[1]  வெயில் என்பது இயற்கையின் பெரும் அருட்கொடையாகும். வெயிலின் உஷ்ண சக்தியை கொண்டே உலகம் இயங்குகின்றது. பனிக்காலம்,மழைக்காலம்,குளிர்க்காலம் இவைகளை விட உமைக்ம் வெயில் காலமே மிகவும் சிறந்தது. வெயில் நம் மீது படும்போதுதான் அதன் சக்தியை கிரகித்து நமது எலும்புகள் பலம் பெறுகின்றது. மூட்டுவலி உள்ளவர்களுக்கு வெயில் அருமருந்தாகும்.
  தொற்று நோய் பரவல் கடும் வெயிலின் மூலமாகவே கட்டுபடுத்தபடுகின்றது. பல காய்கள் வெயிலினாலேயே பழமாகின்றது. நமது உடலின் ரத்த ஓட்டம் வெயில் காலத்திலேயே அதிக அளவு உடலை சுற்றி வருகிறது.வெயிலின் சக்தியை கிரகித்தே மரங்கள் வளருகின்றன. மழைக்காலங்களில் குறைவான வளர்ச்சியையே மரங்கள் பெறுகின்றது. நீர் எந்தளவுக்கு விவசாயத்திற்கு முக்கியமோ அதே அளவு வெயிலின் உஷ்ண சக்தியும் மிகவும் அவசியமானது ஆகும்.
  வியர்வை எனும் அற்புதமான உடல் கழிவுகளை வெளியேற்றும் நிகழ்வு வெயில் காலத்திலேயெ அதிகம் நிகழ்ந்துநமது ஆரோக்கியத்தை உயர்த்துகிறது. இந்த வியர்வையின் மூலமாக சிறுநீரகங்களின் வேலை பளுவும் குறைந்து சிறுநீரகங்கள் பலம்பெறுவதும்,வெயிலினால்தான் நடைபெறுகின்றது.வெயிலை அனுபவியுங்கள். அத்துடன்  ஆரோக்கியத்தையும் அதிகரித்து கொள்ளுங்கள்.
 1. ன்
   
  
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெயில்&oldid=3086024" இருந்து மீள்விக்கப்பட்டது