வினை வகைகள்

வினை


வினை வகைகள்தொகு

வினை வாக்கியம்தொகு

பெயர்ச்சொல்லின் தொழிலைக் காட்டுவது வினைச்சொல் ஆகும். வினைச்சொற்கள் முற்று, எச்சம் என்பது மட்டுமில்லாமல் அவை பயன்படுவதன் அடிப்படையில் பலவகைப்படுகின்றன. அவை,

வினை வகைகள்தொகு

 • தன்வினை.
 • பிறவினை.
 • செய்வினை.
 • செயப்பாட்டுவினை.
 • உடன்பாட்டுவினை.
 • எதிர்மறைவினை.

தன்வினை, பிறவினை வாக்கியங்கள்தொகு

தன்வினை வாக்கியம்தொகு

தன்வினை வாக்கியத்தில் ஒரு நபர் தானே ஒரு செயலைச் செய்வது.

உதாரணம்தொகு

பாரி உண்டான்.

இவ்வகை வாக்கியத்தில் பாரி என்னும் எழுவாய் உண்ணும் செயலைச் செய்வதால் அது தன்வினை வாக்கியமாகிறது.

பிறவினை வாக்கியம்தொகு

ஒரு நபர் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்வது.

உதாரணம்தொகு

பாரி உண்பித்தான். இவ்வகை வாக்கியத்தில் உண்ணும் செயலை வேறு யாரோ செய்ய எழுவாய் துணைசெய்வதாக உள்ளதால் அது பிறவினை வாக்கியமாகிறது.

 • இவ்வாக்கியத்தில் மெல்லொற்று (ந்,ங்) வல்லொற்றாகிப் (த்,க்) பிறவினை ஆயிற்று.
 தன்வினை  -  பிறவினை
 வருந்துவான் -  வருத்துவான்
 திருந்தினான் -  திருத்தினான் 
 அடங்கினான் - அடக்கினான்
 • இவ்வாக்கியத்தில் வல்லொற்று (ட்,ற்) இரட்டித்துப் (ட்ட், ற்ற்) பிறவினை ஆயிற்று.
 தன்வினை - பிறவினை
 ஆடினான் – ஆட்டினான்
 மாறுவான் - மாற்றுவான்
 • பிறவினையாகும்போது வி, பி ஆகிய விகுதிகளில் ஒன்று, சேர்ந்து வருவதும் உண்டு.
  நட - நடப்பி - நடப்பித்தான் 
  செய் - செய்வி - செய்வித்தான்
 • சொல் வடிவை விட, அது உணர்த்தும் பொருளை வைத்தே தன்வினையா, பிறவினையா என அறிதல் வேண்டும்.

செய்வினை செயப்பாட்டுவினை வாக்கியங்கள்தொகு

செய்வினை வாக்கியம்தொகு

  ஒரு வாக்கியம் எழுவாய் செயப்படுப்பொருள், பயனிலை என்ற வரிசையில் அமையும். வாக்கியத்தில், செயப்படுபொருளோடு ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்து வரும். சில சமயம் ‘ஐ’ மறைந்தும் வரும்.

உதாரணம்

கண்மணி பாடத்தைப்தொகு

(எழுவாய்) (பயனிலை)தொகு

படித்தாள்தொகு

(செயப்படுப்பொருள்)தொகு

இது செய்வினைத் தொடர் - Active Voice. பொதுவாக செயப்பாட்டு வினையில் எழுவாயுடன் ஆல், ஆன் இவற்றில் ஒன்று நேராகவோ, மறைந்தோ வரலாம்.

செயப்பாட்டு வினை வாக்கியம்தொகு

  ஒரு வாக்கியம் செயப்படுப்பொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் அமையும். எழுவாயோடு ’ஆல்’ என்ற 3ம் வேற்றுமை உருபும், பயனிலையோடு ‘பட்டது’, ‘பெற்றது’ என்ற சொற்கள் சேர்ந்து வரும்.

உதாரணம்தொகு

              கண்மணியால் பாடம்
(எழுவாய்)   (பயனிலை) 
படிக்கப்பட்டது.
         (செயப்படுபொருள்)   
  இது செயப்பாட்டு வினை - Passive Voice.  பொதுவாக செயப்பாட்டு வினையில் எழுவாயுடன் ஆல், ஆன் இவற்றில் ஒன்று நேராகவோ, மறைந்தோ வரலாம்.

செய்வினைத் தொடரைச் செயப்பாட்டு வினைத் தொடராக்கும் விதிகள்தொகு

(அ) எழுவாயைச் செயப்படுபொருள் ஆக்க வேண்டும். அதனுடன் மூன்றாம் வேற்றுமை உருபாகிய ‘ஆல்’ என்பதைச் சேர்க்க வேண்டும்.

எடுத்துக்காட்டுதொகு

                 கண்மணி + ஆல் = கண்மணியால்
 

(ஆ) செயப்படுபொருளில் உள்ள, ‘ஐ’ வேற்றுமை உருபை நீக்கி, எழுவாயாக மாற்ற வேண்டும்.

எடுத்துக்காட்டுதொகு

                 பாடத்தை - பாடம் + ஐ. இதில் ‘ஐ’ நீக்கினால், பாடம்(எழுவாய்)
 

(இ) பயனிலையுடன் ‘படு’, ‘பட்டது’ என்னும் துணைவினைகளைச் சேர்க்க வேண்டும்.

எடுத்துக்காட்டுதொகு

                பாடம் கண்மணியால் படிக்கப்பட்டது. 
 

இவ்வாறு செயப்பாட்டு வினை - Passive Voice அமையும் என்பதை அறிக. மேலும் சில எடுத்துக்காட்டுகள்.

===செய்வினையை செயப்பாட்டு வினையாக மாற்றுதல்===
                         ====செய்வினை==== 	
                      ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார்.  
                      இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார். 
                       
                        ====செயப்பாட்டு வினை====
                     இலக்கணம் ஆசிரியரால் கற்பிக்கப்பட்டது.

சிலப்பதிகாரம் இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது.


செயப்பாட்டு வினையை செய்வினையாக மாற்றுதல்தொகு

                          ====செயப்பாட்டு வினை====
                     நாட்டுப்பற்று நாடகக் கலைஞர்களால் வளர்க்கப்பட்டது. 	    
                           ====செய்வினை====
                      நாடகக் கலைஞர்கள் நாட்டுப்பற்றை வளர்த்தனர்.

இவ்வாறு, செய்வினை, செயப்பாட்டு வினைத் தொடர்கள் அமையும்.

உடன்பாட்டுவினை எதிர்மறைவினை வாக்கியங்கள்தொகு

உடன்பாட்டு வினைதொகு

ஒரு செயலைச் செய்வதற்கு உடன்பட்ட நிலையைத்தான். உடன்பாட்டு வினை எனப்படுகிறது

உதாரணம்தொகு

 • வருகிறேன்
 • செய்கிறான்
 • செய்வேன்
 • பெறுவான்

போன்ற வினைச்சொற்கள் ஒரு வினையைச் செய்வதையோ, செய்யப் போவதையோ அறிவிக்கின்றன. இவற்றை உடன்பாட்டு வினைகள் என்கிறோம்.

எதிர்மறை வினைதொகு

ஒருவன் ஒரு தொழிலைச் செய்ய உடன்படா நிலையை (அல்லது) எதிர்மறை நிலையை எதிர்மறை வினை எனப்படுகிறது.

உதாரணம்தொகு

 • வாரேன் (வர மாட்டேன் என்பது பொருள்)
 • செய்யேன் (செய்ய மாட்டேன் என்பது பொருள்)
 • செய்யான் (செய்ய மாட்டான் என்பது பொருள்)
 • பெறான் (பெற மாட்டான் என்பது பொருள்)

என்னும் சொற்கள் ஒருவன் ஒரு தொழிலைச் செய்ய உடன்படா நிலையை (அல்லது) எதிர்மறை நிலையைப் புலப்படுத்துகின்றன. எனவே இவை எதிர்மறைவினைகள் என்று சுட்டப்படுகின்றன. உடன்பாட்டு வினைச் சொற்களின் இடையில் எதிர்மறை இடைநிலை வந்து எதிர்மறைப் பொருளை உணர்த்துகின்றது.

 • செய் + ஆ + ஆன் - செய்யான்
 • தெரி + அல் + அன் - தெரியலன்
 • வந்து + இல் + அன் - வந்திலன்

இச் சொற்களில், ‘ஆ’, ‘அல்’, ‘இல்’ ஆகியன எதிர்மறைப் பொருள் உணர்த்துகின்றன. பெரும்பாலும் எதிர்மறைக்கு ‘ஆ’கார இடைநிலையே வரும். இக்காலத்தில் மாட்டான், மாட்டேன் என்பன போன்ற சொற்களால் எதிர்மறையைக் குறிக்கிறோம்.

குறிப்புதொகு

சுருங்கச் சொன்னால், எதிர்மறை இடைநிலைகள் வாராத வினைகள் எல்லாம் உடன்பாட்டு வினைகளே. அவற்றைப் பெற்றிருப்பன எதிர்மறை வினைகளாகும். வினைமுற்றுச் சொற்களில் எதிர்மறை இருப்பது போன்று பெயரெச்ச, வினையெச்சச் சொற்களோடு ‘ஆ’ சேர்ந்தும் எதிர்மறைப் பொருள்படும்.

பெயரெச்சம்தொகு

 • கேட்கும் செவி,
 • காணும் கண்

இத்தொடர்களில் உள்ள, கேட்கும், காணும் என்னும் சொற்கள் தமக்குப்பின் ஒரு பெயர்ச்சொல் கொண்டு முடிவதால், அவற்றைப் பெயரெச்சம் என்கிறோம். இப்பெயரெச்ச, வினையெச்சச் சொற்களும் ‘ஆ’ என்னும் எதிர்மறை இடைநிலை பெற்று வரும்.

எதிர்மறைப் பெயரெச்சம்தொகு

 • கேள் + ஆ - கேளாச் செவி
 • காண் + ஆ - காணாக் கண்

வினையெச்சம்தொகு

 • செய்ய வந்தேன்,
 • செய்து வந்தான்

இத்தொடர்களில் இடம்பெற்றுள்ள செய்ய, செய்து என்னும் சொற்கள் தமக்குப் பின் ஒரு வினைமுற்றுச் சொல்லைக் கொண்டே முடிவதால், வினையெச்சம் என்று சொல்லப் பெறுகின்றன.

எதிர்மறை வினையெச்சம்தொகு

 • பாராது இருந்தாள்
 • எழுதாமல் இருந்தான்

எனவே, உடன்பாட்டு வினைகளே எதிர்மறை இடைநிலை பெற்று, வினைமுற்றுச் சொற்களிலும் எச்சச் சொற்களிலும் எதிர்மறையை உணர்த்தும்.

மேற்கோள்கள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=வினை_வகைகள்&oldid=3421806" இருந்து மீள்விக்கப்பட்டது