விஸ்நகர் (Visnagar), இந்தியாவின் மேற்கில் அமைந்த குஜராத் மாநிலத்தின் வடக்கில் உள்ள மெக்சனா மாவட்டத்தில் அமைந்த விஸ்நகர் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி மன்றத்துடன் கூடிய நகரம் ஆகும். இந்நகரத்தில் உள்ள பரேக் வல்லப ஹேம்சந்த் பொது நூலகம் 3 மார்ச் 1878 அன்று நிறுவப்பட்டது. இது மாவட்டத் தலைமையிடமான மெக்சனா நகரத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலும், அகமதாபாத்திற்கு வடக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

விஸ்நகர்
செப்பு நகரம்
நகரம்
விஸ்நகர் is located in குசராத்து
விஸ்நகர்
விஸ்நகர்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் மெக்சனா மாவட்டத்தில் விஸ்நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 23°42′N 72°33′E / 23.7°N 72.55°E / 23.7; 72.55
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்மெக்சனா
தோற்றுவித்தவர்மன்னர் விசால்தேவ்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்விஸ் நகராட்சி
ஏற்றம்117 m (384 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்76,753
மொழிகள்
 • அலுவல் மொழிகுஜராத்தி மொழி, இந்தி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்384315
தொலைபேசி குறியீடு எண்02765
வாகனப் பதிவுGJ-2-
இணையதளம்www.20nagar.com www.visnagarcity.com

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 9.06 எக்டே பரப்பளவு கொண்ட விஸ்நகரத்தின் மக்கள் தொகை 76753 ஆகும். அதில் ஆண்கள் 40181 மற்றும் பெண்கள் 36572 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 910 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 7084 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 89.96% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4900 மற்றும் 602 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 90.42%, இசுலாமியர் 7.76%, சமணர்கள் 0.97% மற்றும் பிறர் 0.64% ஆகவுள்ளனர்.[1]

கல்வி தொகு

  • சங்கல் சந்த் படேல் பல்கலைக்கழகம்
  • எம் என் கலை அறிவியல் கல்லூரி
  • ஆதர்ஷ் வித்தியாலயா
  • டி. டி. பரேக் கன்யா வித்தியாலயா
  • சர்தார் படேல் மேனிலைப்பள்ளி

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஸ்நகர்&oldid=3518804" இலிருந்து மீள்விக்கப்பட்டது