வில்லியம் மெக்கின்லி
வில்லியம் கேம்பல் (William McKinley, சனவரி 29, 1843 – செப்டம்பர் 14, 1901) ஐக்கிய அமெரிக்காவின் 25-வது அரசுத் தலைவராக 1897 மார்ச் 4 முதல் 1901 செப்டம்பரில் படுகொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தவர். இவர் எசுப்பானிய அமெரிக்கப் போரில் நாட்டை வெற்றிக்கு அழைத்துச் சென்றவர். அமெரிக்கத் தொழில்துறையை ஊக்குவிப்பதற்காக பாதுகாப்பு வரியை அறிமுகப்படுத்தினார்.
வில்லியம் மெக்கின்லி William McKinley | |
---|---|
ஐக்கிய அமெரிக்காவின் 25-வது அரசுத்தலைவர் | |
பதவியில் மார்ச் 4, 1897 – செப்டம்பர் 14, 1901 | |
துணை அதிபர் |
|
முன்னையவர் | குரோவர் கிளீவ்லாண்ட் |
பின்னவர் | தியொடோர் ரோசவெல்ட் |
ஒகையோ மாநிலத்தின் 39-வது ஆளுநர் | |
பதவியில் சனவரி 11, 1892 – சனவரி 13, 1896 | |
முன்னையவர் | யேம்சு கேம்பல் |
பின்னவர் | ஆசா புசுனெல் |
ஒகையோவுக்கான கீழவை உறுப்பினர் | |
பதவியில் மார்ச் 4, 1885 – மார்ச் 3, 1891 | |
முன்னையவர் | டேவிட் பேஜ் |
பின்னவர் | யோசப் டெய்லர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நைல்சு, ஒகையோ, ஐக்கிய அமெரிக்கா | சனவரி 29, 1843
இறப்பு | செப்டம்பர் 14, 1901 (அகவை 58)
பஃபலோ (நியூ யோர்க்), அமெரிக்கா |
Manner of death | படுகொலை |
இளைப்பாறுமிடம் | கேன்டன், ஒகையோ |
அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி |
துணைவர் | ஈடா சாக்ஸ்டன் (தி. சனவரி 25, 1871) |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் | வில்லியம் மெக்கின்லி நான்சி அலிசன் |
கல்வி | அல்பானி சட்டப் பள்ளி |
தொழில் | |
கையெழுத்து | |
Military service | |
பற்றிணைப்பு | |
கிளை/சேவை |
|
சேவை ஆண்டுகள் | 1861–1865 (அமெரிக்க உள்நாட்டுப் போர்) |
தரம் | |
அலகு | 23வது ஒகையோ படைப்பிரிவு |
போர்கள்/யுத்தங்கள் | அமெரிக்க உள்நாட்டுப் போர் |
அமெரிக்க உள்நாட்டுப் போர்க் காலங்களில் பதவியில் இருந்த கடைசி அமெரிக்க அரசுத் தலைவர் மெக்கின்லி ஆவார். போர் ஆரம்பிக்கும் போது இவர் இராணுவ வீரராக இராணுவத்தில் சேர்க்கப்பட்டார். இராணுவத் தளபதியாகப் போரை முடித்தார். போரின் பின்னர் ஒகையோவில் கேன்டன் நகரில் குடியேறி, சட்டவறிஞராகப் பணியாற்றினார். அங்கு ஈடா சாக்ஸ்டனைத் திருமணம் புரிந்தார். 1876 இல், அமெரிக்க சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாதுகாப்பு வரிக்கான குடியரசுக் கட்சியின் பிரசாரகராக இவர் இருந்தார். இவ்வரி நாட்டுக்கு செழிப்பைக் கொண்டு வரும் என இவர் உறுதி அளித்தார். 1890 இல் இவரது மெக்கின்லி வரி பெரும் சர்ச்சையை நாட்டில் கிழப்பியது; சனநாயகக் கட்சியின் எதிர்ப்புடன் இது 1890 இல் சனநாயகக் கட்சி பெரும் வெற்றி பெற்றது. 1891, 1893 இல் ஒகையோவின் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1896 அரசுத்தலைவர் தேர்தலில் பொருளாதார மந்தநிலை காணப்பட்ட போதிலும் இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிக வரியின் மூலம் நாடு செழிப்புறும் என இவர் வலியுறுத்தினார். தேர்தலில் சனநாயகக் கட்சி வேட்பாளர் வில்லியம் பிறையனைத் தோற்கடித்தார்.
மெக்கின்லியின் பதவிக் காலத்தில், பொருளாதாரம் தீவிர வளர்ச்சி அடைந்தது. உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்களை வெளிநாட்டுப் போட்டிகளில் இருந்து பாதுகாக்க 1897 இல் டிங்க்லி வரியை அறிமுகப்படுத்தினார். கிளர்ச்சியில் ஈடுபட்ட கியூபாவிற்கு[1] குழப்பம் ஏதுமின்றி எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையைப் பெற்றுக் கொடுக்க முடியும் என நம்பினார்.[2] ஆனாலும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த போது, எசுப்பானிய அமெரிக்கப் போரை 1898 இல் ஆரம்பித்தார். அமெரிக்கா இப்போரில் உறுதியானதும் எளிதனதுமான வெற்றியைப் பெற்றது.[3] அமைதி உடன்பாட்டின் ஒரு பகுதியாக எசுப்பானியா தனது முக்கிய வெளிநாட்டுக் குடியேற்றங்களான புவேர்ட்டோ ரிக்கோ, குவாம், பிலிப்பீன்சு ஆகியவற்றை அமெரிக்காவுக்குத் தந்தது.[4] கியூபாவிற்கு விடுதலை உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அக்காலத்தில் அது அமெரிக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1898 இல் அவாய் குடியரசை அமெரிக்கா தன்னுடன் இணைத்து, அமெரிக்கப் பிராந்தியமாக்கியது.
மெக்கின்லி 1900 இல் நடந்த அரசுத்தலைவர் தேர்தலில் மீண்டும் பிறையனைத் தோற்கடித்தார். இத்தேர்தலில் பேரரசுவாதம், பாதுகாப்புவாதம், மற்றும் சுயாதீன வெள்ளி ஆகியவை பேசு பொருள்களாக இருந்தன. மெக்கின்லி 1901 செப்டம்பர் 6 இல் போலந்து அமெரிக்க வம்சாவழியைச் சேர்ந்த லியோன் சொல்கோசு என்ற வன்முறையாளனால் சுட்டுக் காயப்படுத்தப்பட்டார். மெக்கின்லி எட்டு நாட்கள் கழித்து இறந்தார். இவருக்குப் பின்னர் துணைத் தலைவராக இருந்த தியொடோர் ரோசவெல்ட் அரசுத்தலைவரானார். அமெரிக்காவின் இடையீட்டுவாதம், மற்றும் வணிக சார்பு உணர்வு போன்றவற்றைக் கருத்தில் கொள்ளும் போது, மெக்கின்லியின் ஆட்சி சராசரிக்கும் அதிகமாகவே மதிக்கப்பட்டது.
ஆரம்ப வாழ்க்கையும் குடும்பமும்
தொகுவில்லியம் மெக்கின்லி 1843 இல் ஒகையோ மாநிலத்தில் நைல் எனும் இடத்தில் வில்லியம் மெக்கின்லி, நான்சி மெக்கின்லி ஆகியோருக்கு ஏழாவது குழந்தையாகப் பிறந்தார். [5] மெக்கின்லியின் குடும்பம் ஆங்கிலேய, இசுக்கொட்டிய-ஐரிய வம்சாவழியைச் சேர்ந்தது. 18-ஆம் நூறாண்டில் பென்சில்வேனியாவில் குடிபுகுந்தவர்கள். [5]
பிள்ளைகளின் படிப்பைக் கருத்தில் கொண்டு 1852 இல் இவரது குடும்பம் ஒகையோவின் போலந்துய் நகரில் குடியேறினர். 1859 இல் போலந்து மடப்பள்ளியில் படித்து, பின்னர் பென்சில்வேனியா அலிகேனி கல்லூரியில் இணைந்தார். அலிகேனியில் ஓராண்டு மட்டுமே படித்தார், 1860 இல் சுகவீனம் காரணமாக விடு திரும்பினார். குடும்பத்தின் நிதி நிலைமை மோசமாகவே, மெக்கின்லியால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் அஞ்சல் அலுவலகத்தில் பணி புரிந்தார். பின்னர் பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார்.[6]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகுஉசாத்துணைகள்
தொகுநூல்கள்
- Leech, Margaret (1959). In the Days of McKinley. New York: Harper and Brothers. இணையக் கணினி நூலக மைய எண் 456809.
- Morgan, H. Wayne (2003). William McKinley and His America (revised ed.). Kent, Ohio: The Kent State University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87338-765-1.
- Armstrong, William H. (2000). Major McKinley: William McKinley and the Civil War. Kent, Ohio: The Kent State University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87338-657-9.
- Gould, Lewis L. (1980). The Presidency of William McKinley. American Presidency. Lawrence, Kansas: University Press of Kansas. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7006-0206-3.
வெளி இணைப்புகள்
தொகு- William McKinley Presidential Library and Museum
- White House biography
- William McKinley: A Resource Guide, அமெரிக்கக் காங்கிரசு நூலகம்
- Extensive essays on William McKinley and shorter essays on each member of his cabinet and First Lady from the Miller Center of Public Affairs