வெற்றி நாள் (மே 9)
வெற்றி நாள் (Victory Day[a 1] 1945 ஆம் ஆண்டில் நாட்சி செருமனியின் சரணடைதலை நினைவுகூரும் விடுமுறை நாள் ஆகும். 1945 மே 8 மாலையில் (மாஸ்கோ நேரம் மே 9 நள்ளிரவிற்குப் பின்னர்) செருமனி சரணடைந்தமை கையெழுத்திடப்பட்டதை அடுத்து, சோவியத் ஒன்றியத்தின் 15[1] குடியரசுகளால் இந்நாள் முதன் முதலில் நினைவுகூரப்பட்டது. சோவியத் அரசு பெர்லினில் கையெழுத்திடும் விழா முடிவடைந்தவுடன் அதனை மே 9 அதிகால அறிவித்தது.[2] 1945 ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், 1965 ஆம் ஆண்டிலேயே இந்நாள் தொழிலாளர் அல்லாத அனைவருக்குமான விடுமுறை நாளாக சில சோவியத் குடியரசுகளில் மட்டுமே அறிவிக்கப்பட்டது.
வெற்றி நாள் Victory Day | |
---|---|
மாஸ்கோவில் 2005 மே 9 இல் வெற்றி நாள் கொண்டாட்டங்கள் | |
அதிகாரப்பூர்வ பெயர் | உருசியம்: День Победы[a 1] |
கடைபிடிப்போர் | உருசியா, முன்னாள் சோவியத் நாடுகள், செர்பியா, இசுரேல், முன்னாள் வார்சா உடன்பாடு நாடுகள் |
நாள் | 9 மே |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
தொடர்புடையன | வெற்றி நாள் (ஐரோப்பா) |
கிழக்கு செருமனியில், மே 8 வெற்றி நாள் 1950 முதல் 1966 வரை கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1985 இல் 40-வது நிறைவு நாள் கொண்டாடப்பட்டது. 1975 இல், சோவியத் முறையிலான "வெற்றி நாள்" மே 9 இல் கொண்டாடப்பட்டது. 2002 முதல், செருமனியின் மெக்லென்பூர்க்-வோர்போமர்ன் மாநிலம் தேசிய சோசலிசத்தில் இருந்து விடுதலை நாளாகவும் இரண்டாம் உலகப் போர் முடிவு நாளாகவும் கொண்டாடி வருகிறது.[3]
1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு உருசியக் கூட்டமைப்பு உருவானதில் இருந்து மே 9 ஐ அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது. இந்நாள் ஒரு வார இறுதியில் வந்தாலும், இதனை வேலை செய்யாத நாளாகவே கருதுகிறது (அதன் பின் வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை நாளாகும்).
இவற்றையும் பார்க்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 உருசியம்: День Победы, ஜென் பபியெதி
உக்ரைனியன்: День Перемоги, ஜென் பெரிமோகி
பெலருசிய மொழி: Дзень Перамогі, சியென் பியெரமோகி
உசுபேகியம்: Gʻalaba kuni, காலபா கூனி
காசாக்கு மொழி: Жеңіс Күні, செனிசு கூனி
சியார்சிய: გამარჯვების დღე, கமார்சுவேபிசு ஜே
அசர்பைஜான்: Qələbə Günü, கலாபா கூனூ
மல்தோவியம்: Ziua Victoriei, சீயா விக்தோரிய்
இலத்துவிய: Uzvaras diena, உசுவாராசு தியெனா
கிர்கீசியம்: Жеңиш майрамы, செங்கிசு மைராமி
தாஜிக்: Рӯзи Ғалаба, ரூசி கலாபா
ஆர்மீனியம்: Հաղթանակի օրը, ஹாத்தானாக்கி ஓரி
துருக்மேனியம்: Ýeňişlar Harçlaarsiň, யோனிசுலார் கார்சிலார்சின்
எசுத்தோனிய மொழி: Võidupüha ("வெற்றி விடுமுறை")
தத்தாரியம்: Cyrillic Җиңү көне, Latin சீனு கோனி
மேற்கோள்கள்
தொகு- ↑ 1945 மே 8 இல் சோவியத் ஒன்றியத்தில் 15 குடியரசுகள் இருந்தன. 1956 இல் கரேலோ-பின்லாந்து குடியரசு கலைக்கப்பட்டது.
- ↑ Earl F. Ziemke, 1990, Washington DC, CENTER OF MILITARY HISTORY, CHAPTER XV:The Victory Sealed Page 258 last 2 paragraphs
- ↑ "Gesetz über Sonn- und Feiertage des Landes Mecklenburg-Vorpommern". Mv.juris.de. Archived from the original on 20 June 2012. பார்க்கப்பட்ட நாள் 15 July 2012.
வெளி இணைப்புகள்
தொகு- Major photos period of time
- விக்கிமூலத்தில் German Instrument of Surrender (7 May 1945) பற்றிய ஆக்கங்கள்
- விக்கிமூலத்தில் German Instrument of Surrender (8 May 1945) பற்றிய ஆக்கங்கள்
- Interactive map of the Great Patriotic War between the USSR and Nazi Germany
- 9 мая, 1991 год, Алма-Ата
- The Russian evening newscast featuring the celebrations of the 50th anniversary of V-E Day in Russia on C-SPAN
- [1]
- [2]