வீரபாண்டி ஆ. இராசேந்திரன்
வீரபாண்டி ஆ. இராஜேந்திரன் (Veerapandi A. Rajendran) என்கிற வீரபாண்டி ராஜா (பிறப்பு 02 அக்டோபர், 1962-இறப்பு 02 அக்டோபர் 2021) என்பவர் இந்திய அரசியல்வாதியும், திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
குடும்பம்
தொகுவீரபாண்டி ஆ. இராஜேந்திரன் திராவிட முன்னேற்றக் கழக, சேலம் மாவட்ட முன்னணி நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனாவார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இவர் சேலம் மாவட்டம், வீரபாண்டியை அடுத்த பூலாவாரியைச் சார்ந்தவர்.[1] இவருக்குச் சாந்தி என்ற மனைவியும், மலர்விழி மற்றும் கிருத்திகா என இருமகள்களும் உள்ளனர்.[2]
சட்டமன்ற உறுப்பினராக
தொகு1982 முதல் திமுக உறுப்பினராகச் சேர்ந்த இவர், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வீரபாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராப் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக ஆனார்.[3] மீண்டும் 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இறப்பு
தொகுஇராஜேந்திரன் மாரடைப்பு காரணமாக 2021 அக்டோபர் 02 அன்று தனது இல்லத்தில் காலமானார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rajendran. A(DMK):Constituency- VEERAPANDI(SALEM) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-10-02.
- ↑ "சேலம் வீரபாண்டி ஆ.ராஜா காலமானார்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2021-10-02.
- ↑ "Veerapandi Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-02.
- ↑ "திமுக முன்னாள் எம்.எல்.ஏ வீரபாண்டி ராஜா மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்". Dailythanthi.com. 2021-10-02. பார்க்கப்பட்ட நாள் 2021-10-02.