வெய்யில்

வெய்யில் (இயற்பெயர்: வெயில்முத்து) தமிழ் நவீனக் கவிஞர். தமிழ் சிற்றிதழ்களிலும் வெகுசன இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருபவர். ‘கொம்பு’ எனும் சிற்றிதழின் ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தார். பெற்றோர்: பெருமாள் - தமிழ்செல்வி. மனைவி: பிரியா, மகள்: மாயா. தற்போது ‘ஆனந்த விகடன்’ குழும இதழில் பணிபுரிந்து வருகிறார்.

வெய்யில்,கவிஞர்,சென்னை

கவிதைத்தன்மை

நாட்டார் வாழ்வியல், சங்க இலக்கிய அழகியல், நவீன வாழ்வின் நெருக்கடி நிலை, கீழ்த்தட்டு மக்களின் அரசியல் என கலவையான பண்பில் இயங்கக்கூடியவை இவரது கவிதைகள்.

படைப்புகள்

 1. புவன இசை (மு.2009) அனன்யா பதிப்பகம்
 2. குற்றத்தின் நறுமணம் (மு.2011) - புதுஎழுத்து பதிப்பகம்.
 3. கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் .ஃப்ராய்ட் (டிச.2016) - மணல்வீடு பதிப்பகம்.
 4. மகிழ்ச்சியான பன்றிக்குட்டி (டிச.2017) - கொம்பு பதிப்பகம்.
 5. அக்காளின் எலும்புகள் (டிச.2018) - கொம்பு பதிப்பகம்

விருது

 1. இளம் கவிஞருக்கான களம்புதிது விருது (குற்றத்தின் நறுமணம்) (2015)
 2. சிறந்த சிற்றிதழுக்கான (கொம்பு) விகடன் விருது (2016)
 3. சிறந்த கவிதைத் தொகுப்பிற்கான விகடன் விருது (கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் .ஃப்ராய்ட்) (2017)
 4. சிறந்த கவிதைத் தொகுப்பிற்கான உயிர்மை (கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் .ஃப்ராய்ட்) - சுஜாதா அறக்கட்டளை விருது (2017)
 5. சிறந்த கவிதைத் தொகுப்பிற்கான தமிழ்நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழும விருது (மகிழ்ச்சியான பன்றிக்குட்டி) (2018)
 6. எஸ்.ஆர்.வி பள்ளியின் 2018ம் ஆண்டிற்கான ‘படைப்பூக்க’ விருது (2018)
 7. சிறந்த கவிதைத் தொகுப்புக்கான (மகிழ்ச்சியான பன்றிக்குட்டி) தமுஎகச விருது (2018)
 8. 2019ம் ஆண்டிற்கான சிறந்த கவிதை தொகுப்பிற்கான ஆதம்நாம் விருது "அக்காளின் எலும்புகள்"

வெளியிணைப்பு

https://www.youtube.com/watch?v=qZKw7kU3mkU

https://www.youtube.com/watch?v=YbX50pH60kg&t=43s

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெய்யில்&oldid=2783710" இருந்து மீள்விக்கப்பட்டது