வி. கே. நாராயண மேனன்

வி. கே. நாராயண மேனன் (V. K. Narayana Menon) (திருச்சூர் வடக்கே குருபத் நாராயண மேனன்) பாரம்பரிய இந்திய நடனம் மற்றும் இந்திய பாரம்பரிய இசை அறிஞர் ஆவார். இந்தியாவின் முக்கிய கலை விமர்சகர்களில் ஒருவராகவும், சங்கீத நாடக அகாதமி கூட்டாளர்கௌரவத்தைப் பெற்றவராகவும் இருந்தார்.

கல்வி மற்றும் தொழில்

தொகு

மேனன் கேரளாவின் திருச்சூர் நகரில் வடக்கே குருபத் குடும்பத்தில் பிறந்தார். பிபிசி இசை நிகழ்ச்சித் தயாரிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் அதன் தலைமை இயக்குநரானார். இந்தியாவின் கலை நிறுவனங்கள் மற்றும் ஒளிபரப்பு மையங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். அனைத்திந்திய வானொலியின் துணை இயக்குநராக இருந்தார். இந்திய அரசின் கலை, இசை மற்றும் நடனத்திற்கான உச்ச மையமான புதுதில்லியில் உள்ள சங்கீத நாடக அகாடமியின் செயலாளராக இருந்தார். மும்பை தேசிய நிகழ்த்து கலை மையத்தின் தலைவராகவும் இருந்த இவர், இந்த பதவிக்காலத்தில் பல்வேறு கலைகளையும் கலைஞர்களையும் பெரிதும் ஊக்குவித்தார்.

பாரம்பரிய இந்திய நடனம் மற்றும் இசை பற்றிய இவரது எழுத்துக்களுக்காக இவர் குறிப்பிடப்பட்டார். இது குறித்து பல கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் சிறந்த இந்திய கலை விமர்சகர்களில் ஒருவராக கருதப்பட்டார். கேரளா ஒரு சுயவிவரம், தஞ்சாவூர் பாலசரஸ்வதி, டபிள்யூ. பி. யீட்சு நடனக் கலைஞரின் வாழ்க்கை பற்றி) பாலஸரஸ்வதி-தகவல் தொடர்பு புரட்சி, இசையின் மொழி, டபிள்யூ. பி. யீட்சின் வளர்ச்சி ஆகியவை இவரது படைப்புகளில் சில. தி இல்லசுடிரேட்டட் வீக்லி ஆப் இந்தியா போனிவர் தொடர்ந்து கட்டுரைகளை எழுதினார்.

இந்திய அரசு, 1969 இல் பத்ம பூசண் விருதையும், 1980 இல் சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் விருதையும் வழங்கி கௌரவித்தது.[1][2]

இவர் இரவீந்திரநாத் தாகூரின் சகோதரரின் மகளை மணந்தார்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  2. "SNA: List of Akademi Fellows::". sangeetnatak.org. Archived from the original on 27 July 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கே._நாராயண_மேனன்&oldid=4043338" இலிருந்து மீள்விக்கப்பட்டது