வினோத் அகர்வால்
இந்திய அரசியல்வாதி
வினோத் சந்தோசு குமார் அகர்வால் (Vinod Agrawal) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 மகாராட்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் கோண்டியா சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்பு, இவர் பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்புடையவர்.[1][2] பின்னர் சூன் 23 அன்று 2022 மகாராட்டிர அரசியல் நெருக்கடிக்கு இடையில் இவர் மீண்டும் பாஜகவில் சேர்ந்தார்.[3] இதன் பின்னர் நவம்பர் 2024-ல் நடைபெற்ற மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
வினோத் அகர்வால் | |
---|---|
உறுப்பினர்-மகாராட்டிர சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 20 நவம்பர் 2024 | |
தொகுதி | கோண்டியா |
உறுப்பினர்-மகாராட்டிர சட்டமன்றம் | |
பதவியில் 2019–2024 | |
தொகுதி | கோண்டியா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 4 சூன் 1970 கோந்தியா, மகாராட்டிரம் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Agrawal Vinod Santoshkumar(Independent(IND)):Constituency- GONDIA(GONDIYA) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2020-04-12.
- ↑ "Maharashtra election result winners full list: Names of winning candidates of BJP, Congress, Shiv Sena, NCP". India Today (in ஆங்கிலம்). October 25, 2019. பார்க்கப்பட்ட நாள் 2020-04-12.
- ↑ Prakash, Swayam (2022-06-23). "महाराष्ट्र में गहराता जा रहा सियासी संकट, बीजेपी में शामिल हुए निर्दलीय विधायक विनोद अग्रवाल". India TV Hindi (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-06-23.