விண்ணோட சுற்றுக்கலன்

விண்ணோடச் சுற்றுக்கலன் (Space Shuttle orbiter) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா மையத்தால் செயல்படுத்தப்பட்ட விண்ணோடத் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட மறுபயன்பாட்டுகுகந்த விண்ணூர்தி ஆகும். சுற்றுக்கலன் மீண்டும் பயன்படுத்தக்கூடிய இறக்கையுடைய விண்-வானூர்தியாகும், இது ஏவூர்தி, விண்கலம், வானூர்தி ஆகியவற்றின் கலவை. இந்த விண்-வானூர்தியானது பயணக்குழுவையும் பயணச்சுமையையும் பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு எடுத்துச்சென்று, அங்கு சுற்றுப்பாதை செயல்பாடுகள் செய்துவிட்டு, மறுபடியும் காற்றுமண்டலத்துக்குள் நுழைந்து ஒரு மிதவை வானூர்தியைப் போல தரையிறங்கலாம், பயணக்குழுவையும் பயணச்சுமையையும் பூமிக்குப் பாதுகாப்பாக மீண்டும் கொண்டுவரலாம்.

விண்ணோடச் சுற்றுக்கலன்
டிசுக்கவரி சுற்றுக்கலன் STS-121 அனைத்துலக விண்வெளி நிலையத்தை அணுகுகிறது.
தயாரிப்பாளர்Rockwell International
நாடுஐக்கிய அமெரிக்கா
இயக்கம்நாசா
செயற்பாடுகள்ஆட்கள் மற்றும் சுமைகளைச் சுமந்துசெல்லும் விண்ணூர்தி
விவரக்கூற்று
சுற்றுப்பாதை முறைமைபூமியின் தாழ் வட்டப்பாதை
தயாரிப்பு
நிகழ்நிலைமுடிக்கப்பெற்றது
கட்டமைப்பு6
ஏவப்பட்டது5 சுற்றுக்கலன்கள்
135 பயணங்கள்
நீக்கம்விண்ணோடம் அட்லாண்டிசு
STS-135
July 21, 2011
தொலைந்தவை2 சுற்றுக்கலன்கள்
முதல் ஏவல்விண்ணோடம் கொலம்பியா
STS-1
April 12, 1981
கடைசி ஏவல்விண்ணோடம் அட்லாண்டிசு
STS-135
July 8, 2011

இவ்வகையில் ஆறு சுற்றுக்கலன்கள் கட்டப்பட்டன. அவை, கொலம்பியா, சாலஞ்சர், டிஸ்கவரி, அட்லாண்டிஸ், எண்டெவர் மற்றும் எண்டர்பிரைசு என்பனவாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்ணோட_சுற்றுக்கலன்&oldid=2116140" இலிருந்து மீள்விக்கப்பட்டது