வேடல் ஆன்மிக அருங்காட்சியகம்

வேடல் ஆன்மிக அருங்காட்சியகம் என்பது தமிழ்நாட்டின், காஞ்சிபுரம் மாவட்டம், வேடலில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் காஞ்சி சங்கர மடத்தால் அமைக்கப்பட்டுள்ள ஒரு ஆன்மீக அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகத்தை அடையாளம் காட்டும்விதமாக தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பார்த்தால் மிகப் பெரிய சிவன் சிலைவடிவும், அதற்கு இணையாகப் பெரிய நந்தி சிலையும் அருங்காட்சியகத்தின் முகப்பின் அடையாளச் சின்னங்களாக உள்ளன. இதிலிருந்து ஒரு கி.மீ தூரம் உள்ளே சென்றால், இந்த அருங்காட்சியகம் விரிந்து பரந்து காணப்படுகிறது. இதன் உள்ளே மிகப் பெரிய அரங்கில் இராமாயணம், மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு உட்பட இதிகாச புராணங்களில் உள்ள நிகழ்வுகள், வரிசையாக அமைக்கப்பட்ட மாடங்கள்தோறும் மின்சாரத் தானியங்கி பொம்மலாட்ட அசைவுகளுடன் அச்சுஅசலாக அமைக்கப்பட்டு விவரிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த அருங்காட்சியகத்தில், காஞ்சி மடாதிபதி சந்திரசேகர சரசுவதி சுவாமிகள் பயன்படுத்திய பொருட்கள், பார்வையாளர்கள் தொடாமல் காணும் வகையில் கண்ணாடி அறைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தை பார்க்க அனுமதி இலவசம். விடுமுறையின்றி இயங்கும் இந்த அருங்காட்சியகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். [1]

மேற்கோள்கள்தொகு

  1. "வேடலில் ஓர் ஆன்மிக அருங்காட்சியகம்". கட்டுரை. தி இந்து (2017 ஏப்ரல் 20). பார்த்த நாள் 22 ஏப்ரல் 2017.