விரல் கணிதம்

விரல் (கணிதம்) என்பது பண்டையத் தமிழர்கள் நீளத்தை அளப்பதற்குப் பயன்படுத்திய அளவை முறையின் அலகுகளில் ஒன்று. அளப்பதெற்கென்று தனிப்பட்ட அளவு கருவிகளை முழுவதுமாகச் சார்ந்திராமல், தமது உடம்பின் பாகங்களைக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் பொருட்கள், (கயிறு, கம்பு, துணி) நீளங்கள் மற்றும் இரு குறிப்பிட்ட பொருட்களுக்கு இடைப்பட்ட தூரம் (ஓரளவு சிறியதான) ஆகியவற்றை அளக்கும் வழமையைத் தமிழர்கள் கொண்டிருந்தனர். அவர்கள் பயன்படுத்திய அலகுகளுள் விரற்கடை, சாண் மற்றும் முழம் ஆகியவை பரவலானவை.[1] ஒவ்வொரு மனிதருக்கும் உடல் அளவுகள் மாறுபடும் என்பதால் விரற்கடை, சாண் மற்றும் முழம் ஆகிய அலகுகள் குறிக்கும் தூரம் அளக்கும் ஆட்களைப் பொறுத்து மாறுபடும் தன்மையுடையது என்றாலும் சாதாரண மக்களும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு அளவை முறையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.[2][3]

ஒரு மனிதரின் கையில் அமைந்துள்ள ஒரு விரலின் அகலம், ஒரு விரல் அல்லது விரற்கடை அளவாகும். நமது வலது கையில் கட்டை விரலை மடித்துக் கொண்டு மற்ற நான்கு விரல்களையும் ஒட்டினாற்போல வைத்தநிலையில் ஆட்காட்டி விரலுக்கும் சுண்டு விரலுக்கும் இடைப்படும் அகலப்போக்கான அளவு நான்கு விரற்கடை எனப்படும்.[4]

இருபத்து நான்கு விரல் கொண்டது ஒரு முழம் ஆகும். விரல் பன்னிரண்டு கொண்டது ஒரு சாண். சாண் இரண்டு கொண்டது ஒரு முழம்.[5]

1 விரல் = 1/24 முழம் = 1/24 * 18 அங்குலம் = 3/4 அங்குலம் 1 விரல் = 1/12 சாண் =1/12 * 9 அங்குலம் =3/4 அங்குலம்

மேற்கோள்கள் தொகு

  1. Barrow, J.D. (trans. Hayashi, M.) (2003). Tenku no Pi [Pi in the Sky: Counting, Thinking, and Being], Tokyo: Misuzu Shobo.
  2. Guedj, D. (trans. Nanjyo, I.) (1998). Su no Rekishi [L’empire des nombres], Osaka: Sogensha.
  3. Menniger, K. (trans. Uchibayashi, M.) (2001). Zusetsu Su no Bunkashi [Number Words and Number Symbols: A Cultural History of Numbers], Tokyo: Yasaka Shobo.
  4. Seidenberg, A. (1960). the Diffusion of Counting Practices, Univ. of California Press.
  5. Zaslavsky, C. (1999). Africa Counts: Number and Pattern in African Culture, Lawrence Hill Books.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விரல்_கணிதம்&oldid=3701253" இலிருந்து மீள்விக்கப்பட்டது