வெளிமறை வெப்பம்

வெளிமறை வெப்பம் (External latent heat) என்பது நீர்ம நிலையிலுள்ள ஒரு பொருள் அதன் கொதிநிலையில் ஆவியாகும் போது ஏற்கும் மறை வெப்பத்தின் ஒரு பகுதியாகும். எடுத்துக் காட்டிற்காக, நீரின் மறைவெப்பம் 2268 J/கி என்று அறிவோம். இதில் ஒரு பகுதி நீர் ஆவியாகும் போது புற அழுத்தத்திற்கு எதிராக வேலை செய்வதில் செலவிடப்படுகிறது. இவ்வேலையின் வெப்பச் சமன் அளவு 168 J/கி ஆகும். இவ்வெப்பம் வெளிமறை வெப்பம் எனப்படுகிறது. மீதமுள்ள 2160 J/கி, நீரின் உள் ஆற்றலை அதிகரிக்கப் பயன்படுகிறது. இது உள்மறை வெப்பம்(Internal latent heat) எனப்படுகிறது.

உசாத்துணை

தொகு
  • Dictionary of science- English language book society
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளிமறை_வெப்பம்&oldid=3909011" இலிருந்து மீள்விக்கப்பட்டது