வெளியில் மிதக்கும் கூரை சேமிப்புத் தொட்டி

வெளியில் மிதக்கும் கூரை சேமிப்புத் தொட்டிகள் (External floating roof tank) என்பன பொதுவாக கச்சா எண்ணெய், பெட்ரோலிய பொருட்களை அதிக அளவில் சேமிக்க பயன்படுத்தப்படும் சேமிப்பு தொட்டிகள் ஆகும். இதில் நிலையான கூரை இல்லை. ஒரே ஒரு மிதக்கும் கூரை மட்டுமே உள்ளது. இந்த மிதக்கும் கூரை திரவ மட்டத்திற்கு ஏற்ப உயரவும் மற்றும் தாழவும் செய்யும். இந்த வகை சேமிப்புத்தொட்டிகள் காற்றுடன் தொடர்புகொள்வது குறைவு என்பதால் ஆவியாதல் முழுவதும் குறைக்கப்படுகிறது. இந்த மிதக்கும் கூரையின் கால்கள் தொட்டியின் கீழ் பகுதியை அடைந்த உடன், திரவத்தின் அளவு மிதக்கும் கூரைக்கு கீழே உள்ள போது, கூரைக்கும் திரவத்தின் மேற்பகுதிக்கும் இடையில் காற்று இடைவெளி மற்ற தொட்டிகளைப் போல உருவாகும் வாய்ப்புள்ளது.

வெளியில் மிதக்கும் கூரை சேமிப்புத் தொட்டி)

வெளி இணைப்புகள் தொகு