வெளியுறவுத் துறை அமைச்சகம் (இந்தியா)

வெளியுறவுத் துறை அமைச்சகம் (Ministry of External Affairs) என்பது இந்தியாவின் சார்பாக வெளிநாடுகளுடன் உறவை செயல்படுத்தும் இந்திய அரசின் அமைச்சகங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் சபையில் பங்கேற்கிறது. வெளிநாட்டு அமைப்புகள் மற்றும் அரசுகள் சார்ந்த விசயங்களில் மாநிலங்களுக்கும், இந்திய அரசிற்கும் இவ்வமைச்சகமே ஆலோசனைகள் வழங்குகிறது. ஜன் பத் மற்றும் மௌலானா ஆசாத் சாலையின் சந்திப்பிலுள்ள ஜவகர் பவன் இதன் தலைமை அலுவலகமாகும்.

வெளியுறவுத் துறை அமைச்சகம்
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்ஜவகர் பவன், புது தில்லி
வலைத்தளம்www.mea.gov.in/

வரலாறு

தொகு

வெளிநாட்டு ஐரோப்பிய சக்திகளுடன் வணிகம் செய்ய 1783 செப்டம்பர் 13ல் பிரித்தானிய அரசு ஆளுநரான வாரன் ஹாஸ்டிங்கால் கல்கத்தாவில் முதன்முதலாக வெளிநாட்டுத் துறை ஆரம்பிக்கப்பட்டது[1] பின்னர் 1843ல் நிர்வாக சீர்திருத்தத்திற்குப் பிறகு இத்துறை வணிகம் மட்டுமல்லாது இதர இராசதந்திரங்களுக்கும் பயன்படுத்தப்பட்டது. இந்திய அரசு சட்டம், 1935ன் படி வெளிநாட்டுத் துறை, வெளிநாடுகளுடன் உறவை வளர்க்கும் வெளியுரவுத் துறையாக மாற்றப்பட்டது. 1946, இந்திய சுதந்திர காலகட்டத்தில் இந்தியாவின் இராஜதந்திர மற்றும் வணிக பிரதிநிதித்துவ தூதரகராக இத்துறை பரிணாமித்தது. சுதந்திரத்திற்குப்பிறகு 1947ல் புதிய வெளியுறவுத் துறை அமைச்சகமாக உருமாறியது. 1948ல் முதல் இந்தியக் குடியியல் பணி அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு இந்திய வெளிநாட்டுப் பணி(IFS) அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

பணிகள்

தொகு

இந்தியாவின் பிரதிநிதியாக இவ்வமைச்சகம் பலநாடுகளில் பலதரப்பட்ட விசயங்களில் பங்கெடுக்கிறது. இந்தியாவின் அரசியல் மற்றும் வணிகக் கூட்டுறவு, வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு, கலாச்சாரம், செய்தித்தொடர்பு, ஊடகத்தொடர்பு என பல்துறை ஊடகமாக விளங்குகிறது. அமைச்சகத்தின் சார்பாக வெளிநாடுகளில் இந்திய வெளிநாட்டுப் பணி அதிகாரிகள் இந்திய தூதரகங்களில் செயல்படுகிறர்ர்கள். அவர்களின் முக்கிய பணிகள் பின்வருவன

  1. ஐநா போன்ற பன்னாட்டு அமைப்புகளில் இந்தியாவின் சார்பாக தூதராகவும், உயர்நிலை குழுவாகவும், அலோசகதாரராகவும் விளங்குதல்.
  2. அதிகாரிகளின் நாட்டில் இந்தியாவின் தேசிய நலன்களை பாதுகாத்தல்
  3. புதிதாக வருபவர்களுக்கும், அந்நாடு வாழ் இந்தியர்களுக்கும் அந்நாட்டுடனான சுமூக உறவை வளர்த்தல்
  4. இந்தியக் கொள்கைகளுக்குட்பட்டு, அந்நாட்டின் வளர்ச்சிகளைப் பற்றி அறியத்தருதல்.
  5. அந்நாட்டு அதிகார ஒப்பந்தங்களுடன் பல்வேறு விசயங்களில் பேச்சுவார்த்தை நடத்தல்
  6. வெளிநாட்டினருக்கும், வெளிநாட்டிற்கு வந்த இந்தியரருக்கும் தூதரக வசதியை ஏற்படுத்தல்

உள்நாட்டில், அனைத்துவித வெளியுறவுகள் தொடர்புகளுக்கும் இவ்வமைச்சகமே பொறுப்பாகும். எல்லைப்பிரிவு மற்றும் செயல்பாட்டுப் பிரிவு என்ற இருபிரிவுகள் உள்ளன. இருநாடுகள் சார்ந்த அரசியல் மற்றும் பொருளாதார விசயங்களை எல்லைப்பிரிவு கையாளும். பலதரப்பட்ட அமைப்புக்கள், மதக்குழுக்கள், சட்ட விசயங்கள், ஆயுதக்குறைப்பு, தூதரகம், இந்திய புலம்பெயர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம், நிர்வாகம் மற்றும் பிற அம்சங்கள் எல்லாம் செயல்பாட்டுப் பிரிவு கவனிக்கிறது.

இவற்றையும் பார்க் க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. இந்திய வெளிநாட்டுப் பணி