வெர்புமோபில்

வெர்புமோபில் (Verbmobil) என்பது இடாய்ச்சுலாந்தின் நெடுங்காலத்திய மொழிசார் தொழில்நுட்ப (Language Technology) (குறிப்பாக இயந்திர மொழிபெயர்ப்பு) ஆய்வுத்திட்டம். இதன் குறிக்கோள் இடாய்ச்சு-ஆங்கிலம், இடாய்ச்சு-சப்பான் ஆகிய மொழிகளுக்கு இடையே இருபுறமாகவும் இயல்மொழி உரைகளை மொழிபெயர்ப்பதாகும் [1].

வெர்புமொபில் 1993 முதல் 2000 வரை இடாய்ச்சுலாந்தின் நடுவண் அரசின் ஆய்வு- தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஆய்வுநிதி உதவியால் வளர்த்தெடுக்கப்பட்டது. இடாய்ச்சுலாந்தின் நடுவணரசின் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் (Bundesministerium für Forschung und Technologie) பரணிடப்பட்டது 2009-09-06 at the வந்தவழி இயந்திரம் ஏறத்தாழ மொத்தம் 116 மில்லியன் இடாய்ச்சுமார்க்கு (ஏறத்தாழ 60 மில்லியன் யூரோ) முதலீடு செய்தது, இது மட்டுமல்லாமல் தொழிலக உடனுறுப்புகளான டைம்லர் கிரைசலர் (DaimlerChrysler) சீமென்சு Siemens_AG), பிலிப்ஃசு (Philips) போன்றவை கூடுதலாக 52 மில்லியன் இடாய்ச்சுமார்க்குகளும் (ஏறத்தாழ 26 மில்லியன் யூரோக்கள்) தந்து உதவின .

வெர்புமோபில்-2 செயற்திட்டத்தில், டியூபிங்கென் பல்கலைக்கழகம் (Tübingen University) அரைவழித் தானியிங்கியாய் செயற்படும் இடாய்ச்சு, ஆங்கிலம், சப்பான் மொழிகளுக்கிடையே இயல்பாய்ப் பேசும் மொழியை பேச்சிலிருந்தே மொழிபெயர்க்கும் திறன் கொண்டிருந்தது. TüBa-D/S[2] என்பதில் 38,000 சொற்றொடர்கள் அலல்து 360,000 சொற்கள். TüBa-E/S[3] என்பதில் ஏறத்தாழ 30,000 சொற்றொடர்கள் அலல்து 310,000 சொற்கள். TüBa-J/S[4] என்பதில் ஏறத்தாழ 18,000 சொற்றொடர்கள் அல்லது 160,000 சொற்கள்.

குறிப்புகள்

தொகு
  1. DFKI Verbmobil: Translation of Spontaneous Speech German Artificial Intelligence Research Institute - short Verbmobil description
  2. TüBa-D/S பரணிடப்பட்டது 2011-07-19 at the வந்தவழி இயந்திரம் Tübingen Treebank of German / Spontaneous Speech
  3. TüBa-E/S பரணிடப்பட்டது 2011-07-19 at the வந்தவழி இயந்திரம் Tübingen Treebank of English / Spontaneous Speech
  4. TüBa-J/S பரணிடப்பட்டது 2011-07-19 at the வந்தவழி இயந்திரம் Tübingen Treebank of Japanese / Spontaneous Speech

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெர்புமோபில்&oldid=3229234" இலிருந்து மீள்விக்கப்பட்டது