வில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி)
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் 14-ஆவது
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது 2007 ஆம் ஆண்டு மீளெல்லை வகுப்புக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கியிருந்தது. இதன் தொகுதி எண் 14. இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. புரசைவாக்கம், அண்ணா நகர், ஆலந்தூர், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், பூந்தமல்லி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் தொகு
சென்னை மாநகராட்சி வார்டு எண் 55 முதல் 58 வரை, 63 மற்றும் 64[1]
வெற்றி பெற்றவர்கள் தொகு
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | க. சுப்பு | திமுக | 37,327 | 41.07 | ஆர்.ஈசுவர் ராவ் | அதிமுக | 29,429 | 32.38 |
1980 | பிராபகர் ராசன் | அதிமுக | 57,192 | 47.84 | கே. சுப்பு | திமுக | 56,489 | 47.25 |
1984 | வி. பி. சித்தன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 81,595 | 48.21 | பிராபகராசன் | அதிமுக | 80,549 | 47.59 |
1989 | உ. ரா. வரதராசன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 99,571 | 46.77 | டி. பாலசுப்பரமணியன் | அதிமுக (ஜெ) | 40,150 | 18.86 |
1991 | ஜி. காளன் | காங்கிரசு | 1,18,196 | 55.49 | டபள்யு. ஆர். வரதராசன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 71,963 | 33.79 |
1996 | ஜே. எம். ஆரூண்ரஷீத் | தமாகா | 1,94,471 | 70.24 | எம். ஜி. மோகன் | காங்கிரசு | 46,724 | 16.88 |
2001 | துரைசாமி நெப்போலியன் | திமுக | 1,64,787 | 48.21 | எ. செல்லகுமார் | தமாகா | 1,55,557 | 45.51 |
2006 | ப. ரங்கநாதன் | திமுக | 2,78,850 | 46 | ஜி. காளன் | அதிமுக | 2,48,734 | 41 |
2011 | ஜே. சி. டி. பிரபாகர் | அ.தி.மு.க | 68,612 | 52.44 | க. அன்பழகன் | தி.மு.க | 57,830 | 41 |
2016 | ப. ரங்கநாதன் | தி.மு.க | 65,972 | 44.98 | ம. ராசு | அ.தி.மு.க | 56,651 | 38.62 |
2021 | அ. வெற்றியழகன் | தி.மு.க | 76,127 | 52.83 | ஜே. சி. டி. பிரபாகர் | அ.தி.மு.க | 38,890 | 26.99 |
- 1977இல் ஜனதாவின் பாண்டுரங்கன் 16,518 (18.17%) வாக்குகள் பெற்றார்.
- 1989இல் காங்கிரசின் மணிவர்மா 32,211 (15.13%) & அதிமுக ஜானகி அணியின் பிராபகர் ராசன் 30,322 (14.24%) வாக்குகளும் பெற்றனர்.
- 2006இல் தேமுதிகவின் வேல்முருகன் 51,892 வாக்குகள் பெற்றார்.
வாக்காளர் எண்ணிக்கை தொகு
2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வாக்குப் பதிவுகள் தொகு
ஆண்டு | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு |
---|---|---|
2011 | % | ↑ % |
2016 | % | ↑ % |
ஆண்டு | நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|---|
2016 | % |
மேற்கோள்கள் தொகு
- ↑ "Tamil Nadu - Final Notification & Order". National Informsatics Centre. http://eci.nic.in/delim/Final_Publications/Tamilnadu/Final%20Notification%20&%20Order%20.pdf.