வெப்ப விரவல்திறன்

வெப்பவியலில், வெப்பப் பரிமாற்றம் குறித்த ஆய்வில், வெப்ப விரவல்திறன் (thermal diffusivity) என்பது வெப்பக் கடத்துதிறனை அடர்த்தியாலும், நிலையான அழுத்தத்தில் நிலவும் தன்வெப்பக் கொள்திறனாலும் வகுக்கும்போது கிடைப்பதாகும்.[1] அது ஒரு பொருளின் வெம்பிய பக்கத்தில் இருந்து குளிர்ந்த பக்கத்துக்கு மாறும் வெப்பத்தின் வேகத்தை அளக்கிறது. இதன் அலகு m²/s ஆகும். பொதுவாக வெப்ப விரவல்திறனை α என்னும் குறியைக் கொண்டு குறிப்பர் என்றாலும், a, κ,[2] K,[3] மற்றும் D இவையும் பயன்பாட்டில் உண்டு. இதன் வாய்பாடு:

இங்கே,

  • என்பது வெப்பக் கடத்துதிறன் (W/(m·K))
  • என்பது அடர்த்தி (kg/m³)
  • என்பது தன்வெப்பக்கொள்திறன் (J/(kg·K))

இரண்டும் சேர்ந்து கொள்ளளவு வெப்பக் கொள்திறன் ஆகும் (J/(m³·K)).

வெப்பச் சமன்பாட்டில் பார்த்தது போல[4],

,

வெப்ப விரவல்திறன் அதிகமிருக்கும் ஒரு பொருளில், வெப்பக் கடத்தல் விரைவாக நடைபெறும்.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Lide, David R., ed. (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ed.). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0. p. 2-65.
  2. Gladwell, Richard B. Hetnarski, M. Reza Eslami ; edited by G.M.L. (2009). Thermal Stresses - Advanced Theory and Applications (Online-Ausg. ed.). Dordrecht: Springer Netherlands. p. 170. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-9247-3. {{cite book}}: |first= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
  3. Unsworth, J.; Duarte, F. J. (1979), "Heat diffusion in a solid sphere and Fourier Theory", Am. J. Phys., 47 (11): 891–893, Bibcode:1979AmJPh..47..981U, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1119/1.11601
  4. Carslaw, H. S.; Jaeger, J. C. (1959), Conduction of Heat in Solids (2nd ed.), Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-853368-9
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்ப_விரவல்திறன்&oldid=2748391" இலிருந்து மீள்விக்கப்பட்டது