வெப்பக் கெழு எண்

வெப்பக் கெழு எண் அல்லது வாண்ட் ஹோப் விதி தாவரங்கள் வளர்வதில் வெப்பத்தின் பங்கினை தெளிவாக விளக்கும் அளவைகள் ஆகும். தாவரங்களில் சுவாசித்தல், முளைத்தல், புரத இயல் மாற்றம் போன்ற செயல் முறைகளும், விரவுதல் போன்ற இயற்பியல் முறைகளும் வெப்பத்தினைச்சார்ந்து நடைபெறுகிறது. வெப்பம் அதிகமாகும் போது இச்செயல்களும் அதிகமாவது தெளிவான உண்மையாகும்.

வாண்ட் ஹோப் அல்லது கெழு எண் 10 அல்லது வெப்ப கெழு எண் என்பது ஒரு குறிப்பிட்ட வெப்பத்தில் ஒரு செயல் முறையின் அளவுக்கும், அவ் வெப்பத்தினை விட 10 டிகிரி செல்சியஸ் குறைவான நிலையில் இச்செயல் நிகழும் அளவுக்கும் உள்ள விகிதம் ஆகும். இதனை கர்டிஸ் மற்றும் கிளார்க் 1950 ஆம் ஆண்டு வரையறுத்தனர். ஒரு செயல் முறையானது 15 டிகிரி செல்சிஸ் வெப்பத்தில் நிகழுவதை விட 25 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 2.3 மடங்காக இருப்பின், வெப்பக் கெழு எண் 2.3 ஆகும்.

மேயர் மற்றும் ஆண்டர்சன் (1952) என்பவர்கள் இதனை, 10 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் நிகழுவதைப் போல் மிகுதியான வெப்ப அளவில் நிகழுவதன் மடங்காக இருக்கும் என்று வரையறுத்தனர். கெழு எண் = வெப்ப அளவு 2/ வெப்ப அளவு 1

பல்வேறு செயல்முறைகளில் 10 டிகிரி வெப்பம் வேறுபடும் இடைவெளிகளில் சரியாக அளவிடுவது எல்லா சூழலிலும் இயலாது. எனினும் சமன்பாட்டினைப் பயன்படுத்தி இருவேறு வெப்ப அளவுகளில் நிகழ்ந்த செயலின் அளவுகளிலிருந்து கெ.எ 10 ன் தோராயமான அளவுகளை அறியலாம்.

கெ .எண் 10 = (வி 2/வி 1) 10/வெப்ப அளவு 2 - வெப்ப அளவு 1

வி 2 = உயர்ந்த வெப்பத்தில் நிகழ்ந்த செயலின் அளவு வி 1 = குறைந்த வெப்பத்தில் நிகழ்ந்த செயலின் அளவு

பல்வேறு ஒளிச்சேர்க்கையினை ஆராய்ந்து பார்த்ததில் கெ .எண் 10 குறைவான போது, ஒளிக் கட்டத்துடன் ஒளிச்சேர்க்கை இணைந்துள்ளது என்றும், கெ .எண் 10 உயர்ந்த போது, இருண்ட கட்டத்தினைச் சார்ந்துள்ளது எனவும் அறியப்படுகிறது. உயிரினங்களில் செயலியல் வெப்ப அளவிற்கு மேல் நொதி ஊக்குவித்த வினைகள் எல்லாவற்றுக்கும், வேதியல் வினைகளைப் போன்றே கெழு எண் 10 செயல்படுவதாகும்.

மணலில் பல இனக்காய்கறிகள் முளைப்பதை ஆராய்ந்ததில், வெப்பம் குறைந்த போது கெ .எண் 10 ன் மதிப்பு உயர்ந்தும், வெப்பம் உயர்ந்த போது குறைந்தும் காணப்பட்டது. ஆனால் இவ்விதி செடியில் நிகழும் எல்லா செயல்பாடுகளுக்கும் பொருந்தாது. இவ்விதமான ஆராய்ச்சிகள் விவசாயத்துறையில் நேர்மறை மாற்றங்களை செயல்படுத்த வழிவகை செய்கிறது.

[1][2]

  1. வானியலும் ,வேளாண்மையும்.,பொறிஞர் .K .R .திரு வெங்கிடசாமி ஆகஸ்ட் 1997,ISBN :81-234-0314-3
  2. http://www.plantanswers.com/garden_column/june03/4.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்பக்_கெழு_எண்&oldid=3612468" இலிருந்து மீள்விக்கப்பட்டது