வி. க. ர. வ. ராவ்
விஜயேந்திர கஸ்தூரி ரங்க வரதராஜ ராவ் (Vijayendra Kasturi Ranga Varadaraja Rao) (8 சூலை 1908 - 25 சூலை 1991) இவர் ஓர் இந்திய பொருளாதார நிபுணரும்,அரசியல்வாதியும், தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளருமாவார். இவருக்கு பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டுள்ளது.
வி. க. ர. வ. ராவ் | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | விஜயேந்திர கஸ்தூரி ரங்க வரதராஜ ராவ் 8 சூலை 1908 காஞ்சிபுரம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | 25 சூலை 1991 | (அகவை 83)
வேலை | பொருளாதார நிபுணர், அரசியல்வாதி |
அறியப்படுவது | புது தில்லி, பொருளியல் பள்ளியின் நிறுவனர் |
விருதுகள் | பத்ம விபூசண் (1974) |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇவர் ஒரு மத்வ பிராமணக் குடும்பத்தில் [1] 1908 சூலை 8 ஆம் தேதி தமிழ்நாட்டின் காஞ்சீபுரத்தில் கஸ்தூரிரங்காச்சாருக்கும், பாரதி அம்மாவிற்கும் பிறந்தார். திண்டிவனத்திலும் சென்னையிலும் தனது ஆரம்ப பள்ளிப்படிப்பைப் பெற்றார். [2] 1971 ஆம் ஆண்டில் மத்திய கல்வி அமைச்சராக பணியாற்றினார். 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் பெல்லாரி மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்திலிருந்துமற்றொரு இளங்கலை பட்டம் பெறுவதற்கு முன்பு மும்பை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலையும் முதுகலையையும் முடித்தார். 1937 இல் கேம்பிரிச்சு கோன்வில்லி மற்றும் கயசு கல்லூரியிலிருந்து முனைவர் பட்டமும் பெற்றார். அவரது முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு "பிரிட்டிசு இந்தியாவின் தேசிய வருமானம், 1931-1932" என்பதாகும். பிரித்தானியப் பொருளியலாளர் ஜான் மேனார்ட் கெய்ன்ஸ் இவருடன் படித்தார்.
மரியாதை
தொகுநிறுவனர்
தொகுஇவர் இந்தியாவில் சமூக அறிவியல் ஆராய்ச்சியில் புதுதில்லி, பொருளியல் பள்ளி, பொருளாதார வளர்ச்சி நிறுவனம்,சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான நிறுவனம் ஆகிய மூன்று குறிப்பிடத்தக்க நிறுவனங்களை நிறுவினார். இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி அமைப்பு, வேளாண் பொருளாதார மையங்கள், மக்கள் தொகை ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றை நிறுவுவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். இவர் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி அமைப்பு வடிவத்தில் ஒரு தன்னாட்சி பொது அமைப்பை உருவாக்கினார். இது சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (1860) கீழ் சூலை 30, 1969 அன்று தில்லியில் நிறுவப்பட்டது. இவர் நிறுவிய 3 நிறுவனங்களும், இன்றும் கூட மிக நெருக்கமான உள்-நிறுவன உறவைப் பேணுகின்றன. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அலுவலகமான மைசூரு, இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம், இவரது சிந்தனையாக கருதப்படுகிறது. [3] இவரது பார்வைக்கு அதன் தற்போதைய முக்கியத்துவத்தை செலுத்த வேண்டிய மற்றொரு அமைப்பு தில்லியின் இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனம். தில்லி கர்நாடக சங்கத்தின் மூன்றாவதுத் தலைவராக இருந்தார்.
புதுதில்லி, பொருளியல் பள்ளி, பொருளாதார வளர்ச்சி நிறுவனம்,சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான நிறுவனம் ஆகியவற்றின் நிறுவனர்-இயக்குநராக இருப்பதன் மூலம், இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் ஆராய்ச்சியின் உயர் தரத்திற்கு பொறுப்பேற்றுள்ளதாக இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டியுள்ளார். பொருளாதார மாற்றம், பெங்களூர். சர்வதேச துறையில் இவர் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (யுஎன்டிபி) மற்றும் ஐடிஏ ஆகியவற்றின் மைய சக்திகளில் ஒருவராக இருந்தார். சமூக அறிவியல் ஆராய்ச்சியில் வி.கே.ஆர்.வி.ராவ் பரிசுகளால் இவர் நினைவுகூரப்படுகிறார். [4]
குறிப்புகள்
தொகு- ↑ India's Economy and Growth: Essays in Honour of V K R V Rao. SAGE Publishing India.
- ↑ The Partial Memoirs of V.K.R.V. Rao. Oxford University Press.
- ↑ https://www.cambridge.org/core/journals/language-in-society/article/debi-prasanna-pattanayak-ed-multilingualism-in-india-multilingual-matters-61-clevedon-uk-philadelphia-pa-multilingual-matters-1990-pp-xii-116-pb-1900/D71B55AB5817B494C1B9B8A50167F45B
- ↑ [1]
மேலும் படிக்க
தொகு- S. L. Rao (ed.) The Partial Memoirs of V.K.R.V. Rao Oxford University Press: USA, 2002 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-565823-X reviewed in Tale of triumph — or disillusionment?, The Hindu, 20 January 2002 accessed at [2] பரணிடப்பட்டது 2008-05-18 at the வந்தவழி இயந்திரம் 30 August 2006