வில்லியம் பால்

பிரித்தானிய வானியலாளர்

வில்லியம் பால் (William Ball) (அல்லது பாலே (Balle), அண்.1631–1690) ஓர் ஆங்கிலேய வானியலாளர் ஆவார். இவர் அரசு கழக நிறுவன ஆய்வுறுப்பினர்களில் ஒருவராவார். இவர் 1660 நவம்பர் 28 இல் அதன் பொருளாளராகப் பணியமர்த்தப் பரு, அப்பதவியில் 1663 வரை இருந்தார்.[1]

இவர் சட்டத் தரணி சர் பீட்டர் பாலுக்கும் கைநாம் நகரத்து வில்லியம் கூக்கின்மகளாகிய ஆன்னி குக்குக்கும் பிறந்த மூத்த மகன் ஆவார். இவர் ஆர்வம் தளராத வானியலாளர். இதற்காக, 1655 இல் ஒரு 12 அடி தொலைநோக்கியை வாங்கினார்; இதற்குள் காரிக்கோளின் வலயங்கள் அது விளிம்புக் காட்சி நிலைக்கு மாறிய த்ற்றத்தை அடைந்துவிட்டதால் புவியின் கட்புலத்தில் இருந்து மறைந்து காணப்பட்டது,ஈவரும் இயற்பியல் வல்லுனரான அவரது தம்பியும் காரி வலயங்களை ஒரு பட்டையைப்போல காரிக்கோள் மீது அமைதலைப் பார்த்துள்ளனர். அதே ஆண்டில் இவர் காரிக்கோளின் சழற்சி வீதத்தைக் கண்டறிந்து நிறுவினார்.[2]

இவர் 1660 இல் 30 அடி உயரத்தில் இருந்து கீழே தரையில் விழுந்துள்ளார். இந்த ஏதத்தால் தொடர்ந்து உடல்நலமின்றி இருந்தார். இவர் 1666 இல் பணி ஓய்வு பெற்று தன் குடும்பத்தின் தெவோன் தோட்டத்துக்கு சென்று 1668 இல் மேரி போசுத்துமா கசியை மணந்து வாழ்க்கையைத் தொடர்ந்தார். இவர்கள் 6 குழந்தைகளைப் பெற்று வளர்த்தனர். தெவோன் தோட்டத்தின் பேணும் பணி நெருக்கடியாலும் அத்தோட்டம் இலண்டனில் இருந்து தொலைவில் இருந்ததாலும் இவருக்கு தன் அறிவியல் ஆர்வத்தை ஈடுகொடுக்க நேரமே கிட்டவில்லை.[3]

நிலாவின் பாலே குழிப்பள்ளம் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.


மேற்கோள்கள் தொகு

  1. Maddison, R. E. W. (1960). "The Accompt of William Balle from 28 November 1660 to 11 September 1663". Notes and Records of the Royal Society of London 14 (2): 174–183. doi:10.1098/rsnr.1960.0030. 
  2. Armitage, Angus (1960). "William Ball. F.R.S. (1627-1690)". Notes and Records of the Royal Society of London 15: 167–172. doi:10.1098/rsnr.1960.0016. 
  3. Joseph Gross, ‘Ball, William (c.1631–1690)’, Oxford Dictionary of National Biography, Oxford University Press, 2004
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_பால்&oldid=3628495" இலிருந்து மீள்விக்கப்பட்டது