல்பர்டு டபிள்யூ மெர்ரிக் ஆசுடெனல் ஆய்வகத்திற்காக விட்டாலினை உருவாக்கினார்.

91 வயதான நார்மன் சார்ப் என்ற பிரித்தானியருக்கு மேற்கொள்ளப்பட்ட இடுப்பு மாற்ற அறுவை சிகிச்சை உலகத்தின் மிக வயதானவர்களுக்கான சிகிச்சையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இலண்டனில் உள்ள இராயல் தேசிய எலும்புசிக்கிச்சை மருத்துவமனையில் 1948 ஆம் ஆண்டு இரண்டு விட்டாலியம் உட்பொருத்துப் பொருட்கள் ஒருவருக்கு பொருத்தப்பட்டன. 67 வயதான அவர் நீண்ட நாட்கள் வாழ்ந்தார். உட்பொருத்தப்பட்ட பொருட்களை அவர் மீண்டும் எடுக்கவேயில்லை. அப்பொழுது சார்ப்பின் வயது 23 ஆகும் [1]

மேற்கோள்கள் தொகு

  1. "Former RNOH patient has world's oldest hip replacements". Royal National Orthopaedic Hospital. 21 March 2016. Archived from the original on 1 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 14 ஜனவரி 2017. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  • Wojnar, L (2001). "Porosity structure and mechanical properties of vitalium-type alloy for implants". Materials Characterization 46 (2–3): 221-225. doi:10.1016/S1044-5803(01)00127-9. 
  • Kaminski, M; Baszkiewicz, J; Kozubowski, J; Bednarska, A; Barcz, A; Gawlik, G; Jagielski, J (1997). "Effect of silicon ion implantation on the properties of a cast Co–Cr–Mo alloy". Journal of Materials Science 32 (14): 3727-3732. doi:10.1023/A:1018607219482. 

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விட்டாலியம்&oldid=3571597" இலிருந்து மீள்விக்கப்பட்டது