விலாஸ்ராவ் தேஷ்முக்

விலாசுராவ் தேசுமுக்கு (மராட்டி: विलासराव देशमुख,) ( பிறப்பு மே 26, 1945 - இறப்பு ஆகத்து 14, 2012 )[1][2] காங்கிரசு கட்சியின் உறுப்பினரான தேசுமுக்கு முதலாக 1999 முதல் 2003 வரை மகாராட்டிராவின் முதலமைச்சராக பணியாற்றினார். மீண்டும் 2004இல் நவம்பர் 1ஆம் தேதி முதலமைச்சராக உறுதி செய்யப்பட்டார், 2008 திசம்பர் 7 வரை பதவியிலிருந்தார். மும்பைத்தாக்குதல்களுக்கு தார்மீக பொறுப்பேற்று மகாராட்டிரா மாநில முதல்வர் பதவியிலிருந்து விலாசுராவ் தேசுமுக்கு விலகினார். அதை தொடர்ந்து 2008 திசம்பர் 8இல் அசோக் சவான் மகாராட்டிராவின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவரது மூன்று மகன்களில் ஒருவர், இரித்தேசு தேசுமுக்கு, இந்தி திரைப்படத்துறையில் நடிகர் ஆவார்[3].

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விலாஸ்ராவ்_தேஷ்முக்&oldid=3576106" இலிருந்து மீள்விக்கப்பட்டது