வில்சன் சம்பிரமாரி

இந்திய அரசியல்வாதி

வில்சன் சம்பிரமாரி (Wilson Champramary) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த இவர் இரண்டு முறை அம்மாநிலத்தின் சட்ட மன்ற உறுப்பினராக இருந்துள்ளார். கல்சினி சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

வில்சன் சம்பிரமாரி
மேற்கு வங்காள சட்டமன்றம்
பதவியில்
2009–2021
முன்னையவர்மனோகர் திர்கி
பின்னவர்விசால் லாமா
தொகுதிகல்சினி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (2019-முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (2016-2019)
வேலைஅரசியல்வாதி

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கல்சினி தொகுதியில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். [1] பாரதிய சனதா கட்சி வேட்பாளர் விசால் லாமாவை இத்தேர்தலில் வில்சன் தோற்கடித்தார். [2] [3]

2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முந்தைய சட்டமன்ற உறுப்பினர் மனோகர் திர்கியை கூர்க்கா இயன்முக்தி மோர்ச்சாவின் ஆதரவுடன் அலிபுருதுவார் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். 2016 ஆம் ஆண்டு இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியில் சேர்ந்தார், ஆனால் பின்னர் 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாரதிய சனதா கட்சிக்கு மாறினார்.[4][5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Winner and Runner up Candidate in Kalchini assembly constituency". பார்க்கப்பட்ட நாள் 2 June 2016.
  2. "West Bengal 2011 Wilson Champramary (Winner) KALCHINI". பார்க்கப்பட்ட நாள் 2 June 2016.
  3. "West Bengal 2016 WILSON CHAMPRAMARY (Winner) KALCHINI". பார்க்கப்பட்ட நாள் 2 June 2016.
  4. "GJM-supported Independent MLA joins Trinamool Congress". business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 2 June 2016.
  5. "Wilson speech censure from TMC". telegraphindia.com. Archived from the original on 22 June 2015. பார்க்கப்பட்ட நாள் 2 June 2016.
  6. "Keep distance, party tells Wilson - Kalchini MLA advised to stay away from party and government events". telegraphindia.com. Archived from the original on 25 June 2015. பார்க்கப்பட்ட நாள் 2 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்சன்_சம்பிரமாரி&oldid=3992374" இலிருந்து மீள்விக்கப்பட்டது