வி.எசு. உக்ரப்பா

இந்திய அரசியல்வாதி

வி. எசு. உக்ரப்பா (V. S. Ugrappa) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் கர்நாடகாவின் பெல்லாரி தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் தேவேந்திரப்பாவிடம் இவர் தோற்றார்.[2][3] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாரதிய சனதா கட்சி வேட்பாளர் ஜே. சாந்தாவை 2.1 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் உக்ரப்பா தோற்கடித்தார்.[4][5]

வி. எசு. உக்ரப்பா
V. S. Ugrappa
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
6 நவம்பர் 2018 – 23 மே 2019
முன்னையவர்பி. சிறீராமுலு
பின்னவர்ஒய். தேவேந்திரப்பா
தொகுதிபெல்லாரி
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
24 சூன் 2014 – 6 நவம்பர் 2018
தொகுதிஆளுநர் பரிந்துரை
பதவியில்
2004–2010
தொகுதிஉள்ளாட்சி அமைப்புகள் தொகுதி
பதவியில்
1995–1998
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 சூன் 1954 (1954-06-03) (அகவை 70)[1]
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்கே. வி. மஞ்சுளா
பிள்ளைகள்1 மகன், 1 மகள்
வாழிடம்(s)பெங்களூர், கருநாடகம்
தொழில்விவசாயி, வழக்கறிஞர்

பாவகடா தாலுக்காவின் வெங்கடபுராவில் உக்ரப்பா பிறந்தார்.

உக்ரப்பா முன்பு கர்நாடக சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Venkatapura Subbaiah Ugrappa: Age, Biography, Education, Wife, Caste, Net Worth & More - Oneindia".
  2. "Bengaluru: Failure to vote - Congress leaders, Ramya, Ugrappa, trolled in social media". பார்க்கப்பட்ட நாள் 2019-05-11.
  3. "Ballari MP V S Ugrappa complains to Election Commission against Sreeramulu | Hubballi New". https://timesofindia.indiatimes.com/city/hubballi/ugrappa-complains-to-ec-against-sreeramulu/articleshow/69257687.cms. 
  4. "After 14 years, BJP loses Bellary LS seat". https://www.deccanherald.com/state/after-14-years-bjp-set-lose-701815.html. 
  5. "Begin criminal proceedings against Sriramulu, EC urged". https://www.thehindu.com/news/national/karnataka/begin-criminal-proceedings-against-sriramulu-ec-urged/article27084720.ece. 
  6. "Cong bets on Ugrappa for Bellary Lok Sabha seat". டெக்கன் ஹெரால்டு. 15 October 2018. https://www.deccanherald.com/state/cong-bets-ugrappa-bellary-lok-698145.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி.எசு._உக்ரப்பா&oldid=3940275" இலிருந்து மீள்விக்கப்பட்டது