வென் சியோயான்


வென் சியோயான் (Wen Xiaoyan) (பிறப்பு: 1978 நவம்பர் 11) [1] இவர் ஒரு சீன இணை ஒலிம்பிக் தடகள வீரராவார். [2] 2016 கோடைகால இணை ஒலிம்பிக்கில் சீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய இவர் இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.

வென் சியோயான்
தனிநபர் தகவல்
பிறப்பு1978 நவம்பர் 11
விளையாட்டு
நாடுசீனா
விளையாட்டுஇணை தடகளம்
மாற்றுத்திறன் வகைப்பாடுடி 37
நிகழ்வு(கள்)
பதக்கத் தகவல்கள்
மகளிர் இணை தடகளம்
நாடு  சீனா
இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2016 இரியோ டி செனீரோ நீளம் தாண்டுதல் டி37
தங்கப் பதக்கம் – முதலிடம் 2016 இரியோ டி செனீரோ மகளிர் 4 × 100 மீட்டர் ஓட்டம் டி35-டி38
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2016 இரியோ டி செனீரோ மகளிர் 400 மீட்டர் ஓட்டம் டி37
உலகப்போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2017 இலண்டன் உலக இணை தடகளப் போட்டிகள் மகளிர் நீளம் தாண்டுதல் டி37
தங்கப் பதக்கம் – முதலிடம் 2019 துபாய் உலக இணை தடகளப் போட்டிகள் மகளிர் 100 மீட்டர் டி37
தங்கப் பதக்கம் – முதலிடம் 2019 துபாய் மகளிர் 200 மீட்டர் ஓட்டம் டி37]]
தங்கப் பதக்கம் – முதலிடம் 2019 துபாய் மகளிர் நீளம் தாண்டுதல் டி37]]
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2019 துபாய் அனைத்துப் வகையினருக்குமான போட்டி

பெண்கள் நீளம் தாண்டுதல் டி 37 போட்டியில் தங்கப் பதக்கத்தையும், பெண்கள் 400 மீட்டர் டி 37 போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். [2] பெண்கள் 4 × 100 மீட்டர் ரிலே டி 35-டி 38 போட்டியில் ஜியாங் பென்பென், சென் ஜுன்பை , லி யிங்லி ஆகியோருடன் தங்கப் பதக்கம் வென்றார்.

ஐக்கிய இராச்சியத்தின் இலண்டனில் நடைபெற்ற 2017 உலக இணை தடகளப் போட்டிகளில் பெண்கள் நீளம் தாண்டுதல் டி 37 போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்ற 2019 உலக இணை தடகளப் போட்டிகளில் இவர் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். பெண்கள் 100 மீட்டர் டி 37, பெண்கள் 200 மீட்டர் டி 37 [3] மற்றும் பெண்கள் நீளம் தாண்டுதல் டி 37 போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றார். [4] 4 x 100 மீட்டர் ரிலே போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.

குறிப்புகள் தொகு

  1. "Xiaoyan Wang". Rio2016.com. Organizing Committee of the Olympic and Paralympic Games Rio 2016. Archived from the original on 2016-10-24.
  2. 2.0 2.1 "Xiaoyan Wen". paralympic.org. International Paralympic Committee. பார்க்கப்பட்ட நாள் 14 January 2020.
  3. O’Kane, Patrick (15 November 2019). "Kornobys and Cinnamo claim shot put gold as World Para Athletics Championships conclude". InsideTheGames.biz. https://www.insidethegames.biz/articles/1087073/shot-put-world-records-fall-in-dubai. 
  4. "Asia nations perform strongly at the Dubai 2019 World Para Athletics Championships". Asian Paralympic Committee. 18 November 2019. https://asianparalympic.org/news/1284/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வென்_சியோயான்&oldid=3027347" இலிருந்து மீள்விக்கப்பட்டது