வி. அப்பாபிள்ளை

வேலுப்பிள்ளை அப்பாபிள்ளை (13 நவம்பர் 1913 – 4 சூலை 2001) ஒரு இலங்கையைச் சேர்ந்த இயற்பியலாலர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் பேராதனையில் உள்ள இலங்கைப் பல்கலைக்கழக அறிவியல் துறையின் கல்வி தலைவர் ஆவார்.

பேராசிரியர்
முனைவர்

வி. அப்பாபிள்ளை
தாய்மொழியில் பெயர்வேலுப்பிள்ளை அப்பாபிள்ளை
பிறப்புநவம்பர் 13, 1913(1913-11-13)
மட்டக்களப்பு, சிலோன்
இறப்பு4 சூலை 2001(2001-07-04) (அகவை 87)
கனெடிகட், அமெரிக்க ஐக்கிய நாடு
கல்வியாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
இலங்கைப் பல்கலைக்கழகம்
மான்செஸ்டர் பல்கலைக்கழகம்
பணிகல்வியாளர்

ஆரம்ப வாழ்க்கைதொகு

வேலுப்பிள்ளை அப்பாபிள்ளை 13 ஆம் நாள் நவம்பர் திங்கள் 1913 ஆண்டு மட்டக்களப்பு என்ற கிழக்கு இலங்கை கடற்கரை பகுதியில் பிறந்தார். இவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் 1931 ஆம் ஆண்டு கல்வி கற்றார். பள்ளி படிப்பை முடித்து கொழும்பில் உள்ள இலங்கை பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.[1]

பணிகள்தொகு

அப்பாபிள்ளை 1936 ஆம் ஆண்டு இயற்பியல் துறையில் பரிசோதனை மூலம் பாடம் கற்றுத் தருபவராக இலங்கை பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். பின்னர் 1938 ஆம் ஆண்டில் இயற்பியல் துறையில் விரிவுரையாளராக பணி உயர்த்தப்பட்டார். கொழும்புவில் அவர் தனது முனைவர் ஆராய்ச்சியை இயற்பியலில் மேற்கொண்டார். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் 1946 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அங்கு லாங்வர்தி பேராசிரியர் திரு பி. எம். எஸ். பிளாகிடுவின் கீழ் பணியாற்றி வந்தார். கொழும்பில் கடல் மட்டத்தில் உள்ள காஸ்மிக் கதிர்கள் உருவாக்கம் மற்றும் தோற்றம் குறித்த அப்பாபிள்ளைவயின் பணிகள் அவருக்கு முணைவர் படத்தை இலண்டன் பல்கலைக்கழகம் பெற்றுத் தந்தது.[1]

இலங்கை வருகைதொகு

அப்பாபிள்ளை இலங்கை திரும்பியதும் அ. வி. மயில்வாகனம், அர்னால்டு வால்பின்டலே மற்றும் பி. எம். எஸ். பிளாகிடு உடன் இணைந்து இணை ஊடுருவல் துகள்கள் அளவீட்டு எல்லைக்குள் இல்லை என்று நிறுவினார்.[1][2] 1963 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் புதிய திணைக்களத்தை ஒழுங்கமைத்து அபிவிருத்தி செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார். அவர் ஓய்வு பெறும் வரையில் 1970 ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரையில் இலங்கைப் பல்கலைக்கழக அறிவியல் துறையின் கல்வி தலைவராக பணியாற்றி வந்தார்.[1]

செயல்பாடுதொகு

வேலுப்பிள்ளை அப்பாபிள்ளை இலங்கை விஞ்ஞான முன்னேற்ற சங்கம், அகில இந்திய பெருங்கடல் அறிவியல் சங்கம், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் அமைத்த இலங்கை தேசிய குழு, இலங்கை தரநிர்ணய ஆலோசனை கவுன்சில் மற்றும் இலங்கை நியதிகளுக்கான தேசிய விஞ்ஞான கவுன்சில் ஆகியவற்றில் உருப்பினராக பணியாற்றி வந்தார். தெற்கு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐக்கிய இராச்சியத்தின் மாரலிங்கா அணுகுண்டு சோதனையில் அப்பாபிள்ளை கண்கானிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

முதுமை காலப் பணிகள்தொகு

அப்பாபிள்ளை 1979 ஆம் ஆண்டில் பேராதனை பல்கலைக்கழகம் பணி ஓய்வுக்கு பின் ஒரு கவுரவ பேராசிரியராக நியமித்தது. 1984 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகம் அவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கவுரவித்தது. 1999 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கவுரவித்தது. இவரை இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அமைத்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு மட்டக்களப்பு பல்கலைகழக விரிவாக பணியை மேற்கொண்டது.[3] பேராதனை பல்கலைக்கழகம் இவர் பெயரான அப்பாபிள்ளை பெயரிலேயே ஆண்டு தோரும் ஊக்க தொகையும் பரிசுகளும் வழங்கி வருகிறது.[4]

இறப்புதொகு

வேலுப்பிள்ளை அப்பாபிள்ளை தன் மகளுடன் அமெரிக்க ஐக்கிய நாடுக்கு தான் உயிருள்ளபோதே கொண்டு வரப்பட்டார்.[1] வேலுப்பிள்ளை அப்பாபிள்ளை அவர்கள் 4 ஆம் நாள் சூலை திங்கள் 2001 ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் மாநிலமான கனெடிகட்டில் லமானார்.[5]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Kumaravadivel, R. (10 October 1999). "Honouring this mighty man". தி சன்டே டைம்ஸ் (இலங்கை). http://www.sundaytimes.lk/991010/plus14.html. 
  2. Sri Kantha, Sachi (4 March 2009). "Sri Lankan Tamil Scientists: An Inventory of Their Productivity". இலங்கை தமிழ் சங்கம்.
  3. "History, Faculty of Arts & Culture, Eastern University, Sri Lanka". மட்டக்களப்பு பல்கலைகழகம்.
  4. "Prizes and Scholarships". பேராதனை பல்கலைக்கழகம். மூல முகவரியிலிருந்து 12 June 2012 அன்று பரணிடப்பட்டது.
  5. "வேலுப்பிள்ளை அப்பாபிள்ளை (1913–2001)". Ancient Faces.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._அப்பாபிள்ளை&oldid=2712555" இருந்து மீள்விக்கப்பட்டது