வெலொனிய வென்டிரிகோசா

வெலொனிய வென்டிரிகோசா
Valonia ventricosa
உயிரியல் வகைப்பாடு
திணை:
விரிடிபிளான்டே
தொகுதி:
குளோரோபைட்டா
வகுப்பு:
உல்வோபைசியே
வரிசை:
கிளாடோபோரேல்
குடும்பம்:
வெலொனியாசி
பேரினம்:
வெலொனியா
இனம்:
வெ.வென்டிரிகோசா
இருசொற் பெயரீடு
வெலொனியா வென்டிரிகோசா
யே.அகார்து 1887[1]
வேறு பெயர்கள்

'வென்டிரிகேரியா வென்டிரிகோசா

வெலொனியா வென்டிரிகோசா (Valonia ventricosa) குமிழி பாசி எனவும் மாலுமிகளின் கருவிழிகள் என்றும் அழைக்கப்படும் ஒருவகை பாசியினமாகும்.[2] வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் உலகெங்கிலும் உள்ள கடல்களில் கடற்பாசி தாவரமாகக் காணப்படுகிறது. மிகப்பெரிய ஒற்றை-உயிரணு உயிரினங்களில் இதுவும் ஒன்றாகும்.[2][3].

பண்புகள்

தொகு

வெலொனிய வென்ட்ரிகோசா பல உட்கருக்களும் குளோரோபிளாசுட்டுகளும் கொண்ட சினோசைட்டு கட்டமைப்பு கொண்ட பாசியாகும். இவ்வுயிரினம் ஒரு பெரிய மைய வெற்றிடத்தைக் கொண்டுள்ளது, இவ்வெற்றிடம் பன்முகக் கட்டமைப்பு கொண்டது (ஒரு மைய கோளப் பகுதியிலிருந்து வெளியேறும் சிறுவட்டங்கள்).

செல் முழுவதும் பல சைட்டோபிளாசுமிக் களங்கள் உள்ளன. ஒவ்வொரு களத்திலும் ஒரு உட்கருவும் சில குளோரோபிளாசுட்டுகளும் உள்ளன. சைட்டோபிளாச களங்கள் அனைத்தும் நுண்குழல்களின் உதவியால் சைட்டோபிளாச பாலங்கள் மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. செல் சுவரால் மூடப்பட்டிருக்கும் புற சைட்டோபிளாச சவ்வு சுமார் 40 நானோ மீட்டர் தடிமன் கொண்டது.

வெலொனிய வென்ட்ரிகோசா பொதுவாக தனித்தனியாக வளர்கிறது. ஆனால் அரிதான நிகழ்வுகளில் அவை குழுக்களாகவும் வளர்கின்றன.

சுற்றுச்சூழல்

தொகு

கரீபியா, புளோரிடாவின் வடபகுதி, பிரேசிலின் தென்பகுதி, இந்தோ-பசிபிக் போன்ற வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலப் பிரதேசங்களின் அலைமண்டலப் பகுதிகளில் இவை காணப்படுகின்றன.[4]. ஒட்டு மொத்தத்தில் உலகெங்கிலும் கிட்டத்தட்ட ஒவ்வொரு கடலிலும் இவை வாழ்கின்றன.[5]. பெரும்பாலும் குறிப்பாக பவளப்பாறைகளில் வாழ்கின்றன.[6] சுமார் 80 மீட்டர் அல்லது 260 அடி கடல் ஆழத்தில் இவை வளரக்கூடியவையாகும்.

உடலியக்கவியல் மற்றும் இனப்பெருக்கம்

தொகு

ஒற்றை-செல் உயிரினம் கோளவடிவிலிருந்து முட்டைவடிவம் வரையிலான வடிவங்களைக் கொண்டிருக்கிறது. நீரில் நீலம் அல்லது கருப்பு நிறமாகத் தோன்றினாலும் லேசான பச்சை நிறத்தில் இருந்து இருண்ட பச்சை நிறம் வரை வேறுபடுகிறது.[4] நிறமானது இதன் குளோரோபிளாஸ்டின் அளவால் தீர்மானிக்கப்படுகிறது.[6] செல் மேற்பரப்பு கண்ணாடியைப் போன்று ஒளிர்கிறது. இதன் உடலம் அல்லது தலசு (thallus), மெல்லிய சுவருடன், கடினமான, பல உட்கருகொண்ட, 1 முதல் 4 சென்டிமீட்டர் (0.4 முதல் 1.6 அங்குலம் வரை) வரையான விட்டமுடைய செல்லைக் கொண்டுள்ளது. ஆனால் அரிதான சந்தர்ப்பங்களில் 5.1 சென்டிமீட்டர் (2.0 அங்குலம்) வரையான விட்டமும் கொண்டிருக்கலாம். "குமிழி" ஆல்கா நார்த்திசுக்களுக்கு ரைசாய்ட்ஸ் மூலம் இணைக்கப்படுகிறது.[4]

இனப்பெருக்கம்

தொகு

உயிரணுப் பிரிவினால் இனப்பெருக்கம் நிகழ்கிறது. அங்கு பலகருக்களை உடைய தாய்செல்கள் சேய் உயிரணுக்களை உருவாக்குகிறது. மேலும் தனித்தனியான ரைசாயிடுகள் புதிய குமிழ்களை உருவாக்குகின்றன. இது தாயின் செல்லிருந்து தனித்தனியாக பிரிகின்றன.

ஆய்வுகள்

தொகு

வெலொனிய வென்டிரிகோசாவின் செல்கள் மிகவும் அசாதாரணமாக பெரிதாக இருப்பதால் அவை உயிரியல் சவ்வுகள் முழுவதும் நீர் மற்றும் நீரில் கரையக்கூடிய மூலக்கூறுகளின் பரிமாற்றத்தைப் படிப்பதற்கான வசதியான பொருளாக இருக்கின்றது.

ஆஸ்மாசிஸ் மற்றும் சவ்வுடு பரவல் ஆகிய வகைகளில் உள்ள ஊடுருவலின் பண்புகள் ஒரே மாதிரியாக இருப்பதாகவும், யூரியா மற்றும் ஃபார்மால்டிஹைட்டு மூலக்கூறுகளுக்கு எந்த விதமான தேவையற்ற நீர் நிரப்பப்பட்ட துளைகளும் சவ்வு வழியாக செல்ல தேவைப்படவில்லை.[4][7][8] செல்லுலோசின் கட்டமைப்பைப் பற்றி படிப்பதற்கும், உயிரிய கட்டமைப்புகளில் அதன் நோக்குநிலையை ஆராயவும் லொனிய வென்டிரிகோசா விரிவான X- கதிர் பகுப்பாய்வு முறைகளுக்கு உட்பட்டுள்ளது.[9] சுற்றியுள்ள கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில் அதன் அசாதாரணமான உயர் மின் அழுத்தம் காரணமாக, அதன் மின்சார பண்புகளுக்காக இது ஆய்வு செய்யப்பட்டுள்ளது.[10]

சான்றுகள்

தொகு
  1. "Valonia ventricosa J. Agardh". ITIS. பார்க்கப்பட்ட நாள் 27-08-2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 Bauer, Becky (October 2008). "Gazing Balls in the Sea". All at Sea. Retrieved 26 September 2013.
  3. John Wesley Tunnell; Ernesto A. Chávez; Kim Withers (2007). Coral reefs of the southern Gulf of Mexico. Texas A&M University Press. p. 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58544-617-3.
  4. 4.0 4.1 4.2 4.3 Bauer, Becky (October 2008). "Gazing Balls in the Sea". All at Sea. Retrieved 26 September 201
  5. "Valonia ventricosa J.Agardh", Algaebase, பார்க்கப்பட்ட நாள் 4 September 2015
  6. 6.0 6.1 Lee, Robert Edward (2008). "Siphonoclades". Phycology. Cambridge University Press. p. 189. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-68277-0. பார்க்கப்பட்ட நாள் 27 August 2010.
  7. Thellier, M. (1977). Échanges ioniques transmembranaires chez les végétaux. Publication Univ Rouen Havre. p. 341. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-222-02021-9. Jump up ^
  8. Gutknecht, John (1967). "Membranes of Valonia ventricosa: Apparent Absence of Water-Filled Pores". Science Magazine. pp. 787–788. Retrieved 10 September 2014.
  9. Astbury, W.T; Marwick, T. C.; Bernal, J. D. (1932). "X-Ray Analysis of the Structure of the Wall of Valonia ventricosa.--I". Proceedings of the Royal Society of London. Series B. 109 (764): 443. doi:10.1098/rspb.1932.0005.
  10. Thellier, M. (1977). Échanges ioniques transmembranaires chez les végétaux. Publication Univ Rouen Havre. p. 341. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-222-02021-9.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெலொனிய_வென்டிரிகோசா&oldid=3915674" இலிருந்து மீள்விக்கப்பட்டது