விந்து கொடை

விந்து தானம் அல்லது விந்து கொடை (Sperm donation) என்பது ஆண் தன் மனைவியல்லாத பெண்ணைக் கருத்தரிக்கச் செய்யத் தன் விந்தைத் தானம் தருவதாகும். இந்த விந்துவினால் பிறக்கும் குழந்தைக்கு விந்தை அளித்தவர் தான் தந்தை என்றாலும், சட்டப்படியும் பிற சடங்குகளின்படியும் கருத்தரித்த பெண்ணின் கணவரே அக்குழந்தைக்குத் தந்தையாகக் கருதப்படுவார். குழந்தையல்லாத இணையர் மட்டுமின்றி ஓரினச் சேர்க்கையாளர்களும், திருமணம் செய்து கொள்ளாத பெண்களும் இவ்வகையில் குழந்தை பெற்றுக் கொள்வர்.

தன் விந்தை கொடையளிக்க விரும்புபவர் விந்து வங்கியை நாடி கொடையளிப்பர். விந்தைப் பெற விரும்பும் இணையர் விந்தை அளித்தவரின் உடற்கட்டு, இனம், தோற்றம், திறமைகள் போன்ற பிற தகவல்களை நாடிப் பெறுவதும் உண்டு. கருத்தரித்தல் செயற்கை முறையில் விந்தை பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தல் வழியும் நடைபெறும். சில நேரங்களில் அந்த ஆண் அப்பெண்ணுடன் உடலுறவு கொண்டு கருத்தரிக்கச் செய்தலும் நடைபெறும். ஆண் ஒருவர் தனியார் விந்து வங்கிகளில் தன்னுடைய விந்தைக் குறிப்பிட்ட பெண்ணுக்குத் தர அனுமதி உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விந்து_கொடை&oldid=3421038" இருந்து மீள்விக்கப்பட்டது