வி. ஆர். எஸ். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

வி. ஆர். எஸ். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (V.R.S College of Engineering and Technology) என்பது இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட அரசூர் என்னும் ஊரில் உள்ள ஓர் பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரியானது 1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[1][2]

வி. ஆர். எஸ். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
வகைசுயநிதி கல்வி நிறுவனம்
உருவாக்கம்1994
தலைவர்எம். சரவணன்
முதல்வர்மரு. என். அன்பழகன்
அமைவிடம், ,
11°49′12″N 79°25′12″E / 11.82000°N 79.42000°E / 11.82000; 79.42000
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்அதிகாரப்பூர்வ வலைதளம்

நிறுவனம்

தொகு

இக்கல்லூரியானது அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. மேலும் இது புது தில்லியில் இயங்குகின்ற ஏ.ஐ.சி.டி.இயின் அங்கீகாரம் பெற்றக் கல்லூரியாகும்.

இருப்பிடம்

தொகு

இது விழுப்புரம் - உளுந்தூர்பேட்டை சாலையில் 45வது தேசிய நெடுஞ்சாலையில், அரசூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இக்கல்லூரி விழுப்புரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவிலும், உளுந்தூர்பேட்டையிலிருந்து 24 கி. மீ தொலைவிலும், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து 175 கி. மீ தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள இரயில் நிலையம், திருவெண்ணெய் நல்லூர் ரோடு இரயில் நிலையம் 2 கி. மீ தொலைவில் உள்ளது.

உள்கட்டமைப்பு

தொகு

இங்கு மாணவ, மாணவிகளுக்கென தனி, தனியாக தங்கும் விடுதிகள் உள்ளன. கல்லூரியில் உள்ள நூலகத்தில் அனைத்து துறைகளைச் சேர்ந்த புத்தகங்கள் அத்துடன் தொழில்நுட்ப இதழ்களும் பிற இதழ்களும் உள்ளன. கணினி ஆய்வகங்கள், பொழுதுபோக்கு அறைகள், விளையாட்டு வசதிகள், உணவகம் போன்றவை உள்ளன.

தேர்வு முறை

தொகு

ஒவ்வொரு கல்வி ஆண்டும் இரண்டு பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பருவங்களிலும் அனைத்து கோட்பாடு பாடங்களில் மூன்று உள் தேர்வுகளும், மற்றும் ஒரு இறுதித் தேர்வும் இருக்கும். ஆய்வகத் தேர்வுகள் இறுதித் தேர்வை தொடர்ந்து உள் தேர்வாக வைக்கப்படுகிறது. அனைத்துத் தேர்வுகளும் இந்தியாவின் பிற பொறியியல் கல்லூரிகள் போன்றே எழுத்துத் தேர்வுகள் மற்றும் செய்முறைத் தேர்வுகள் முறை வழக்கத்தில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லூரி ஆண்டு விழா".தினமலர் (26 மார்ச்சு, 2018)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-01-18. பார்க்கப்பட்ட நாள் 2018-08-15.

வெளி இணைப்புகள்

தொகு