வி. தண்டாயுதபாணி

இந்திய அரசியல்வாதி

வி. தண்டாயுதபாணி (V. Dhandayuthapani) அல்லது காங்கிரஸ் தண்டாயுதபாணி என்பார் அதற்கு காரணம் அப்போது தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் கம்யூனிஸ்ட் தண்டாயுதம் என்ற ஒரு பெரிய தலைவர் இருந்தால் அவ்வாறு அழைத்து வந்தனர். மேலும் இவர் தமிழகத்தில் முன்னாள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.

வி. தண்டாயுதபாணி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅழிஞ்சுக்குப்பம், வேலூர் மாவட்டம்
இறப்பு21, நவம்பர் 1920
சென்னை, தமிழ்நாடு
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்கமலவேணி
பிள்ளைகள்கமலகாந்த், கிசோர், பிரமோத்பாபு
வாழிடம்(s)வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

இவர் வேலூர் மாவட்டம் குடியதம் அருகில் உள்ள அழிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர். சட்டம் பயின்ற இவர் காமராசரால் ஈர்க்கபட்டு இதேகாவில் இணைந்து தமிழக மாணவர் காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்தார். பின்னர் நிறுவன காங்கிரசு கட்சியின் சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக 1977 முதல் 1980வரை இருந்தார். பின்னர் மீண்டும் இந்திரா காங்கிரசில் இணைந்த இவர் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளராக பதவி வகித்தார். இதன்பிறகு 1991 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

இறப்பு தொகு

சென்னை ஆழ்வார் பேட்டையில் வசித்துவந்த இவர் உடல் நலக் குறைவினால் தன் 79வது வயதில் 2020 நவம்பர் 21 அன்று இறந்தார்.[2]

வகித்த பதவிகள் தொகு

மக்களவை உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1977 வேலூர் நிறுவன காங்கிரசு

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1991 குடியாத்தம் இந்திய தேசிய காங்கிரசு 64.41

மேற்கோள்கள் தொகு

  1. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-15.
  2. வேலூர் முன்னாள் எம்.பி. சி. வி தண்டாயுதபாணி காலமானார். செய்தி தினமணி 2020 நவம்பர் 22

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._தண்டாயுதபாணி&oldid=3868340" இலிருந்து மீள்விக்கப்பட்டது